Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தலில் படுதோல்வி.. 100 மேட்ச் கூட ஆடாத சேத்தன் சர்மா! தேர்வுக்குழு தலைவரான கதை - யார் அவர்?

இந்திய அணியையே தேர்வு செய்யும் முக்கிய இடத்தில் உள்ள தேர்வுக்குழு தலைவரான சேத்தன் சர்மா குறித்த முழு விபரத்தை பார்ப்போம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அணிக்கு பயிற்சியளிக்கும் பயிற்சியாளர், கேப்டன்களை தேர்வு செய்ய அவர்களின் சாதனைகளை பரிசீலிக்கும் பிசிசிஐ, இந்திய அணியையே தேர்வு செய்யும் முக்கிய இடத்தில் உள்ள தேர்வுக்குழு தலைவர் பதவியை எதன் அடிப்படையில் வழங்குகிறது என்ற கேள்வி எழுந்து இருக்கு நிலையில், ஸ்டிங் ஆபரேசனில் சிக்கிய சேத்தன் சர்மா யார் என்ற விபரத்தை பார்ப்போம்.

இந்திய அணி தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் தொடங்கி முன்னாள் பயிற்சியாளர்கள் ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, கபில் தேவ், கேரி கிர்ஸ்டென், கிரேக் சாப்பல் போன்றவர்கள் கிரிக்கெட் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

அதேபோல் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் ஷர்மா, முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி, மகிந்திர சிங் தோனி, ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, சச்சின் டென்டுல்கர், முஹம்மது அசாருத்தீன் போன்றோரும் சாதனைகளை நிகழ்த்திய பிறகே கேப்டனாக நியமிக்கப்பட்டார்கள்.

தேர்வுக்குழு தலைவர்

தேர்வுக்குழு தலைவர்

ஆனால், இந்திய அணியில் எந்த வீரர் விளையாட வேண்டும்? எந்த வீரர் விளையாடக் கூடாது? என முடிவெடுக்கும் முக்கிய இடத்தில் இருக்கும் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு எதன் அடிப்படையில் ஆட்களை நியமிக்கிறார்கள் என்ற கேள்வி தற்போது ஸ்டிங் ஆபரேசன் சர்ச்சையில் சிக்கி இருக்கும் சேத்தன் சர்மாவின் இந்திய அணிக்காக விளையாடியதை பார்க்கையில் எழுகிறது.

தேர்வுக்குழு மீது விமர்சனம்

தேர்வுக்குழு மீது விமர்சனம்

எவ்வளவு தலைசிறந்த கேப்டன் மற்றும் பயிற்சியாளரை ஒரு அணியில் நியமித்தாலும் அந்த அணியில் சிறப்பான வீரர்கள் இல்லாவிட்டால் அது வெற்றிபெறுவது அவ்வளவு எளிதல்ல. அதன் அடிப்படையில் சேத்தன் சர்மா தலைமையிலான குழு தேர்வு செய்து அனுப்பும் வீரர்கள் மீது தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வீரர்கள் தேர்வு சாதி அடிப்படையில் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டன.

நீக்கப்பட்டு மீண்டும் சேர்ப்பு

நீக்கப்பட்டு மீண்டும் சேர்ப்பு

திறமையான வீரர்களை சேர்க்காததன் காரணமாகவே இந்திய அணி டி20 உலகக்கோப்பையை இழந்ததாக கூறி சேத்தன் சர்மா தலைமையிலான குழுவே கலைக்கப்பட்ட நிலையில் சில மாதங்களில் மீண்டும் அவரையே தேர்வுக்குழு தலைவராக நியமித்தது பிசிசிஐ. அப்படி மீண்டும் வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு இந்திய அணிக்காக என்ன செய்து இருக்கிறார் சேத்தன் சர்மா என்று பார்ப்போம்.

1983 ல் அறிமுகம்

1983 ல் அறிமுகம்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்த சேட்டன் சர்மா ஒரு ஆல்ரவுண்டர். பேட்டிங் மற்றும் மித வேக பந்துவீச்சாளரான இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 1984 ஆல் ஆண்டு அறிமுகமானார். ஆனால் 1989 க்கு பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல், 1983 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் 1994 ஆம் ஆண்டு வரை விளையாடி இருக்கிறார்.

 குறைவான ரெக்கார்ட்

குறைவான ரெக்கார்ட்

சர்வதேச அளவில் ஒரு சில போட்டிகளை தவிர்த்து மற்ற போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவர் ஜொலிக்கவில்லை. 23 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் அவர் பேட்டிங்கில் வெறும் 396 ரன்களை மட்டுமே எடுத்து இருக்கிறார். அவரது ஆவரேஜ் 22 தான். அதே நேரம் 63 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருக்கிறார்.

 சுமாரான ஆட்டம்

சுமாரான ஆட்டம்


65 ஒருநாள் போட்டிகளில் போட்டிகளில் விளையாடி உள்ள சேத்தன் சர்மா, 24 என்ற குறைவான சராசரியுடன் ஒரே ஒரு சதத்துடன் 456 ரன்களையும் 67 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். அரைசதமோ, 5 விக்கெட்டுகளோ வீழ்த்தியதில்லை. இப்படி இந்திய அணிக்காக மிகவும் சுமாரான விளையாட்டை விளையாடியவர் சேத்தன் சர்மா.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

இவர் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், ஜடேஜா, முஹம்மது சமி போன்றோரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் வைப்பதா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி இருக்கிறார்கள். ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த சேட்டன் சர்மா, ஹரியானாவில் 2004 ஆம் ஆண்டு வேகப்பந்து பயிற்சி அகாடமியை தொடங்கினார்.

அரசியல்வாதி

அரசியல்வாதி

சேட்டன் சர்மா கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல. அவர் ஒரு அரசியல்வாதியும் கூட. கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தப்பிரதேச மாநில பரிதாபாத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். அதில், 18.2 சதவீத வாக்குகளை மட்டுமே வென்ற அவர் 3 வது இடத்தை பிடித்தார். அதன் பின்னர் அந்த அக்கட்சியின் விளையாட்டு பிரிவு அழைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+