உடனே வீட்டுக்கு வாங்க! மதுரையில் உள்ள ஒரு "ரிட்டயர்டு" டாக்டரை அழைத்து பாராட்டிய ஸ்டாலின்! ஏன்?
சென்னை: மதுரையில் இருக்கும் ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரை முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு நேற்று அழைத்துள்ளார். அதோடு இல்லாமல் வீட்டில் அவரிடம் 15 நிமிடங்கள் பேசி.. அவரை பாராட்டி வாழ்த்தி உள்ளார். அப்படி என்ன நடந்தது?
மதுரை அருகே தோப்பூரில் 1960-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அரசு காசநோய் மற்றும் பிற தொற்று நோய்களுக்காக தனித்தன்மை வாய்ந்த நெஞ்சக நோய் மருத்துவமனை திறக்கப்பட்டது. 115 ஏக்கரில் பரந்து விரிந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் காசநோயாளிகள் பிற தொற்று நோயாளிகள் நோய் முற்றிய நிலையில் வீட்டில் வைத்து பராமரிக்க முடியாத நிலையில் உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள் இந்த மருத்துவமனையில் கொண்டு வந்து விடப்படுவார்கள்.

2013-ஆம் ஆண்டின் இந்த மருத்துவமனையின் நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டவர் டாக்டர் காந்திமதிநாதன் அவர்கள். டாக்டர் காந்திமதி நாதன் அவர்களின் தன்னலமற்ற தியாக மனப்பான்மையுடன் கூடிய மருத்துவத் தொண்டுகளால் இந்த மருத்துவமனை மிகச்சிறந்த மருத்துவமனையாக வளர்ந்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கே இங்கு நிர்வாக அலுவலகம் அமையும் அளவுக்கு இந்த மருத்துவமனை உயர்ந்து சிறந்துள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் நந்தவனம் போல் திரும்பிய பக்கம் எல்லாம் பசுமை புல்வெளிகள் சூரிய வெளிச்சமே படாத அளவுக்கு அடர்த்தியாக நிழல்தரும் மரங்கள் நிறைந்துள்ளன.
மருத்தவர் காந்திமதிநாதன் அவர்களின் கடுமையான உழைப்பின் மூலம் இந்த மருத்துவமனையில் இன்வெர்ட்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். எப்.எம். ரேடியோ வசதி, நூலகம், பொழுதுபோக்கும் இடம், சதுரங்கம், கேரம் பலகை, இறகுப்பந்து விளையாட்டு அரங்கம், பொழுதுபோக்கு வதற்கு டி.வி., நடைபயிற்சி பூங்கா, தியான மையம், யோகா அறை போன்றவை அமைந்து நீண்டகாலம் தங்கி காசநோய் கிசிச்கைக்காக மருத்துவம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அனைவரும் கவலையின்றி மருத்துவம் செய்துகொள்வதற்குத் தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
டாக்டர் காந்திமதிநாதனின் தீவிர கவனத்தின் விளைவாக இம்மருத்துவமனையில் சொற்பொழிவாளர்கள். அழைத்துவரப்பட்டு நோயாளிகளுக்கு மனோதத்துவ நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
சிகிச்சைபெறும் ஒவ்வொரு நோயாளியின் பெயரையும் சொல்லி அழைக்கும் அளவுக்கு டாக்டர் காந்திமதிநாதன் நோயாளிகளின் மீது சிறப்பான கவனம் செலுத்தி வந்துள்ளார்.
டாக்டர் காந்திமதிநாதன் அவர்கள் இந்த மருத்துவமனையை தனது வீடு போலவும், நோயாளிகளை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போலவும் நேசித்து பயனாளிகளின் நோய் விரைந்து குணமடைய காரணமாக இருந்துள்ளார். இந்த தோப்பூர் காசநோய் மருத்துவமனை டாக்டர் காந்திமதிநாதன் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளால் தற்போது அதிநவீன மருத்துவ வசதிகளுடன் தமிழகத்தின் தலைசிறந்த நெஞ்சக மருத்துவமனையாக உருவெடுத்து ஒருசோலை வனமாக காட்சியளிக்கிறது. தோப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனைத்து வகையிலும் பெருமைகளை உருவாக்கித் தந்துள்ள டாக்டர் காந்திமதிநாதன் அவர்கள் 30.6.2024 அன்று அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

அசத்திய பணி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டாக்டர் காந்திமதிநாதனின் தியாகத் திருத்தொண்டுகளால் தோப்பூர் காசநோய் மருத்துவமனை சிறந்து விளங்குவது அறிந்து பெரிதும் மகிழ்ந்து டாக்டர் காந்திமதிநாதன் அவர்களுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இல்லத்திற்கு டாக்டர் காந்திமதிநாதன் அவர்கள் தமது குடும்பத்தாருடன் வருகை தந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை இன்று (1.7.2024) நேரில் சந்தித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சியோடு டாக்டர் காந்திமதிநாதன் அவர்களை வரவேற்று, தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் பணியாற்றியுள்ள காலத்தில் நோயாளிகளை நேசித்து ஆற்றியுள்ள மனிதநேயம் சிறக்கும் மகத்தான தொண்டுகளைப் போற்றி, பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்வின் போது மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., உடனிருந்தனர்.

இன்று உலக மருத்துவர் தினம் கடைப்பிடிக்கப்படுவதால் மருத்துவத் துறையில் சிறந்த தொண்டுகள் புரிந்துள்ள மருத்துவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் டாக்டர் காந்திமதி நாதன் அவர்களும் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications