பழைய பன்னீர்செல்வம் வந்துட்டாரு போல.. 3வது அணி உருவாகிறது.. பணியுதா பாஜக? தினகரன் கையில் க்ளைமேக்ஸ்?
சென்னை: இந்த அளவுக்கு ஓபிஎஸ், சீரியஸாக களமிறங்குவார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்பார்க்கவில்லை.. ஓபிஎஸ்ஸின் ஒவ்வொரு அரசியல் நகர்வையும், பாஜக மேலிடம் உற்று கவனித்து வருகிறது.. அடுத்து என்ன நடக்க போகிறது?
ஓபிஎஸ் 3-வது அணியை அமைப்பதற்கு தயாராகி வருகிறார். அதிமுக - பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக காங்கிரஸ் தலைமையில் இன்னொரு கூட்டணியும் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், ஓபிஎஸ், தினகரன் கூட்டணி தயாராகும் போல தெரிகிறது.
கடைசிவரை கண்டுகொள்ளாமல், பாஜகவால் கழட்டிவிடப்பட்டதால், நொந்து போயுள்ளதாம் ஓபிஎஸ் டீம்.. இதனிடையே, பொதுக்குழு தீர்ப்பு சமீபத்தில் வந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு மேலும் சோகத்தில் உள்ளதாக தெரிகிறது.

தனிக்கட்சி: அதனால்தான், தனிக்கட்சி என்ற யோசனைக்கு வந்துள்ளது. இதற்கு பாஜக முட்டுக்கட்டை போடுவதாகவும் தெரிகிறது. ஆனால், நம்பி நம்பி மோசம் போயாச்சு, இனியும் பாஜகவை நம்பி அரசியல் பண்ணுவது வேஸ்ட் என்ற முடிவுக்கு ஓபிஎஸ் தரப்புவந்துள்ளதாக தெரிகிறது.
2 நாட்களுக்கு முன்பு, மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், "நாங்கள் தனித்து நிற்போம் என்றும், பாஜகவுடன் ஓபிஎஸ் இல்லை என்றும்" அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.
தனிக்கட்சி: அதுமட்டுமல்ல, தங்கள் பலத்தை காட்டுவதற்காக தனிக்கட்சி தொடங்குவதற்கு ஓபிஎஸ்ஸிடம் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆதரவாளர்களின் இந்த எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையில்தான், ஓபிஎஸ்ஸும் விரைவில் தனிக்கட்சியை தொடங்க உள்ளாராம்.. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்பதுடன், இதைத்தான், மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் உறுதிபடுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தந்திருக்கும் பேட்டியில், தமிழகத்தில் பாஜக + காங்கிரஸ் இல்லாத அணியை எம்பி தேர்தலில் உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்...ஆக, 3வது அணி தமிழகத்தில் உருவாகும் நிலை வந்துள்ளதாக தெரிகிறது..
ஓபிஎஸ் டீம்: இதுகுறித்து, ஓபிஎஸ் தரப்பு முக்கிய நிர்வாகி ஒருவர் சொல்லும்போது, "தற்சமய சூழலில், தனிக்கட்சி தொடங்குவது தான் எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்பதை உணர்ந்திருக்கிறோம்.. அப்படி ஒரு நிலை ஏற்பட்ட பிறகு, எங்களோடு ஒத்த கட்சிகளாக இருக்கும் பாஜக மற்றும் காங்கிரசை விரும்பாத கட்சிகளோடு சேர்ந்து பயணிக்க திட்டமிட்டு வருகிறோம்... இது நிச்சயம் வலிமையான 3-வது அணி போன்று அமைய வாய்ப்புகள் உள்ளன. எல்லாம் முடிந்து விட்டது என்று எங்களை பற்றி தப்பு கணக்கு போடுகிறார்கள். அதெல்லாம் பொய்யாகும்" என்றார்.
தனிக்கட்சி: தனிக்கட்சியை ஓபிஎஸ் துவங்கியுள்ள நிலையில், பாஜக கூட்டணி வேண்டாம் என்று முடிவு எடுக்கும்பட்சத்தில், இனி திமுக பக்கமும் போய் சேர முடியாது என்பதால்தான், 3வது அணி உருவாகும் சூழல் தமிழகத்தில் உருவாகி உள்ளது. ஒருவேளை இந்த 3வது அணி உறுதியாக அமையுமானால், தென்மண்டலத்தில், அதிமுக ஓட்டுக்கள் சிதறிப்போய், திமுகவுக்கே சாதகமாகிவிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ஏற்கனவே திமுகவின் Bடீம் என்று ஓபிஎஸ்ஸை, எடப்பாடி தரப்பினர் விமர்சித்து வரும்நிலையில், 3வது அணி எப்படி இருக்க போகிறது? யாருக்கு சாதகமாக இருக்க போகிறது? என்று தெரியவில்லை.
டிடிவி தினகரன்: அதுமட்டுமல்ல, கடந்த மாதம், டெல்லியில் நடந்த பாஜக கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு, ஓபிஎஸ்ஸுக்கு மட்டுமல்லாமல், தினகரனுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால், ஓபிஎஸ் - தினகரன் இரு தரப்புமே அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த சமயத்தில்தான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு பேட்டி தந்திருந்தார்.
தேசிய கூட்டணி: அதில், "வருகின்ற எம்பி தேர்தலில் கூட்டணி இல்லை என்றாலும் நாங்கள் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம். ஒருவேளை கூட்டணி என்று இருந்தால், அது நிச்சயம் தேசிய கட்சியுடன் தான் இருக்கும்... தனித்து போட்டி என்றால், அதற்கு நாங்கள் தான் தலைமை" என்று கூறியிருந்தார்.
அதாவது, தேசிய கூட்டணி" என்று திரும்ப திரும்ப தினகரன் கூறியிருப்பதில் "ஆயிரம் அர்த்தங்கள்" பொதிந்திருக்கிறது என்பதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டி உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications