சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 மாங்காய்.. சைலன்ட்டாக சாதித்த சேகர் பாபு.. "சுக்கிரன்" உச்சத்தில்தான் போல.. விசுவாசம்னா சும்மாவா!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அமைச்சர் சேகர் பாபு சென்னை மேயர் தேர்வில் ஆதிக்கம் செலுத்தியது போலவே இந்த முறை ராஜ்ய சபா எம்பி தேர்விலும் சத்தமின்றி ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் காலியாக போகிற 6 ராஜ்ய சபா இடங்கள் உட்பட 57 இடங்களுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் அதிமுக சார்பாக 2 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும்.

ஆனால் அதிமுக இன்னும் இதற்கான வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. திமுக சார்பாக இன்று 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

 3 பேரை தட்டி தூக்கிய திமுக! ஏக குஷியில் காங்.. ராஜ்ய சபா எம்பிக்கள் தேர்வானது எப்படி? இதான் பின்னணி 3 பேரை தட்டி தூக்கிய திமுக! ஏக குஷியில் காங்.. ராஜ்ய சபா எம்பிக்கள் தேர்வானது எப்படி? இதான் பின்னணி

திமுக

திமுக

திமுகவில் தற்போது ஆர்.எஸ். பாரதி, டி.வி.கே.எஸ். இளங்கோவன், ராஜேஷ்குமார் ஆகியோர் பதவிக் காலம் முடிகிறது. கூட்டணி கட்சிகளின் உதவியுடன் திமுக இந்த முறை 4 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும். இந்த நிலையில் திமுக சார்பாக யார் களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி நிலவி வந்தது. முன்பு இருந்த எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பலரின் பெயர்கள் லிஸ்டில் அடிபட்டன.

 யாருக்கெல்லாம் வாய்ப்பு

யாருக்கெல்லாம் வாய்ப்பு

ஆனால் திமுகவில் ஏற்கெனவே எம்பிக்களாக இருந்த ஆர் எஸ் பாரதி, டி.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ்குமார், ரா கிரிராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ரா கிரிராஜன் திமுகவில் நீண்ட காலமாக இருக்கும் உறுப்பினர். 2014ல் நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை தொகுதியில் திமுக சார்பில் கிரிராஜன் போட்டியிட்டார். இவர் வழக்கறிஞராவார்.

சட்டசத்துறை செயலாளர்

சட்டசத்துறை செயலாளர்

ஆனால் அந்த தேர்தலில் அதிமுக ஸ்வைப் செய்த நிலையில், அதிமுக வேட்பாளர் வெங்கடேஷ் பாபு வென்றார். இவர் தற்போது திமுகவின் சட்டத்துறை செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். பல்வேறு முக்கியமான வழக்குகளில் திமுக சார்பாக ஆஜராகி இருக்கிறார். முன்னதாக 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவிற்கு எதிராக அதிமுக சார்பாக சில ஆபாசமான விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டன. இதை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடுத்ததில் , வழக்கறிஞர் கிரிராஜன் மனுவும் முக்கியமானதாக இருந்தது.

வழக்குகள்

வழக்குகள்

தேர்தல் ஆணையம் அந்த விளம்பரங்களுக்கு தடை விதித்தது. இது போன்ற தேர்தல் தொடர்பான வழக்குகள் பலவற்றில் இவர் ஆஜராகி இருக்கிறார். முன்னதாக 2021 சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில், தி.மு.க. வேட்பாளராக கிரிராஜன் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அப்போது வாய்ப்பு தரப்படவில்லை. மாறாக ஜான் எபினேசர் திமுக சார்பில் இங்கு போட்டியிட்டு வென்றார்.

விசுவாசம்

விசுவாசம்

ஆனால், கிரிராஜன் இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் திமுகவிற்காக தேர்தல் வேலைகளை பார்த்தார். 2021 சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினுக்காகவும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினுக்காகவும் தீவிரமாக தேர்தல் வேலைகளை செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் இவர் அமைச்சர் சேகர் பாபுவுடன் நெருக்கமாக இருந்து பணிகளை மேற்கொண்டார்.

விசுவாசம்

விசுவாசம்

இந்த விசுவாசம் காரணமாக தற்போது இவருக்கு அமைச்சர் பதவி தேடி வந்துள்ளது. இந்த எம்பி பதவி காரணமாக அதிக குஷியில் இருக்க போவது அமைச்சர் சேகர் பாபுதான். திமுக அமைச்சர் சேகர் பாபு சென்னை மேயரை தேர்வில் ஆதிக்கம் செலுத்தியது போலவே இந்த முறை ராஜ்ய சபா எம்பி தேர்விலும் சத்தமின்றி ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார். கிரிராஜன் சேகர் பாபுவிற்கு மிகவும் க்ளோஸ். இதன் காரணமாகவே கடந்த முறை ஆர்.கே நகரில் இவரை சேகர் பாபு தனது செல்வாக்கு மூலம் களம் இறங்குவார் என்று கூறப்பட்டது.

Recommended Video

    சென்னை: காகம் எச்சத்தோடு இந்தி திணிப்பு ஒப்பீடு: அமைச்சர் சேகர்பாபு பேச்சு!
    சேகர் பாபு

    சேகர் பாபு

    ஆனால் பொறுத்திருந்து அவருக்கு எம்பி பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரே வருடத்தில் சேகர் பாபு இரண்டு மாங்காய் அடித்துள்ளார். அவருக்கு நெருக்கமானவர்கள் இரண்டாவது பெரிய பதவியை பெறுகிறார்கள். முன்னதாக சென்னை மேயராக பிரியா பதவி ஏற்றார். அவர் சேகர் பாபுவிற்கு நெருக்கமானவர். இப்போது கிரிராஜன் எம்பி ஆகிறார்.. சேகர் பாபுவிற்கு சுக்கிரன் உச்சத்தில்தான் இருக்கிறார் போல!

    English summary
    Who is Girirajan? Why does DMK select him as the Rajya Sabha MP candidate? திமுக அமைச்சர் சேகர் பாபு சென்னை மேயரை தேர்வில் ஆதிக்கம் செலுத்தியது போலவே இந்த முறை ராஜ்ய சபா எம்பி தேர்விலும் சத்தமின்றி ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X