யார் இந்த புது சென்னை கலெக்டர்? நிஜ ‘சூர்யவம்சம்' தேவயானியே ராஷ்மி தானா? வெற்றிக்கு பின்னால் கணவர்!
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகடே நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளராக இருந்த ராஷ்மி சித்தார்த் ஜகடே ஐஏஎஸ், சென்னை மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த ராஷ்மி சித்தார்த் ஜகடே? இவர்தான் ஒரிஜினல் 'சூர்யவம்சம்' தேவயானி..
யார் இவர்?: 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ராஷ்மி சித்தார்த் ஜகடே,புனேவைச் சேர்ந்தவர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளில் பணியாற்றினார். பின்னர், 2019ஆம் ஆண்டில் 3 ஆண்டுகள் மத்திய பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநராக மகாராஷ்டிராவில் பணியாற்றினார்.

மீண்டும், இந்த ஆண்டு மே மாதம் தமிழ்நாடு பணிக்குத் திரும்பிய ராஷ்மி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது சென்னை மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார் ராஷ்மி சித்தார்த் ஜகடே.
புனேவின் முதல் பெண் ஐஏஎஸ்: 2010ஆம் ஆண்டு புனேவைச் சேர்ந்த ஒரே ஒரு பெண் தான் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவர் ராஷ்மி சித்தாத் ஜகடே. புனேவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியும் இவர் தான். அறிவியல் பட்டதாரியான ராஷ்மி, 2003ஆம் ஆண்டு முதல் சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக தயாராகி வந்தார். தொடர்ந்து 4 முறை தோல்வியுற்றும் தொடர்ந்து போராடி 2010ல் வென்றார்.
தனது 29 வயதில், 169வது ரேங்க் எடுத்து ஐஏஎஸ் அதிகாரி ஆனார் ராஷ்மி. ராஷ்மியின் வெற்றிக்குப் பின்னால் இருந்தவர் சித்தார்த் ஜகடே. ராஷ்மியின் கணவர் சித்தார்த் ஜகடே தான், அவருக்கு உந்து சக்தியாக இருந்து, அவர் ஐஏஎஸ் அதிகாரியாகச் சாதிக்க உதவியவர். ஆனால், அவர் படித்தது வெறும் ஒன்பதாம் வகுப்பு.

சூர்யவம்சம் கலெக்டர்: விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி நடித்த 'சூர்யவம்சம்' திரைப்படத்தில் தேவயானி, ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்கு எல்லா வகையிலும் உதவுவார் பள்ளிப்படிப்பையே தாண்டாத சரத்குமார். குழந்தையைத் தானே பார்த்துக்கொண்டு, வெளியூருக்கு தேவயானியை படிக்க அனுப்பி, அவரது 'கலெக்டர்' கனவு நிறைவேற துணையாக இருப்பார். அப்படி, நிஜ வாழ்வில் 'சூர்யவம்சம்' சின்ராசாக இருந்தவர் தான் ராஷ்மியின் கணவர் சித்தார்த் ஜகடே.
சித்தார்த் ஜகடே சிறுவயது முதலே ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். ஆனால், அவரது தந்தை, அவர் சிறுவயதில் இருக்கும்போது இறந்துவிட்ட நிலையில், குடும்ப பொருளாதார சூழல் காரணமாக பள்ளிப் படிப்பையே தொடர முடியவில்லை. இதனால் அவரது ஐஏஎஸ் கனவு கானல் நீராகப் போன நிலையில், தனது மனைவி ராஷ்மியை ஐஏஎஸ் அதிகாரியாக்க வேண்டும் என விரும்பினார்.
வெற்றிக்குப் பின்னால் கணவர்: கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் கட்டிய தங்கள் வீடு, நிலம், சில்லறை வியாபாரம் செய்து வந்த கடை ஆகியவற்றை விற்று, மனைவி ராஷ்மியை சிவில் சர்வீஸ் பயிற்சி வகுப்புகளில் சேர்த்து, லட்சியத்தை அடைய துணை நின்றார். நான்கு முறை ஐஏஎஸ் தேர்வு எழுதி தோற்ற ராஷ்மி, இனி இது வேண்டாம் என முடிவெடுத்த நிலையிலும் விடாப்பிடியாக அவர் தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வு எழுத ஊக்குவித்தார்.
குழந்தையை தானே கவனித்துக்கொண்டு, ராஷ்மி முழு மூச்சாக குடிமைப் பணிகள் தேர்வுக்கு தயாராக உதவினார். கிட்டத்தட்ட ஏழாண்டு காலம் ராஷ்மி கலெக்டர் ஆவதற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார் சித்தார்த் ஜகடே. அதன் பயனாக, பல முயற்சிகளுக்குப் பிறகு ஐஏஎஸ் அதிகாரி ஆனார் ராஷ்மி. திருமணத்திற்குப் பிறகும் சாதிக்கலாம் என பெண்களுக்கு ரோல் மாடலாக விளங்கும் ராஷ்மி தான் சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கிறார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications