"காலி பண்ணிடுவோம்".. அலறியடித்து ஸ்டாலினை நாடிய பாஜக "ராம்குமார்".. வாட்ச் பண்ணும் தாமரை! என்னாச்சு?
சென்னை: நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தனக்கு விடுக்கப்பட்ட புகார் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுக்க முயன்று வருகிறாராம்.
நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், இளைய மகன் பிரபு ஆகியோரின் குடும்பம் சென்னை தி.நகரில் உள்ள அன்னை இல்லத்தில் வசித்து வருகிறது. தனது மகன் நடிகர் துஷ்யந்தை வைத்துப் படம் எடுப்பதற்காக ராம்குமார் கடன் வாங்கியிருக்கிறார்.

இது தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கடன் பெறப்படும் போது போட்டுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, ராம்குமார் நடந்து கொள்ளவில்லை என்பது பிரச்சனையின் அடிப்படை.
இந்த நிலையில், ராம்குமாரை சந்தித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு ரவுடி கும்பல் மிரட்டியிருக்கிறது. குடும்பத்தையே காலி பண்ணிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் மிரண்டும் பயந்தும் போன ராம்குமார், தனது நலன் விரும்பிகளிடம் தெரிவிக்க, அவர்களின் யோசனையின்படி தி.நகர் காவல் நிலைத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
ஆனால் இந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். மேலதிகாரிகளுக்கும் இந்த புகார் சொல்லப்பட்டும் "நோ ரெஸ்பான்ஸ்". இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்ல ராம்குமார் முயற்சித்து வருகிறார். இந்த மிரட்டல் விவகாரம், அதிமுக , பாஜக தலைமைகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாம்.
இந்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என உன்னிப்பாக கவனிக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கப்படாதபட்சத்தில், இந்த மிரட்டல் விவகாரத்தை திமுக அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக அம்பலப்படுத்த அதிமுக, பாஜக தரப்பு திட்டமிட்டுள்ளதாம்.
பாஜகவில் இருக்கிறார்: சிவாஜி கணேசனின் மூத்த மகனும், நடிகருமான ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் ஆகியோர் பா.ஜ.கவில் 2021ல்தான் இணைந்தனர். 2021 இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவர் தற்போது வரை எந்த பதவியிலும் வகிக்கவில்லை. அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார்.
ராம்குமார் டெல்லியில் உள்ள மூத்த பாஜக தலைவர்களுக்கு தமிழக அரசியல், கள நிலவரம், உள்ளிட்ட விஷயங்களை ஆங்கிலத்தில் புட்டு புட்டு வைத்து வருகிறாராம். டெல்லியில் இவருக்கு கொஞ்சம் வாய்ஸ் இருக்கிறதாம். இந்த வேலையை அவர் ரெகுலராக செய்வதாக தெரிகிறது.
உதாரணமாக சமீபத்தில் லோக்சபா தேர்தல் பணிகள், அதற்கு முன் தருமபுர ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் தொடர்பான எதிர்ப்பு, முதல்வரை ஆதீனங்கள் சந்தித்தது, தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதல் குறித்தெல்லாம் விவரமாக டெல்லி சீனியர்களுக்கு புரியும் வகையில் ஆங்கிலத்தில் அனுப்பி வந்துள்ளார்.
ஸ்டாலின் மீது விமர்சனம்: முதல்வர் ஸ்டாலின் தொடர்பாகவும் அவ்வப்போது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் ராம்குமார் புகார் கார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். மேலதிகாரிகளுக்கும் இந்த புகார் சொல்லப்பட்டும் இதுவரை பெரிதாக அந்த புகாரை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்ல ராம்குமார் முயற்சித்து வருகிறார். ஆனால் இதுவரை முதல்வரை அணுக முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ராம்குமார் புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாதபட்சத்தில், இந்த மிரட்டல் விவகாரத்தை திமுக அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக அம்பலப்படுத்த அதிமுக, பாஜக தரப்பு திட்டமிட்டுள்ளதாம்.
-
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு?












Click it and Unblock the Notifications