Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாரு சாமி இவரு? எப்டி அடிச்சாலும் “நோ சான்ஸ்” - சமூக ஊடகங்களை கலக்கும் உயரமான கைப்பந்து வீரர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கைப்பந்து போட்டிகளில் எதிரணி வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு பந்துகளையும் சாவகாசமாக தடுக்கும் மிக உயரமான கைப்பந்து வீரரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Recommended Video

    யாரு சாமி இவரு? எப்டி அடிச்சாலும் “நோ சான்ஸ்” - சமூக ஊடகங்களை கலக்கும் உயரமான கைப்பந்து வீரர்

    பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தீர்கள் என்றால் இந்த வீடியோவை நிச்சயம் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    அதில் கைப்பந்து விளையாட்டின்போது எதிரணி வீரர்கள் அடிக்கும் பந்துகளை உயரமான வீரர் ஒருவர் குதிக்காமல் நின்றபடியே அசால்டாக தடுப்பார். இதனை கண்ட எதிரணி வீரர்கள் என்னதான் செய்வது என்றே தெரியாததுபோல் விழிபிதுங்கி நிற்பார்கள்.

    பரவும் வீடியோ

    பரவும் வீடியோ

    கடந்த 2, 3 நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த வீடியோதான் காட்டுத்தீ போன்று பரவி வருகிறது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து யாரு சாமி இது? என்று கருத்திட்டு வருகின்றனர். பொதுவாக WWE போன்ற மல்யுத்த போட்டிகளில் தி கிரேட் காளி போன்ற வீரர்கள் 7 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்துகொண்டு எளிதில் போட்டியாளரை வீழ்த்திவிடுவார்கள். கைப்பந்து, கூடைபந்து, தடகளம் போன்ற விளையாட்டுக்களிலும் உயரமான வீரர்களுக்கு கூடுதலான வாய்ப்புகளும் வெற்றிகளும் கிடைக்கும்.

     உயரமான வீரர்

    உயரமான வீரர்

    பெரும்பாலும் கைப்பந்து போட்டிகளில் உயரமான வீரர்களே விளையாடுவார்கள் என்ற நிலை உள்ளது. ஆனால், இவர்கள் எல்லோரையும்விட ஒரு வீரர் கைப்பந்து நெட் உயரத்துக்கு இருந்தால் எதிரணி வீரர்களின் நிலை என்னவாகும் என்பதை அண்மையில் பகிரப்பட்டு வரும் உயரமான கைப்பந்து வீரரின் வீடியோ காட்டி இருக்கிறது.

    அஃப்சல் பரீத்

    அஃப்சல் பரீத்

    யாரு சாமி இவர்? என்ற நெட்டிசன்களின் கேள்விக்கு விடைகாணும் முயற்சியில் நாம் ஈடுபட்டோம். ஒரு வழியாக விடையும் கிடைத்துவிட்டது. உயரத்தாலும் சிறப்பான விளையாட்டுத் திறனாளும் எதிரணியை கதிகலங்க செய்து, தற்போது சமூக வலைதளங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த வீரரின் பெயர் அஃப்சல் பரீத்.

    ஒடிசா போட்டி

    ஒடிசா போட்டி

    இவர் ஒடிசா மாநிலம் கெந்துஜார் மாவட்டத்தில் உள்ள தென்கிகோடே பகுதியில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் விளையாடிய வீடியோதான் தற்போது பகிரப்பட்டு வருகிறது. அஃப்சல் குறித்து இணையத்தில் தேடியபோது அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது போன்ற தகவல்கள் கிடைக்கவில்லை.

    கத்தாரில் விருது

    கத்தாரில் விருது

    ஆனால், அவர் 2017 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் விளையாடிய படங்களும், வீடியோக்களும் நமக்கு கிடைத்தன. எனவே அவர் கேரளாவை சேர்ந்தவராகவோ அல்லது அங்கு உயர்கல்வி பயின்றவராகவோ இருக்கலாம். இவர் 2018 ஆம் ஆண்டு கத்தார் தலைநகர் தோஹாவில் ‘கத்தார் இந்திய வாலிபால் சங்கம்' நடத்திய கைப்பந்து தொடரில் விளையாடி சிறந்த பிளாக்கருக்கான விருதை வென்றுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+