28 ஆண்டுகள் தமிழக சட்டசபை உறுப்பினராக இருந்தவர் பரிதி இளம்வழுதி!
Recommended Video

சென்னை: முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் காலமான இவர் சுமார் 28 ஆண்டுகள் தமிழக சட்டசபை உறுப்பினராக இருந்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் பரிதி இளம்வழுதி. இவர் கடந்த 2006-2011-இல் திமுக ஆட்சியில் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். கடந்த 1996-2001- சட்டசபை துணை சபாநாயகராக இருந்தார்.

தமிழக சட்டசபைக்கு 6 முறை தேர்வு செய்யப்பட்டவர். எழும்பூர் தொகுதியில் 1989 முதல் 2011 வரை 28 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தவர். 2011- எழும்பூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் நல்லத்தம்பியிடம் தோல்வி அடைந்தார்.
பின்னர் திமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் 2013-இல் அதிமுகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா காலமானதற்கு பிறகு ஓபிஎஸ் அணியில் இணைந்து பணியாற்றி வந்தார்.
[முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் காலமானார்!]
இதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்தும் விலகி டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications