கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்! யார் இந்த முகமது ஜூபேர்?
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் தமிழக அரசால் வழங்கப்படும். இந்த ஆண்டு ஆல்ட் நீயூஸின் முகமது ஜூபேருக்கு பதக்கம் வழங்கப்பட்டிருக்கிறது. யார் இவர்? எதற்காக விருது வழங்கப்பட்டது? என பல்வேறு தரப்பினரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.
குடியரசு தின கொண்டாட்டத்தின்போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகள் வழங்கப்படும். இதில் முக்கியமானது 'கோட்டை அமீர் மத நல்லிணக்க' விருது. மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் அவர்களின் பெயரால் 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' என்ற பதக்கத்தினை தோற்றுவித்து, ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு அப்பதக்கத்தை வழங்கி வருகிறது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு பதக்கமும், ரூ.25,000/-க்கான காசோலை மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு இந்த விருது ஆல்ட் நியூஸின் முகமது ஜூபேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. போலி செய்திகளை அம்பலப்படுத்துவதில் முகமது ஜுபைர் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வந்திருக்கிறார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
"சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணையதளத்தில் வெளியிட்டு மக்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறார். அவரது இந்த பணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க உதவி வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்று தாக்கப்படுகிறார்கள் ஊடகங்களில் சமூக வேகமாக பரவிய காணொளி காட்சிகளின் உண்மை தன்மையை சரிபார்த்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில் காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றது அல்ல என தனது 'Alt News' இணையதளம் மூலம் தெரியப்படுத்தினார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
யார் இவர்?: முகமது ஜூபேர் 'Alt News என்ற பெயரில் இணையதளத்தைத் தொடங்கி போலி செய்திகளை அம்பலப்படுத்தி வருகிறார். இவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டமாகும். கிருஷ்ணகிரியின் தேன்கனிக் கோட்டை வட்டம், தளி பஞ்சாயத்து, உருது பள்ளி தெரு என்ற முகவரியில் இவரது இல்லம் அமைந்திருக்கிறது. ஆனால் இவர் பெங்களூரிருந்து பணியாற்றி வருகிறார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications