சக்கரத்தாழ்வார் தரிசனம் தந்த உற்சாகம்! தேமுதிக யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் 'பளிச்'!
தேமுதிக யாருடன் கூட்டணி என்பது பற்றி பிரேமலதா விஜயகாந்த் பதில்.
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதியில் மக்களை பட்டறை அடைத்துவைத்து திமுக பெற்ற வெற்றி ஒரு வெற்றியா என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுகவினர் கூறுவதற்கெல்லாம் தன்னால் கருத்துக் கூறிக்கொண்டு இருக்க முடியாது எனத் தெரிவித்தார்.
வாழ்க்கை ஒரு வட்டம் என்றும் மேலே இருப்பவர்கள் கீழே வரலாம்; கீழே இருப்பவர்கள் மேலே வரலாம் எனவும் தத்துவம் பேசினார்.

பிரேமலதா விஜயகாந்த்
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் இப்போதே அதை எதிர்கொள்வதற்கான பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிகவை தேர்தலுக்கு தயார்படுத்தி வரும் அவர் கூட்டணி விவகாரத்தில் மிகவும் உஷாராக இருக்கிறார். தற்போதைய சூழலில் பாஜகவுடனோ, அதிமுகவுடனோ தாங்கள் கூட்டணியில் இல்லை என்றும் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இந்த முறை கூட்டணி நிலைப்பாடு குறித்து முடிவை அறிவிப்போம் எனவும் தெரிவித்தார்.

கூட்டணி நிலைப்பாடு
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவுடன் சீட் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே திமுகவுடனும் கூட்டணி பேசி சர்ச்சையில் சிக்கியது தேமுதிக. இதனால் கொஞ்ச காலம் துரைமுருகன் மீது கடும் கோபத்தில் இருந்தார் பிரேமலதா விஜயகாந்த். இதனிடையே இந்த முறை 6 மாதங்களுக்கு முன்பே கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல ஈரோடு கிழக்குத் தொகுதியில் மக்களை பட்டறை அடைத்துவைத்து திமுக பெற்ற வெற்றி ஒரு வெற்றியா என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை
இதை வைத்து பார்த்தால் இவர் திமுக கூட்டணியை விரும்பவில்லை என்றே தெரிகிறது. இதனிடையே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுகவினர் கூறுவதற்கெல்லாம் தன்னால் கருத்துக் கூறிக்கொண்டு இருக்க முடியாது எனவும் பிரேமலதா கடுகடுத்தார். பாஜக தனித்துப் போட்டி குறித்து அண்ணாமலை பேசியிருக்கிறாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதை அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் என சிரித்தவாறு கூறி அது குறித்து மேலும் பேசுவதை தவிர்த்தார்.

சக்கரத்தாழ்வார் தரிசனம்
சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்துவிட்டு வந்திருப்பதாகவும் வாழ்க்கை ஒரு வட்டம் என்றும் மேலே இருப்பவர்கள் கீழே வரலாம்; கீழே இருப்பவர்கள் மேலே வரலாம் எனவும் பிரேலமலதா விஜயகாந்த் தத்துவம் பேசினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications