புறக்கணிப்பு! ஏமாற்றம்! இவ்வளவு வயசுலயும்.. டிஎன்பிஎல்லில் கலக்கிய "எஸ்ஆர்எம்" புயல்.. மாஸ் பதிலடி!
சென்னை: நடந்து வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் கோவை அணிக்காக ஆடும் வீரர் ஒருவர் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார். இவருக்கு இந்திய தேசிய அணியில், ஐபிஎல் அணிகளில் இதனால் வாய்ப்பு கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த வருடமும் ஒவ்வொரு போட்டியும் சுவாரசியமாக அமைந்துள்ளது.
டிஎன்பில் போட்டிகள் காரணமாக நிறைய தமிழ்நாடு வீரர்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளனர். இந்தியாவில் தற்போது பிரபலமாக இருக்கும் மாநில லீக் ஆட்டம் என்றால் அது டிஎன்பிஎல் ஆட்டம்தான்.

தமிழ்நாடு வீரர்கள்
ஐபிஎல் போட்டிகளில் தமிழ்நாடு வீரர்கள் பலர் ஆட காரணமாக டிஎன்பிஎல் போட்டிகள் அமைந்துள்ளன. இந்த வருட சீசனில் முதல் போட்டியே சூப்பர் ஓவர் வரை சென்று அதிரடியாக அமைந்தது. தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் இருக்கும் சிறப்பான வீரர்கள் தேசிய அளவில் கவனம் பெற இந்த டிஎன்பிஎல் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த தொடரில் தமிழ்நாட்டு வீரர்கள் இன்று வேறு மாநில வீரர்கள் சிலரும் ஆடி வருகிறார்கள்.

தமிழ்நாடு அணி
அதாவது தமிழ்நாட்டில் படித்து, தமிழ்நாட்டில் பதிவு செய்து, நம் மாநிலத்திற்கு அணிக்கு ஆடும் வேற்று மாநில வீரர்கள் சிலர் டிஎன்பிஎல் தொடரிலும் வாய்ப்பு பெற்றுள்ளனர். அப்படி வாய்ப்பு பெற்ற ஒருவர்தான் அபிஷேக் தன்வர். குஜராத்தை சேர்ந்த இவர் முதலில் அண்டர் 12 சவுராஷ்டிரா அணிக்கும், அண்டர் 19 ஹரியானா அணிக்கும் ஆடினார். அதன்பின் தமிழ்நாட்டிற்கு படிக்க வந்தவர், எஸ்ஆர்எம் பல்கலையில் சேர்ந்தார்.

பதிவு
இதன்பின் தமிழ்நாட்டு கிரிக்கெட் கிளப்பில் பதிவு செய்த அபிஷேக் தன்வர் இப்போது தமிழ்நாடு அணியில் ஆடி வருகிறார். 2016ம் ஆண்டே இவர் தமிழ்நாடு அணிக்காக சையது முஸ்தாக் கோப்பை தொடரில் அறிமுகம் ஆனார். அதேபோல் 2018ல் அபிஷேக் தன்வர் ரஞ்சி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணிக்காக ஆடினார். இதில் கவனம் ஈர்த்தவர் 2019ல் லிஸ்ட் ஏ போட்டிகளில் அறிமுகம் ஆனார். தமிழ்நாட்டிற்காக 2019ல் விஜய் ஹசாரே தொடரிலும் அறிமுகம் ஆனார்.

யார் இவர்?
வலது கை வேகப்பந்து வீச்சாளரான அபிஷேக் தன்வர். தற்போது டிஎன்பிஎல் தொடரில் மிக சிறப்பாக ஆடி வருகிறார். பல வருடமாக தமிழ்நாடு அணியில் இவர் முதல் தர போட்டிகளில் மிக நன்றாக ஆடினார். ஆனாலும் இவரை தேசிய அளவில் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஐபிஎல் ஏலத்தில் கூட இவரை அணிகள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நன்றாக அவ்வப்போது பேட்டிங் செய்தும் கூட அபிஷேக் தன்வரை பெரிதாக தேசிய அளவில் யாரும் கண்டுகொள்ளவில்லை.

வேகப்பந்து
இந்த சீசனில் அபிஷேக் தன்வர். தனது பவுலிங் வேகத்தை கூட்டி இருக்கிறார். அதேபோல் வெரைட்டி பந்துகளை வீசும் இவர் சமீபமாக கட்டர்களை அதிகம் வீசி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் 5 போட்டிகளில் 19.5 ஓவர்களை வீசி, 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரின் எக்கனாமி 6.35 ஆகும். இந்த சீசனில் டாப் விக்கெட் டேக்கர் தற்போது அபிஷேக் தன்வர்தான்.

வயது
பல இளம் வீரர்களை பின்னுக்கு தள்ளி அனுபவம் மூலம் அபிஷேக் தன்வர் தற்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். கோவை அணிக்காக ஆடும் இவர் அந்த அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்து உள்ளார். இவருக்கு தற்போது 30 வயது ஆகிறது. ஐபிஎல் அணிகள் இவரை புறக்கணித்து வந்த நிலையில், அனைத்திற்கும் தற்போது 30 வயதில் அபிஷேக் பதிலடி கொடுத்துள்ளார். இனியாவது இவரை ஐபிஎல் அணிகள் திரும்பி பார்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications