அடேங்கப்பா.. காங். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஹிஸ்டரிய பாருங்க! இத்தனை கட்சிகளில் இருந்துள்ளாரா?
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் செல்வப்பெருந்தகை. செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சிக்கு முன்பாக, புரட்சி பாரதம், புதிய தமிழகம், விசிக, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளில் பணியாற்றியவர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிமங்கலம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வப்பெருந்தகை. திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்பையும், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏவும் படித்தவர். பின்னர், அரசியலில் இயங்கத் தொடங்கினார்.

செல்வப்பெருந்தகை, தனது அரசியல் வாழ்க்கையை பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சியில் இருந்து தொடங்கினார். பின்னர், புரட்சி பாரதம் கட்சியில் இருந்து இருந்து விலகி டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் இணைத்தார். கிருஷ்ணசாமி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியில் இருந்தும் விலகினார் செல்வப்பெருந்தகை.
பின்னர் தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். விசிக சார்பாக 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார் செல்வப்பெருந்தகை. அதன் பின்பு திருமாவளவன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் மாநில தலைவராக செல்வப்பெருந்தகைக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
சுமார் 2 ஆண்டுகள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டு வந்த செல்வப்பெருந்தகை அதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் செல்வப்பெருந்தகை.
2011 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மீண்டும் 2016 சட்டசபை தேர்தல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.
அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக சட்டசபையின் பொதுக் கணக்குக் குழு தலைவராக முதல்வர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு அனைத்துக் கட்சி எஸ்.சி/எஸ் டி நலக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார் செல்வப்பெருந்தகை. இந்நிலையில் தான், கேஎஸ் அழகிரிக்கு பதிலாக, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் செல்வப்பெருந்தகை.
தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கே.எஸ்.அழகிரி தொடர்ந்து வரும் நிலையில், அவர் மாற்றப்பட உள்ளதாக கடந்த பல மாதங்களாகவே கூறப்பட்டு வந்தது. காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை பிடிக்க பல முன்னணி தலைவர்களிடையே போட்டி இருந்து வந்த சூழலில், தற்போது மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் செல்வப்பெருந்தகை.
செல்வப்பெருந்தகை இதுவரை வகித்து வந்த சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, எஸ். ராஜேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பல்வேறு பணிகள் உள்ள நிலையில், திடீரென காங்கிரஸ் மாநில தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications