பாரதிராஜா மகனுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து ஒரு மாசம்தான் ஆகுது! திடீர் மாரடைப்பு! யார் இந்த மனோஜ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 48 வயதாகும் மனோஜ் பாரதிராஜா நடிகர் மட்டுமல்ல, இயக்குநர், பாடகரும் கூட! சிறிய வயதில் இறந்ததற்கான காரணம் என்ன, அவரது உடல்நிலைக்கு என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதி இன்று மாலை 6 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48. இவர் இயக்குநராகவும் பணியாற்றியிருந்தார். மனோஜ் கம்பத்தை சேர்ந்தவர்.

bharathiraja manoj bharathiraja Chennai

இவர் தமிழ் திரையுலகிற்கு வருவதற்கு முன்னர் உதவி இயக்குநராக பணியாற்றினார். இவர் ஃப்ளோரிடா மாகாணத்தில் தியேட்டர் ஆர்ட்ஸ் எனும் படிப்பை படித்துள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ்மகால் எனும் படத்தை பாரதிராஜா இயக்கினார்.

அந்த படத்தில் ரியா சென்னுக்கு ஜோடியாக மனோஜ் நடித்திருந்தார். அந்த படத்தில் பின்னணி இசை ஏ.ஆர்.ரகுமானால் உருவாக்கப்பட்டது. பாடல்களும் அருமையாக இருக்கும். இதைத் தொடர்ந்து அவர் சமுத்திரம், கடல் பூக்கள் எனும் படத்திலும் நடித்திருந்தார்.

இந்த இரு படங்களையும் பாரதிராஜாதான் இயக்கியிருந்தார். ஈரநிலா, சாதுரியன், மகா நடிகன், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். சிம்பு நடித்த மாநாடு படத்திலும் ஜான் மேத்யூ எனும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது போல் விருமன் படத்திலும் முத்துக்குட்டி எனும் ரோலில் நடித்திருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியிருந்தார். இது இவர் இயக்கிய முதல் படம். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அது மட்டுமல்லாமல் மனோஜ் பாடகரும் கூட, தாஜ்மகால் படத்தில் ஏச்சி எலுமிச்சி என்ற பாடலை பாடியிருந்தார்.

மனோஜ், ஏபிசிடி படத்தில் நடித்த நந்தனாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் நீண்டகாலமாக நண்பர்களாக இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சாதுரியன் என்ற படத்திலும் இருவரும் நடித்திருந்தனர்.

இவர்களுக்கு நந்தனாவின் சொந்த ஊரான கோழிக்கோட்டில் கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திருமணம் நடந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் ரிசப்ஷனும் நடந்தது. மனோஜ் பாரதிக்கு ஆர்த்திகா, மதிவதனி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு மனோஜ் பாரதிக்கு சிம்ஸ் மருத்துவமனையில் ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது சேத்துபட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த 3 நாட்களாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+