Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயந்து ஓடிட்டாரே! வரிசையாக 4 ஓபிஎஸ்களை அனுப்பியது யார்? பன்னீர்செல்வம் அரசியல் வாழ்க்கைக்கே சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நிகழ்வுகள் ராமநாதபுரத்தில் நடந்து வருகிறது .

முதல் விஷயம் இவர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதை அவருக்கு நெருக்கமானவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இரட்டை இலை கிடைக்கவில்லை. அப்படி என்றால் போட்டியிடாமல் இருந்திருக்கலாம். பாஜக சின்னத்தில் போட்டியிட்டு இருக்கலாம். சுயேச்சை சின்னத்தில் இறங்குவது தவறு என்று விமர்சனம் வைக்கின்றனர்.

Who is sending so many OPS names candidates against O Panneerselvam in Ramanathapuram

இது போக.. ஓ பன்னீர்செல்வமின் ஊர் தேனி. அப்படி இருக்க அவர் ஏன் ராமநாதபுரத்தில் இறங்க வேண்டும்., டிடிவி தினகரன் சிவகங்கை போன்ற இடங்களில் இறங்கலாம். ஆனால் அவருக்கு தேனியை விட்டுக்கொடுத்தது ஏன்? இது அரசியல் ரீதியாக பெரிய தவறு என்று அவருக்கு நெருக்கமான தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஓ பன்னீர்செல்வம் சொந்த தொகுதியை விட்டுவிட்டு செல்ல கூடாது. ஏற்கனவே அங்கே அன்வர் ராஜா இருக்கிறார். நவாஸ் கனி வெற்றிவேட்பாளர். இப்படி இருக்க சுயேட்சை சின்னத்தில் ஓ பன்னீர்செல்வம் இறங்குவது மோசமான நிலையை ஏற்படுத்தும். ஓ பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அன்வர் ராஜா ஓ பன்னீர்செல்வம் வெற்றிபெற அனுமதிக்கவே மாட்டார். திமுக வேட்பாளரை வெற்றிபெற வைக்க கூட சில அதிமுக தலைகள் முயற்சி செய்யலாம் . சுயேச்சை சின்னம் + ஓ பன்னீர்செல்வம் என்பது மோசமான காம்பினேஷன், என்று அரசியல் விமர்சகர்களும் விமர்சிக்கின்றனர்.

இதெல்லாம் ஓ பன்னீர்செல்வத்திற்கு தோல்வியை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இப்படி இருக்கத்தான் அங்கே ஓ பன்னீர்செல்வத்திற்கு புதிய சிக்கல் ஒன்றும் வந்துள்ளது.

ஒரே பெயர்: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்றோடு வேட்புமனுத்தாக்கல் முடிகிறது. ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இது போக மற்ற நான்கு ஓபிஎஸ்களும் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவர் உசிலம்பட்டியில் வசிப்பவர், மற்றொருவர் காட்டூரைச் சேர்ந்தவர், இருவர் மதுரையைச் சேர்ந்தவர்கள். எல்லோரும் சுயேச்சை என்பதால் கண்டிப்பாக வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உள்ளன.

இதில் வேட்பாளர் நம்பர் 61ன் பெயர் பன்னீர்செல்வம். இவரின் அப்பா பெயர் ஒட்டகரத்தேவர். முன்னாள் முதல்வரின் ஓ பன்னீர்செல்வம் தந்தையின் பெயரும் ஒட்டகரத்தேவர். தமிழில் பன்னீர்செல்வம் என்ற பெயர் பொதுவானது, ஒட்டகரத்தேவர் என்பது பொதுவானது அல்ல. ஆனாலும் அதே பெயர் கொண்டவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

'ஓ'வில் தொடங்கும் பெயர் அரிது. மற்ற பன்னீர்செல்வங்களின் அப்பாக்களின் முறையே ஒச்சப்பன், ஒய்யாரம் மற்றும் ஒய்யாத்தேவர் ஆகும். இவர்களுக்கு விரைவில் சுயேச்சை சின்னம் ஒதுக்கப்படலாம்.

இப்படி ஒரே பெயரில் சுயேச்சை சின்னத்தில் பலர் இறங்குவது "ரியல்" ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக திரும்பும் வாய்ப்புகள் உள்ளன.

யார் அனுப்பியது?: இது போக ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக இத்தனை ஓபிஎஸ்களை அனுப்பியது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நேற்று வேட்புமனு தாக்கல் செய்த மதுரையை சேர்ந்த ஓபிஎஸ்ஸிடம் உங்களை யார் அனுப்பியது.. நீங்கள் மக்களுக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு கூட பதில் சொல்ல முடியாமல் ஓடிவிட்டார்.

அப்படி பதில் கூட சொல்ல முடியாதவர்கள் ஏன் போட்டியிட வேண்டும், இவர்களை ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக களமிறக்கிவிட்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+