நேர்மைக்கு பெயர் பெற்றவர்.. தவெக கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்கும் SIT தலைவர் அஸ்ரா கார்க் யார்?
சென்னை: கரூரில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவரும், நடிகருமான விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட மொத்தம் 41 பேர் பலியாகினர். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவின் தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், ஐஜியுமான அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த சனிக்கிழமை நடிகர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள், பெண்கள் என்று மொத்தம் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது மனிதரால் உருவாக்கப்பட்ட பேரிடர். விஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாதது வருத்தம் அளிக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். நான் உத்தரவு பிறப்பிக்கிறேன். அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச சமூக பொறுப்பை கூட தவெகவினர் பின்பற்றவில்லை. என்ன மாதிரியான கட்சி இது?'' என்று நடிகர் விஜயை சாடினார்.
மேலும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு பற்றி விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது. அந்த குழுவில் கரூர் மாவட்ட எஸ்பியை குழுவில் இணைத்தும், கரூர் விவகாரம் தொடர்பான ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்கவும் அந்த மாவட்ட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள அஸ்ரா கார்க் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய தேடல் அதிகரித்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: அஸ்ரா கார்க் தமிழ்நாட்டில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவர் ஆவார். ஐஜியாக உள்ளார். தற்போது தமிழ்நாடு வடக்கு மண்டலத்தின் ஐஜியாக செயல்பட்டு வருகிறார். இந்த மண்டலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும்.
அஸ்ரா கார்க் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பிறந்தவர். இவுர் அங்கு பள்ளி படிப்பை முடித்தார். அதன்பிறகு தாபர் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். இவரது பெற்றோர் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள். கடந்த 2004ம் ஆண்டில் ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். தமிழ்நாட்டில் நியமனம் செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உதவி சூப்பிரண்டாக பணியை தொடங்கினார்.
அதன்பிறகு 2008 ம் ஆண்டில் திருநெல்வேலி எஸ்பியாக பணியாற்றினார். 2010 வரை அங்கு பணியாற்றினார். இந்த வேளையில் கந்து வட்டிக்காரர்கள் வரை அதிரடி நடவடிக்கை எடுத்து பெயர் பெற்றார். இதற்காக சிறப்பு படை அமைத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அதேபோல் சாதி பிரச்சனைகள் உள்ள இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தவர். அதன்பிறகு மதுரை எஸ்பியானார். தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தினார். அவரது செயலுக்கு இந்திய தேர்தல் ஆணையமே பாராட்டு தெரிவித்தது.
உத்தரபுரத்தில் நீண்டகாலமாக நீடித்து வந்த இருசமுதாயத்தினருக்கு இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண்டார். இருதரப்பு மக்களையும் நேரில் அழைத்து பேசி வெற்றி கண்டார். தலித் மக்களை கோவிலுக்கு செல்வதற்கான நடவடிக்கையை எடுத்து பாராட்டு பெற்றார். திருநெல்வேலி, மதுரை, தர்மபுரி என்று தான் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக செயல்பட்டு நடவடிக்கைகளை எடுத்தார். தர்மபுரி மாவட்டத்தில் இரட்டை குவளை முறைக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர். சிறுநீரக மோசடி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தார்.
பிறகு தேனி மாவட்டத்தில் பணியாற்றியபோது தேவதானப்பட்டியில் 2013ல் எச்ஐவி பாதிப்பு உள்ள நபருடன் பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார். பிறகு மத்திய அரசு பணிக்கு சென்றார். டிஐஜி அந்தஸ்தில் மத்திய அரசு பணிக்கு சென்றார். சிபிஐ-யில் சூப்பிரண்டாக பணியாற்றினார்.
பிறகு அவர் தமிழ்நாட்டுக்கு மீண்டும் திரும்பினார். 2022ம் ஆண்டில் ஐஜியாக இருந்தார். தெற்கு மண்டல ஐஜியாக 2022ல் பணியாற்றினார். பிறகு சென்னை தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு பிரிவின் கூடுதல் போலீஸ் கமிஷனராக செயல்பட்டார். 2024ம் ஆண்டில் வடக்கு மண்டல ஐஜியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications