சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தங்கம்".. யார் அந்த "ஒருவர்".. சைலண்ட்மோடுக்கு போன திமுக.. குழம்பும் கூட்டணி.. பரபரக்கும் டெல்லி

தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவின் ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில் மிச்சமுள்ள அந்த ஒரு சீட் யாருக்கு ஒதுக்கப்பட உள்ளது என்பது புதிராகவே நீடித்து வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் ஜுன் இறுதியில் முடிவடைகிறது... இந்த பதவிகளுக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது.

ஒரு ராஜ்யசபா எம்பியை தேர்ந்தெடுக்க 36 எம்எல்ஏக்கள் தேவை. இந்த 6 எம்பி பதவிகளில், திமுகவுக்கு 3 சீட் கிடைக்கும்.. கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தந்தால் திமுகவுக்கு 4 எம்பியும் கிடைக்கும் என்பது ஏற்கனவே அறிந்த விஷயம்தான்.

ஆபரேஷன் 2.0.. இனிமேலும் விட கூடாது.. கடுமையாக அப்செட் ஆன ஆபரேஷன் 2.0.. இனிமேலும் விட கூடாது.. கடுமையாக அப்செட் ஆன

 3 பேர் முடிவு

3 பேர் முடிவு

அந்தவகையில், 4 நாட்களுக்கு முன்பு, திமுக சார்பில் 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.. 1 இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.. திமுக சார்பில், தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் ராஜ்ய சபா எம்.பி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.. முதல்வரும் இதை அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

 யாருக்கு அந்த சீட்?

யாருக்கு அந்த சீட்?

ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டதுமே, அது யாராக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியில் எழ ஆரம்பித்துவிட்டது.. இதற்கு 4 பேர் லிஸ்ட்டில் இருந்தாலும், 2 பேர் லீடிங்கில் உள்ளனர்.. அதாவது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரமும், கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரியும்தான் அவர்கள்...

 கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

இதில் சிதம்பரத்துக்குதான் அதிக வாய்ப்பு என்கிறார்கள்.. காரணம், 2024 எம்பி தேர்தலுக்கு முன்பாகவே, பாஜகவை எதிர்கொள்ள ப. சிதம்பரம் ராஜ்ய சபாவில் தான் இருக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் விரும்புகிறார்களாம்.. ஆனோலும், ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே, எம்பியாக இருப்பதால், சிதம்பரத்துக்கு பதவி தர எதிர்ப்பு வலுப்பதாக தெரிகிறது.. இப்படி காங்கிரஸில் இழுபறி நீடிக்கும் நிலையில், திமுகவோ கப்சிப்பென்று அமைதி காத்து வருகிறது.

 ஏகே வில்சன்

ஏகே வில்சன்

திமுகவில் அந்த பதவி யாருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்ற அலசலும் ஓட ஆரம்பித்துவிட்டது.. இதற்கும் இருவரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.. ஒருவர் ஏகே வில்சன்.. மற்றொருவர் தங்கதமிழ்ச்செல்வன் ஆவர்.. விஜயனை பொறுத்தவரை, டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக இருப்பவர்.. இவரது பதவிக்காலம் ஜுன் மாதமே முடிகிறது.. சட்டசபை தேர்தலின்போதே எம்எல்ஏ சீட் கேட்டவர்.. ஆனால் கிடைக்கவில்லை.. அதனால்தான், கேபினட் அந்தஸ்தில் சிறப்பு பிரதிநிதியாக டெல்லியில் நியமிக்கப்பட்டார்... இவருக்கு இந்த முறை ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்கிறார்கள்.

 செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜி

ஆனால், தங்க தமிழ்ச்செல்வன் பெயரும் வலுவாக அடிபடுகிறது.. இதற்கு காரணம், அமமுகவில் இருந்து, தங்க தமிழ்செல்வனை போல திமுகவுக்கு வந்தவர்தான் செந்தில்பாலாஜி.. இதில் செந்தில்பாலாஜி அமைச்சராகிவிட்டார்.. தங்கதமிழ்செல்வனை பொறுத்தவரை, திமுகவுக்கு விசுவாசமாக இருப்பவர்.. கடந்த முறை தேர்தலில் எப்படியும் இவர் வெற்றிபெற்றுவிடுவார் என்றே கணிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் மிஸ் ஆகிவிட்டது..

தங்கம்

தங்கம்

அதிமுக மாவட்ட தலைவர்களை தோற்கடித்தால், நிச்சயம் அமைச்சர் பதவி அல்லது முக்கிய பதவி உண்டு என்று ஏற்கனவே திமுக மேலிடம் உறுதி தெரிவித்திருந்தது. ஆனாலும், தங்க தமிழ்செல்வன், ஓபிஎஸ்ஸுக்கு தேர்தல் களத்தில் இறுதிவரை நெருக்கடி தந்து கொண்டேயிருந்தார்.. எனவே, இவருக்கு விரைவில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என்றும் ஒரு பேச்சு இருந்து வந்த நிலையில்தான், ராஜ்யசபா சீட் தேடி வரலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. பார்ப்போம்..!

English summary
Who is going to get that Rajya Sabha seat in dmk congress alliance தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவின் ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்கிறார்கள்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X