மாநாட்டிற்கு முன் விஜய்க்கு தரப்பட்ட டிரெய்னிங்! பின்னணியில் இருந்த "மாஸ்டர்மைண்ட்" ஜான்! யார் இவர்?
சென்னை: நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமி என்ற அரசியல் ஆலோசகர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. விஜய் நேற்று அறிவித்த கொள்கைகள் சரி என்பவர்கள் இருக்கலாம்.. அதை ஏற்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால் அவர் நேற்று பேசிய விஷயங்கள் டிரெண்டானது.. தமிழ்நாடு முழுக்க கவனம் பெற்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆதரித்தோ.. எதிர்த்தோ இந்த மாநாடு பற்றி பலர் பேச அந்த மாநாடு டிரெண்டானது. நேற்று விஜய் இந்த நிகழ்ச்சியில் பேசிய விஷயங்களும் பெரிய அளவில் கவனம் பெற்றனர்.
அரசியல்வாதி போல பேசாமல்.. நடிகர் போலவும் பேசாமல்.. வித்தியாசமான முறையில்.. மேடை நடுக்கம் இன்றி.. சரளமாக விஜய் பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றது. முக்கியமாக விஜய் திராவிடம், பெரியார், மதவாதம் பற்றியெல்லாம் பேசியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அவரின் பேச்சு எப்படி இருந்ததோ இல்லையோ.. அவரின் பேச்சுக்கு பின் மிகப்பெரிய பயிற்சி இருந்தது என்பது மட்டும் உறுதி.
அவருக்கு நீண்ட பயிற்சி தந்த பின்பே.. மேடை ஏறி உள்ளார். அவர் மேடையில் எப்படி செயல்பட வேண்டும்.. என்ன பேச வேண்டும்.. எப்படி நடந்து கொள்ள வேண்டும்.. மீட்டிங்கை எப்படி நடத்த வேண்டும்.. அதற்கு ஆட்கள் எப்படி நியமிக்கப்பட வேண்டும்.. பொறுப்புகளை எப்படி பிரித்து கொடுக்க வேண்டும் என்று முடிவுகள் முறையாக தீட்டப்பட்டது.
இதற்கெல்லாம் விஜய்க்கு பின்னணியில் இருந்தது ஜான் ஆரோக்கியசாமி என்ற மாஸ்டர்மைண்ட். தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி பாமகவின் பிரபலமான.. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பாமக அந்த தேர்தலில் சறுக்கினாலும்.. ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த அந்த பிரச்சாரம் இப்போதும் பிரபலம். வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் வேலை பார்த்த ஜான் ஆரோக்கியசாமி திருச்சிக்காரர்.
இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமிதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. இதை எல்லாம் செதுக்கியது அவர்தான் என்று கூறப்படுகிறது.
திராவிட கட்சிகளுக்கு மாற்றமாக பாமகவை அப்போது கொண்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி அதை பெரிய அளவில் டிரெண்ட் செய்தார். வடக்கிலும் கூட இவர் தேர்தல் பணிகளை செய்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளை செய்த ஜான் ஆரோக்கியசாமி.. தேசியவாத காங்கிரஸ் அங்கே கடந்த தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
தற்போது ஜான் ஆரோக்கியசாமிதான் விஜய்க்கு பின் இருக்கும் அந்த மாஸ்டர்மைண்ட். கட்சி பணிகளை புஸ்ஸி ஆனந்த் கவனித்தாலும்.. வியூக வகுப்புகளை கவனிப்பது என்னவோ ஜான் ஆரோக்கியசாமிதான் என்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications