விஜய் இடம் யாருக்கு? சிவா ரசிகர்கள் மோதல்! ‘கோட்’ 500 கோடியை தாண்டுமா?
சென்னை: 'கோட்’ திரைப்படம் 'லியோ’ வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது பற்றி ஒரு தெளிவான கணக்கைப் போட்டு விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
விஜய் அரசியல் மாநாடு, கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் முறையான பதிவு என்ற செய்திகளால் 'கோட்’ பற்றிய செய்திகள் அதிகம் வெளியே வரவில்லை. விஜய்யை திமுக முடக்கப்பார்க்கிறதா? தவெக வரும் 2026 தேர்தலில் திமுக, அதிமுக என்ற எதிரும் புதிருமான அரசியலை உடைத்துவிட்டு 2வது இடத்திற்கு விஜய் முன்னேறிவிடுவாரா? எனப் பல விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால், இணைய உலகில் இன்னொரு பக்கம் விஜய் இடம் அடுத்து யாருக்கு என்ற ஒரு போட்டி நடந்துவருகிறது. அந்த இடத்தை சிவகார்த்திகேயனுக்கு விஜய் 'கோட்’ படத்தில் உள்ள ஒரு காட்சி மூலம் மக்களிடம் ஒரு செய்தியாகச் சொல்லிவிட்டார் என்றும் அடித்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் விஜய்க்கு அடுத்து அந்த இடம் சிவாவுக்கு கிடைக்குமா? அதேபோல 'லியோ’ வசூலை 'கோட்’ முறியடிக்குமா போன்ற கேள்விகளுக்கு தயாரிப்பாளரும் விமர்சகருமான தனஞ்செயன் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் இது பற்றிப் பேசியுள்ள ஒரு பேட்டியில் “இதுவரை விஜய் என்றால் அவர் டான்ஸ் பண்ணுவார், ஃபைட் பண்ணுவார், என்டர்டெயின்மென்ட் பண்ணுவார் என்பதை நாம் பார்த்திருந்தோம்.
ஆனால், இந்த 'தி கோட்’ படத்தில் நல்லா எமோஷனாக நடித்திருக்கிறார். பல வருடங்கள் முன்னால் வெளியான காதலுக்கு மரியாதை படத்தில் எமோசன் கேரக்டர் பண்ணி இருந்தார். இந்த வரிசையில் 'கத்தி’யை சொல்லலாம். இந்தப் படத்தில் வரும் ஜீவா கேரக்டரை மறக்கவே முடியது. அதை விஜய்யிடமே நான் நேரில் சொல்லி இருக்கிறேன். அப்படி சில படங்களைத்தான் சொல்ல முடியும். ஆக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு எமோஷன் ஆக்டிங்கில் விஜய்யைப் பார்ப்பது பிடித்திருந்தது.
ஆனால், அதில் சோகம் என்னவென்றால் இன்னும் ஒரு படத்தோடு விஜய் நடப்பதை நிறுத்தப் போகிறார். அது வருத்தமாக இருக்கிறது. பார்ப்போம், மீண்டும் அவர் ஒருவேளை சினிமாவுக்கு வருவார். பவன் கல்யாண் அரசியலுக்குப் போன பிறகு மீண்டும் நடிக்க வந்தார். அப்படித்தான் சிரஞ்சீவி வந்தார். ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ் சினிமா சிறப்பான ஒன்றை இழக்கப் போகிறது. அவருடைய இடத்தை நிரப்ப சில ஆண்டுகள் கூட ஆகலாம்” என்றவர் 'கோட்’ படத்தில் சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கி தருவதைப் போன்று ஒரு காட்சி வைக்கப்பட்டுள்ளது.
அதை வைத்து தனக்கு அடுத்து சினிமா அவர்தான் இருக்கப் போகிறார் என விஜய் மறைமுகமாகச் சொல்லி இருக்கிறார் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அந்த ரசிகர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக தனஞ்செயன் ஒரு கருத்து கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு தொழிலதிபர் தனக்குப் பின் தனது வாரிசுக்கு அவரது கம்பெனியை கொடுத்துவிட்டுப் போகலாம். அரசியலில் கூட தனது கட்சியை தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டுப் போகலாம். சினிமாவில் அது நடக்காது. சிவகார்த்திகேயன் திறமையானவர்தான். ஆனால், அந்த இடத்தை அவருக்கு மக்கள்தான் தரமுடியும். விஜய் துப்பாக்கியைக் கொடுத்ததால் அது நடந்துவிடாது.
அந்தக் குறிப்பிட்ட காட்சியைத் திட்டமிட்டு வெங்கட் பிரபு வைத்தாரா எனத் தெரியவில்லை. எஸ்கேவின் ரசிகர்கள் அதை அவர்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு விளக்கத்தை எடுத்துக் கொண்டுள்ளார்கள். அதில் தவறு இல்லை. ஆனால், உண்மையாக இந்த இடத்தை மக்கள் எஸ்கேவுக்கு கொடுக்க வேண்டும். அதை நானோ நீங்களோ முடிவு செய்ய முடியாது” என்று பேசியுள்ளார்.
அடுத்து 'கோட்’ வசூல் பற்றி பேசிய அவர், “முன்பு வெளியான விஜய்யின் 'லியோ’ மொத்தம் 560 கோடி வசூல் செய்தது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். அந்தத் தொகையை 'கோட்’ முறியடிக்குமா என்பதுதான் கேள்வி. ’லியோ’ முதல் நாள் 146 கோடி வசூல் செய்தது. அதை அப்படியே நான்கினால் பெருக்கினார் கிட்டத்தட்ட 560 கோடி வந்தது. ’கோட்’ முதல் நாள் 166 கோடி வசூல். இதை அப்படியே நான்கால் பெருக்கினால் 664 கோடி வரும்.
’கோட்’ வெளியான நாள் முதல் இன்று திங்கட் கிழமை வரை ஹவுஸ்ஃபுல். விநாயகர் சதுர்த்தி, ஞாயிற்றுக் கிழமை எனத் தொடர் விடுமுறை வேறு. டிக்கெட் கிடைக்கவே இல்லை. அப்படிப் பார்த்தால் கட்டாயம் 500 கோடிக்கும் மேல் வசூல் வந்துவிடும். அப்படிப் பார்த்தல் 'லியோ’ சாதனையைச் சாதாரணமாக முறியடித்துவிடும். இதுதான் சிம்பிள் லாஜிக்” என்கிறார்












Click it and Unblock the Notifications