கேம் ஓவர்.. முக்கியமான "தலையை" சட்டென.. வீட்டுக்கு அனுப்பிய பிசிசிஐ! உருப்படியான முடிவு! ஆஹா சூப்பர்
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில்தான் முக்கியமான நிர்வாகி ஒருவர் பிசிசிஐ மூலம் நீக்கப்பட்டு உள்ளார்.
இந்திய அணியில் மொத்தமாக சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு நீக்கப்பட்டு உள்ளது. புதிதாக தேர்வுக்குழுவை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளன.
அதேபோல் அணியிலும் பல்வேறு பயிற்சி முறை மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அணியில் ஸ்ப்லிட் கேப்டன்சி கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இது போக அணியின் மன நல ஆலோசகராக இருந்த பேடி அப்டான் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

பேடி அப்டான்
பேடி அப்டான் இந்திய அணியின் மனநல ஆலோசகராக 2008ல் தேர்வு செய்யப்பட்டார். அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக கேரி க்ரிஸ்டன் தேர்வாகி இருந்தார். அவரின் பயிற்சிக்கு கீழ் இவர் மனநல ஆலோசகராக தேர்வாகி இருந்தார். இவரின் வருகைக்கு பின் இந்திய வீரர்களின் செயல்பாடு பெரிதாக மாறியது. அவர்கள் மைதானத்தில் நடந்து கொள்ளும் விதம் சிறப்பாக மாறியது. அச்சமின்றி வீரர்கள் ஆட தொடங்கினார்கள். 2011 உலகக் கோப்பை வெல்ல இவர் முக்கியமான காரணமாக இருந்தார். இந்திய வீரர்கள் ஆஸி, இங்கிலாந்து பவுலர்களை பார்த்து பயந்த காலம் போய், அவர்களை அடித்து வெளுக்கும் காலம் வந்தது.

யார் இவர்?
கேரி க்ரிஸ்டன் - பேடி அப்டான் இருவரும் இந்திய அணிக்கு மிகப்பெரிய தூண்களாக இருந்தனர். இவர்களின் பயிற்சிக்கு கீழ்தான் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி நம்பர் 1 அணியாக மாறியது. 2009ல் இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் அணியாக உருவெடுத்தது. அதன்பின் 2011 இவர் தென்னாபிரிக்க அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2011-14 வரை பேடி அப்டான் தென்னாபிரிக்க அணியின் ஆலோக்ஸராக இருந்தார். அப்போது அந்த அணி 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் நம்பர் 1 அணியாக உருவெடுத்தது. பேடி அப்டான் இதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார்.

ஏன் முக்கியம்
2012-2018 வரை இவர் பல்வேறு அணிகளுக்கு ஆலோசனை அளித்து வந்தார். 12 அணிகளுக்கு இவர் தலைமை கோச்சாக இருந்தார். அதாவது ஐபிஎல், பிபிஎல், பாகிஸ்தான் சூப்பர் லீக் போன்ற தொடர்களில் பல்வேறு அணிகளுக்காக பணிபுரிந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கூட இவர் ஆலோசனை வழங்கினார். அதன்பின் லீக் போட்டிகளில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருந்த பேடி அப்டான் மீண்டும் 2022ல் இந்திய அணிக்குள் வந்தார். 2022 ஜூலை மாதம் ஆசிய தொடருக்கு முன்பாக இவர் மீண்டும் இந்திய அணியின் மனநல ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

முக்கியம்
கிரிக்கெட்டில் வீரர்களின் மனநிலை மிகவும் முக்கியம், மைதானத்தில் வீரர்கள் சரியாக ஆடுவதில் இது பெரிய பங்கு வகிக்கும். இந்திய வீரர்கள் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா பாஸ்ட் பவுலர்களை பார்த்து அஞ்சுவதன் காரணமாக இவரை கொண்டு வந்தனர். ஆனால் பேடி அப்டான் முன்பு போல செயல்படவில்லை. அவரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. முக்கியமாக இந்திய வீரர்கள் மன ரீதியாக மேலும் மோசமானவர்கள். விராட் கோலி மன ரீதியாக கஷ்டப்பட்டு வந்தார். கே. எல் ராகுல் இப்போதும் மன ரீதியாக கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார். அதேபோல் ரோஹித் சர்மாவிற்கு முடிவுகள் எடுப்பதில் சிரமம் உள்ளது. அவர் டென்ஷனாக இருக்கிறார்.

புதிய நிர்வாகி யார்?
ஆனால் இதற்கு எல்லாம் பேடி அப்டான் பெரிதாக தீர்வு கொடுக்கவில்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் பேடி அப்டான் வந்த பின் நிலைமை இன்னும் மோசமானது. 2011 காலத்தில் இருந்ததை போல பேடி அப்டான் பெரிதாக இந்திய அணிக்கு உதவவில்லை. வீரர்களின் மனநிலை மோசமானதே மிச்சம். இந்த நிலையில்தான் ஒரு வழியாக பேடி அப்டானை பிசிசிஐ வீட்டிற்கு அனுப்பி உள்ளது. ஆசிய கோப்பை, உலகக் கோப்பை டி 20 இரண்டிலும் தோல்வி அடைந்ததால் பேடி அப்டான் வீட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளார். இந்த பொறுப்பில் விரைவில் புதிய நிர்வாகி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .












Click it and Unblock the Notifications