தமிழகத்தின் முதல் பெண் உளவுத் துறை டிஜிபி! 2 மாதத்தில் சைபர் கிரைமுக்கு மாற்றம்! யார் இந்த பாலநாகதேவி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் முதல் பெண் உளவுத் துறை டிஜிபியாக இருந்த பால நாகதேவி, சைபர் கிரைம் டிஜிபியாக இடமாற்றப்பட்டுள்ள நிலையில் அவர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் முதல் பெண் உளவுத் துறை டிஜிபியாக பாலநாகதேவியை கடந்த மார்ச் மாதம்தான் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தற்போது அவர் சைபர் கிரைம் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் யார் என்பதை பார்க்கலாம்.

Bala Nagadevi

யார் இந்த பாலநாகதேவி?

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள லக்தி காபுல் பகுதியைச் சேர்ந்த பாலநாகதேவி, பி.டெக் பட்டதாரி ஆவார். 1995-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியில் சேர்ந்த இவர், கடந்த 29 ஆண்டுகளாகக் காவல்துறையின் பல்வேறு சவாலான பொறுப்புகளை வகித்துள்ளார்.

துப்பாக்கிச் சுடும் போட்டி

இதற்கு முன்பு, பொருளாதாரக் குற்றப்பிரிவு சி.ஐ.டி. (EOW CID) டி.ஜி.பி-யாகப் பணியாற்றி வந்தார். கமாண்டோ படைத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது பதவிக்காலத்தில், ஊமஞ்சேரியில் நடைபெற்ற அகில இந்தியப் போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திக் காட்டினார்.

உளவுத் துறை பொறுப்பு

முன்னதாக, சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக இருந்த ராமானுஜம், சுமார் ஒரு ஆண்டு காலம் உளவுத்துறைப் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் உளவுத் துறைக்கு என்று முழுநேரத் தலைவராக பாலநாகதேவி நியமிக்கப்பட்டிருந்தார்.

முதல்முறை

தமிழக உளவுத் துறையின் ரகசியங்களை நிர்வகிக்கும் இந்தப் பொறுப்பில் ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டது முதல் முறை என்பதால், காவல்துறை வட்டாரத்தில் இது பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கு முன் இப்பிரிவு பெரும்பாலும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-க்களின் கூடுதல் பொறுப்பாகவோ அல்லது ஆண் அதிகாரிகளின் தலைமையிலோ இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதுரை முதல் பெண் டிஐஜி

கடந்த 2012-ஆம் ஆண்டு, மதுரை சரகத்தின் முதல் பெண் டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டு சாதனை படைத்தார். தென் மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் இவரது பங்கு அப்போது பெரிதும் பேசப்பட்டது. நீலகிரி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றியபோது மலைப்பகுதிகளில் நிலவும் சவாலான பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டார். கோவை மண்டல டி.ஐ.ஜி-யாக பணியாற்றி குற்றங்களைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (NCB) உளவுப் பிரிவிலும் பணியாற்றி, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

காவல்துறையின் மிக உயரியப் பிரிவான கமாண்டோ படைத் தலைவராக பணியாற்றியபோது, ஊமஞ்சேரியில் நடைபெற்ற அகில இந்தியத் துப்பாக்கி சுடும் போட்டியை மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்து நடத்தினார். இவரது நிர்வாகத் திறமைக்கு இது ஒரு சான்றாக அமைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+