Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசியல் களத்தை மீண்டும் அதிர வைத்த நீதிபதி சத்தியநாராயணன்

நீதிபதி சத்திய நாராயணன் பல முக்கிய தீர்ப்புகளை இதற்கு முன்பு வழங்கியவர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும்.. ஹைகோர்ட் 3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு- வீடியோ

    சென்னை: தமிழக மக்களை மீண்டும் பரபரப்புக்குள்ளாக்கி விட்டது இன்று நீதிபதி சத்திய நாராயணன் அளித்த தீர்ப்பு.

    தமிழக அரசியலை இவ்வளவு காலம் பரபரப்புடனே இருக்க வைத்துவிட்டு, தற்போது அரசுக்கு சாதகமாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி சத்திய நாராயணன் யார்?

    யார் இவர்?

    யார் இவர்?

    ஆம்! இவரது தீர்ப்புகள் சில நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளன. முக்கியமாக தமிழகத்தையே உலுக்கி நம் அனைவரது கண்ணிலும் ரத்தக் கண்ணீரை வரவழைத்த கும்பகோணம் தீ விபத்து சம்பந்தமான தீர்ப்பை உறுதி செய்தவர் இவரேதான்!! இவர் தான் அந்த குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தவர். இந்த வழக்கின் தீர்ப்பை அடுத்துதான் சத்திய நாராயணன் பரபரப்பாக பேசப்பட்டார்.

    மதுரை கிளை

    மதுரை கிளை

    இதையடுத்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்து வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட்டவர் நீதிபதி சத்திய நாராயணன்தான். அப்போது ராஜேந்திர பாலாஜி பால் வளத்துறை அமைச்சராக இருந்தார். 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ராஜேந்திர பாலாஜி

    ராஜேந்திர பாலாஜி

    அப்போது இதனை விசாரித்த சத்திய நாராயணன், ராஜேந்திர பாலாஜியை அமைச்சரான பிறகு மட்டும் விசாரிக்க கூடாது, 1996 ஆம் ஆண்டு திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்தது முதல் தற்போதுவரை அமைச்சரின் வருமானம், சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார். இந்த உத்தரவு அரசியல் புள்ளிகளை திரும்பி பார்க்க வைத்தது.

    மருத்துவ மேற்படிப்பு

    மருத்துவ மேற்படிப்பு

    அதேபோல, கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக 2 நீதிபதிகள் ஏற்கனவே மாறுபட்ட கருத்தை கூறியிருந்தார்கள். அப்போது இது சம்பந்தமாக 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் சத்திய நாராயணன்தான். எனவே ஏற்கனவே இவர் 3-வது நீதிபதியாக உத்தரவினை வழங்கியவர்தான்.

    3-வது நீதிபதி

    3-வது நீதிபதி

    இதுபோன்ற சிறப்பு வாய்ந்த தீர்ப்புக்களையும், உத்தரவுகளையும் வழங்கியது சத்திய நாராயணன் என்பதால்தான் இந்த 18 எம்எல்ஏக்கள் குறித்து தீர்ப்பு வழங்கவும் அவரையே நியமனம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+