ஹிந்தியில் பேசிய சௌமியா..ஸ்ரீபெரும்புதூர் மாங்காட்டில் சீறிய பாலு.. நடுவே அதிமுக? ஆஹா,முஸ்லிம் ஓட்டு
சென்னை: இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் வாக்கு சேகரிப்புகள் நடந்து வருகின்றன.
அதிமுகவை பொறுத்தவரை, இந்த முறை சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக பெற்றுவிட வேண்டும் என்றே தீவிரமாக களப்பணியாற்றி கொண்டிருக்கிறது.. பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டுள்ள நிலையில், சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என்ற மெசேஜ்ஜை எடப்பாடி பழனிசாமி தெரியப்படுத்தபடியே உள்ளார்..

இதே பாணியைதான் பாஜகவும் கையில் எடுத்து வருகிறது.. பாஜகவுக்கு இஸ்லாமிய ஓட்டுக்கள் கிடைப்பதைவிட, திமுகவுக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதிலும் முனைப்பு காட்டி வருகிறது.. அதிலும் பாஜக கூட்டணியிலிருக்கும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, தன்னுடைய தொகுதியில் இந்தியிலேயே பேசி முஸ்லிம் ஓட்டுக்களை கவர்ந்து வருகிறார்.
பாஜக: ஆனால், திமுகவோ, தனக்கு எப்போதுமே கிடைத்துவரும் முஸ்லிம் வாக்குவங்கியை தக்கவைக்க முயன்று வருகிறது.. முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி பாஜக என்றும், முஸ்லிம் ஓட்டுக்களுக்காகவே எடப்பாடி கூட்டணி நாடகம் நடத்துகிறார் என்ற விமர்சனத்தையும் முன்வைத்து வருகிறது,.
இப்படிப்பட்ட சூழலில்தான், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளரும், மூத்த தலைவருமான டி.ஆர். பாலுவின் பிரச்சார பேச்சு இணையத்தில் முக்கிய கவனத்தை பெற்று வருகிறது. அதிலும் முஸ்லிம்கள் நிறைந்த மாங்காடு பகுதியில் நின்றுக்கொண்டு டிஆர் பாலு சொன்னது இதுதான்:
பாகிஸ்தான்: அதென்ன சிஏஏ சட்டம்? என்ன சொல்ல வருகிறார்கள்? படுபாதகமான சட்டத்தை பாஜக அரசு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்துக்கள், கிறிஸ்தவர்கள் போன்ற மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வர முடியும் என்கிறார்கள்.
ஆனால், அந்த நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய பெருமக்கள் மட்டும், இந்தியாவுக்குள் வரக்கூடாதாம். இதுதான் இவர்கள் சொல்லும் சிஏஏ சட்டம்... முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் இப்படி பாரபட்சம் காட்டுகிறீர்கள். எதற்காக இந்த ஓரவஞ்சனை? இது நியாயமா? என டி.ஆர். பாலு கேள்வியெழுப்பினார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக என்னை எதிர்த்து போட்டியிடும் நபர்கள் வாக்களித்து வெற்றி பெற செய்தனர்.. எனவேஅந்த நிலை இனி தொடரக்கூடாது" என்று கேட்டுக் கொண்டார்.
ராணிப்பேட்டை: இதுபோலவே, இஸ்லாமியர்கள் நிறைந்த ராணிப்பேட்டையிலும், திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மற்றும் அமைச்சர் காந்தி ஆகியோர் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு இவர்கள் ஊர்வலமாக சென்றதும், 6 கி,மீ தூரம்வரையிலும் பட்டாசுகளை வெடித்து இவர்களை இஸ்லாமியர்கள் வரவேற்றதும் முக்கிய கவனத்தை தேர்தல் நேரத்தில் பெற்று வருகிறது.
தமிழக அரசியலை பொறுத்தவரை, அதிமுகவுக்குபெண்கள் ஓட்டு அதிகம் என்பதுபோல, திமுகவுக்கு இஸ்லாமியர் ஓட்டு வங்கி அதிகமாகவே உள்ளது. ஆனால், இந்த முறை, திமுகவின் வாக்கு வங்கியை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என 3 பக்கமும் பிரிக்க களமிறங்கி உள்ளதால், யாருக்கு வெற்றி கிடைக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications