நான் புவனேஷ்வரியின் புருஷன்! மோடி யார்? அவரது அடையாளம் என்ன? வைலராகும் சந்திரபாபு வீடியோ!
சென்னை: மோடியை மிக மோசமாக சந்திரபாபு நாயுடு விமர்சித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திர மாநில முதல்வராக நாளை சந்திரபாபு நாயுடு பதவியேற்கிறார். என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மோடி பிரதமராகப் பதவியேற்ற விழாவில் கலந்து கொள்வதற்காகத் தனது பதவி ஏற்பு நிகழ்ச்சியைத் தள்ளி வைத்திருந்தார் நாயுடு.
அவரது கட்சியின் இரண்டு எம்பிக்கள் மத்திய அமைச்சராகப் பதவியேற்ற நிலையில், நாளை ஆந்திராவில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சராகப் பதவியேற்க இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெற்றியைப் பதிவு செய்திருந்தது.

பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி, மொத்தமுள்ள 175 இடங்களில் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாயுடுவின் கூட்டணிக் கட்சியான பவன் கல்யாணின் ஜனசேனா 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு கூட்டணிக் கட்சியான பாஜக 8 இடங்களை வென்றுள்ளது. கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இதன் மூலம் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி யாக அமரக் கூடிய அந்தஸ்தைக்கூட இழந்துள்ளது.
கடந்த காலங்களில் மோடி ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த சந்திரபாபு நாடு, மக்களைவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக என்.டி.ஏ கூட்டணியுடன் இணைந்தார்.
மொத்தம் 16 தொகுதிகளில் அவரது கட்சி எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக ஆட்சி அமைப்பதற்கு மெஜாரிட்டி கிடைக்காததால், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் உதவியுடன் மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றுள்ளார்.
இதனால் என்.டி.ஏ கூட்டணி அரசில் 'கிங் மேக்கர்' ஆக நாயுடு கருதப்படுகிறார். கடந்த காலங்களில் காங் கூட்டணியில் இடம்பெற்றிருந்த நாயுடு, தனது மகனின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதற்காகவும் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெறுவதற்காகவும் தான் அமைதியாகத் தனது அரசியல் காய் நகர்த்தலைச் செய்து வருகிறார் என்று ஆந்திர மாநில எதிர்க்கட்சிகள் கருத்து கூறிவருகின்றன.
தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ள கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு ஆந்திர வடக்கு கடலோர தொகுதியான ஸ்ரீகாகுளம் பகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3 முறை எம்பியாக இருந்து அரசியல் அனுபவம் பெற்றவர்.
அவரைப் போலவே என்.ஆர்.ஐ. ஆன பெம்மாசானி சந்திரசேகரும் மத்திய அமைச்சர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவர் இப்போது உள்ள எம்பிக்களில் அதிக பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்தத் தேர்தல் சந்திரபாபு நாயுடுவை மத்தியிலும் மாநிலத்திலும் செல்வாக்கு மிக்க ஆட்சியாளராக மாற்றியுள்ளது. என்.டி.ராமராவ் காலத்திலிருந்து அரசியல் கற்ற இவர், மத்தியில் ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்த மத்திய அரசியலில் தனது முத்திரையைப் பதித்து வருபவர்.
இப்போது மாநில அரசியலில் அவரது மகன் லோகேஷை வளர்த்து எடுக்கும் முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். தனக்குப் பிறகான முதல்வர் வேட்பாளராக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது மகன் லோகேஷை 2014 முதல் 2019 வரை நாயுடு தனது அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பதவியேற்கச் செய்தார். அப்போது புற வாசல் வழியாகத் தனது மகனுக்குப் பதவி வழங்கி இருக்கிறார் நாயுடு என்று பலரும் பேசினார்கள்.
அவரது மகன் மங்களகிரி தொகுதியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து எம்.எல்.சி ஆக்கி அவருக்கு அந்தப் பதவியை சந்திரபாபு கொடுத்ததால், இந்த விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் தான் சந்திரபாபு நாயுடு கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி மீதும் அவரது ஆட்சி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்தச் சண்டை மோடி மட்டும் நாயுடுவுக்கு தனிப்பட்ட மோதலாக மாறியது.
டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நடத்திய போராட்டத்தின் நடுவே பேசிய சந்திரபாபு நாயுடு, "எனக்கும் மோடிக்கும் எந்தத் தனிப்பட்ட சண்டையும் இல்லை.
இது ஆந்திர மக்களுக்கும் மோடி ஆட்சிக்குமான சண்டை. இங்கு மட்டுமல்ல; வடக்கு கிழக்கு மாநிலங்களில் என்ன நடக்கிறது? அந்த மக்களுக்கும் மோடிக்கும் தான் சண்டை நடக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவுக்கும் மோடிக்கும் சண்டை இல்லை. அம்மாநில மக்களுக்கும் மோடிக்கும்தான் கூட சண்டை நடக்கிறது. தமிழ்நாட்டில் கூட அப்படித்தான்" என்று பேசியுள்ளார்.
அவரிடம் நீங்கள் உங்கள் மகனை அரசியலுக்குக் கொண்டு வந்ததால்தான் இந்த மோதல் வந்துள்ளதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
"நான் 1996இல் ஆந்திர முதல்வராக இருந்தபோது எனது மகன் 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். மோடி முதல்வராக 2002இல் தான் வந்தார். நான் கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன்.
நான் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேசிய முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எனப் பல தேசிய கூட்டணிகளைப் பார்த்தவன்.
நான் எனது மகன் லோகேஷுக்கு அப்பாவாக இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். எனது பேரன் தேவாவுக்குத் தாத்தாவாக இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். நான் புவனேஷ்வரியின் கணவனாக இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
நான் மோடியைப் பார்த்துக் கேட்கிறேன். நீங்கள் யார்? உங்களுக்கு ஏதாவது அடையாளம் உள்ளதா? நீங்கள் மூன்று முறை தலாக் சொல்வதை எதிர்க்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்தீர்கள்? நான் நேரடியாக மோடியைக் கேட்கிறேன்.
நான் தனிப்பட்ட முறையில் பேச விரும்பவில்லை. ஆனால், பாஜகவைச் சேர்ந்த சிலர் அந்த எல்லைக் கோட்டை தாண்டிவிட்டார்கள்.
நாங்கள் கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தோம். ஏனென்றால், அரசியல் கட்டாயம். இன்று ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிபிஐ, ஈடி அனைத்தும் ஜனநாயகத்தின் குரலை ஒடுக்கிவருகின்றன.
அனைத்து அமைப்புகளும் சிதைக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஜனநாயகத்தை விரும்புகிறோம். மதச் சார்பின்மையை விரும்புகிறோம். மோடியைவிட மற்ற அனைத்து தலைவர்கள் சிறந்தவர்கள் என்று நான் சொல்வேன்" என்று பேசி இருக்கிறார்.
அந்தப் பேச்சு இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மூத்த பத்திரிகையாளர் இந்து ராம், அவரது எக்ஸ் பக்கத்தில் கூட பகிர்ந்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications