இலக்கியா தற்கொலை முயற்சி! கோட், வலிமை படங்களின் ஸ்டண்ட் இயக்குநர்! யார் இந்த திலீப் சுப்பராயன்!
சென்னை: "எனது சாவுக்கு திலீப் சுப்பராயன்தான் காரணம்" என இன்ஸ்டாவில் இலக்கியா பதிவிட்டுவிட்டு அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் யார் இந்த திலீப் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் மகன் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்படுவதற்கு முன்பு கவர்ச்சி உடை அணிந்து கொண்டு, கவர்ச்சியாக போட்ட இலக்கியாவுக்கு நிறைய பாலோயர்கள் கிடைத்தனர். இதையடுத்து டிக்டாக் போனதும் இன்ஸ்டா, யூடியூப்புக்கு மாறிவிட்டார். இவருக்கு 16 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்ஸ்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சமையல் குறிப்புகளை பதிவேற்றம் செய்ய தனியாக யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இலக்கியா பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் தற்போது அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
திலீப் சுப்பராயன்
இந்த சம்பவத்திற்கு முன்னதாக "என் சாவுக்கு திலீப் சுப்பராயன்தான் காரணம். நான் 6 ஆண்டுகளாக அவருடன் தங்கியுள்ளேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை அடித்து துன்புறுத்துகிறார்" என இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் யார் இந்த திலீப் சுப்பராயன் என்பதை பார்க்கலாம்.
புலன் விசாரணை
1980 கள் முதல் தற்போது வரை ஸ்டண்ட் இயக்குநராக இருந்து வருபவர் சூப்பர் சுப்பராயன். "புலன் விசாரணை", "கேப்டன் பிரபாகரன்", "அக்னி நட்சத்திரம்" உள்ளிட்ட படங்களில் சண்டை பயிற்சி கொடுத்துள்ளார். சண்டைப் பயிற்சியாளர்களான ராக்கி ராஜேஷ், தளபதி தினேஷ், பொன்னம்பலம், ராம் லட்மன், மிராக்கிள் மைக்கேல், குன்றத்தூர் பாபு, இந்தியன் பாஸ்கர், ராஜசேகர், தாவாசிராஜ் ஆகியோர் இவரிடம் சண்டைக் கலைஞர்களாகவும், உதவியாளர்களாகவும் பணியாற்றியவர்களாவர்.
இரு மகன்கள்
சுப்பராயனுக்கு இரு மகன்கள், திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன். இருவரும் தனது தந்தையிடமே சண்டை பயிற்சிகளை கற்றுத் தேர்ந்தனர். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் என்ற படத்தில் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றினார். முதல் படமே இவருக்கு பெரும் பாராட்டுகளை கொடுத்தது. இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த ஸ்டண்ட் இயக்குநருக்கான விருதை பெற்று தந்தது.
இத்தனை படங்களா
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சண்டை பயிற்சி இயக்குநராக இருந்துள்ளார். 'சுந்தரபாண்டியன்', 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'ஜில்லா', 'புலி', 'தெறி', 'வாரிசு', 'கோட்', 'விஸ்வாசம்', 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'காப்பான்', 'தீரன்', 'வடசென்னை' உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
வாழை படத்தின் தயாரிப்பாளர்
அது போல் 'ஆரண்ய காண்டம்', 'நானும் ரவுடிதான்', 'சங்கு சக்கரம்', 'உள்குத்து', 'புத்தம் புது காலை விடியாதா', 'காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'அஞ்சலா', 'பலூன்', 'வாழை' ஆகிய படங்களின் தயாரிப்பாளர் திலீப்தான். அதாவது வாழை படத்தை சாஜித் சிவானந்தன், திவ்யா மாரி செல்வராஜ் ஆகியோருடன் இணைந்து திலீப்பும் தயாரித்திருந்தார்.
ரஜினி, விஜய் படங்கள்
விஜய், அஜித், சூர்யா, ரஜினி ஆகியோரின் படங்களுக்கும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். தற்போது பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள "ஹரி ஹர வீர மல்லு" படத்திற்கும் திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில், இலக்கியா, அவர் மீது குற்றச்சாட்டு வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications