Semmanalai in TVK: எம்ஜிஆர் கால அதிமுககாரர்.. சுயேட்சையாக வென்ற சேலம் ஜாம்பவான்.. யார் இந்த செம்மலை?

Subscribe to Oneindia Tamil

தாராபுரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்தார். 1980 ஆம் ஆண்டு சுயேட்சை எம்.எல்.ஏவாக தேர்வான செம்மலை, அதிமுக சார்பில், எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் பதவிகளை வகித்தவர்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தாராபுரம் தொகுதியில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தாராபுரம் பொதுக்கூட்டத்தில் இன்று தவெகவில் இணைந்தார்.

Who Is Semmalai From Independent MLA to AIADMK Minister Now Joins TVK

தவெகவில் இணைந்த செம்மலை

முதல்வர் விஜய் வருவதற்கு முன்பே, அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தாராபுரத்தில் நடைபெற உள்ள தவெக பொதுகூட்டத்திற்கு வருகை தந்தார். அவரை தவெக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். முதல்வர் விஜய் வருகை தந்தபோது அவரை செம்மலை வரவேற்றார். செம்மலைக்கு தவெக கட்சித் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்றார் விஜய்.

யார் இந்த செம்மலை?

சேலம் மாவட்டம் ஓலைப்பட்டியைச் சேர்ந்த செம்மலைக்கு தற்போது 81 வயது. எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்து வந்தவர் செம்மலை. 1980 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தாரமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட செம்மலை வாய்ப்பு கேட்ட நிலையில், அப்போது எம்ஜிஆர் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து சுயேட்சையாக தாரமங்கலத்தில் போட்டியிட்டார் செம்மலை.

சுயேட்சை எம்.எல்.ஏ

எம்ஜிஆர் அறிவித்த அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரப் பின்னுக்குத் தள்ளி சுயேட்சையாக வெற்றி பெற்றார் செம்மலை. அதையடுத்து 1984 சட்டசபை தேர்தலில், அதே தாராமங்கலம் தொகுதியில் போட்டியிட செம்மலைக்கு வாய்ப்பு வழங்கினார் எம்ஜிஆர். அந்த தேர்தலிலும் செம்மலை வெற்றி பெற்றார்.

எம்.பி, எம்.எல்.ஏ, அமைச்சர்

அதன்பிறகு 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓமலூர் தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். அந்த தேர்தலிலும் வென்ற அவருக்கு, கல்வி, சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பு தேடிவந்தது.

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் சேலம் ம்க்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆக வெற்றி பெற்றார் செம்மலை. கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர் தற்காலிக சபாநாயகராகப் பணியாற்றினார்.

ஓபிஎஸ் பக்கம்

அதிமுக அமைப்புச் செயலாளராகவும் செயல்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது அவருக்கு ஆதரவாக வந்த எம்.எல்.ஏக்களில் செம்மலையும் ஒருவர். பின்னர் எடப்பாடி பழனிசாமி அணிக்கே திரும்பிவிட்டார். இரண்டாம் முறையாக 2022ல் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது ஓபிஎஸ் பக்கம் செல்லவில்லை.

தவெகவில் செம்மலை

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் செம்மலைக்கு சீட் வழங்கப்படவில்லை. இதையடுத்து அதிருப்தியில் இருந்து வந்த செம்மலை, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் அதிமுகவில் ஏற்பட்ட பூசல்களை தொடர்ந்து, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். கொங்கு மண்டலத்தில் தவெகவின் பலத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+