கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம்.. விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.. யார் இவர்?
சென்னை: கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றிய விசாரணை ஆணையத்தின் தலைவராகவும் இவரே இருந்தார். அருணா ஜெகதீசன் யார்? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
கரூரில் தவெக பிரச்சார பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 31 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் யார் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தவர். குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பான சொத்துக் குவிப்பு வழக்குகள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. அங்கு நீதிபதி குன்ஹா முன்னிலையில் வழக்கு நடந்தது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கம்பெனிகளை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அருணா ஜெகதீசன் உத்தரவிட்டார். அருணா ஜெகதீசனின் இந்த தீர்ப்பு அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சென்னை வேளச்சேரியில் கடந்த 2012 ஆம் ஆண்டு வங்கி கொள்ளையர்கள் என கூறி 5 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியிருந்தார்.
அதேபோல, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதி விசாரணை தலைவராக அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2022, மே 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பித்தது. துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காவல் துறையினர் 17 பேர் முழு பொறுப்பு என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
அப்போதைய மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை அளிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் 2009 ஆம் ஆண்டு முதல் 2015 மார்ச் மாதம் வரை நீதிபதியாக பணியாற்றினார் அருணா ஜெகதீசன்.
-
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க












Click it and Unblock the Notifications