இது அவரல்ல! செந்தில் பாலாஜியின் ரைட் ஹேண்ட்? டெல்லியிடம் மாட்டிய செங்கோட்டையன்! யாருங்க இவரு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான செங்கோட்டையன் என்பவர் வீட்டில் இருந்து முக்கியமான ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்து சென்றுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ரெய்டில்.. அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு செய்யப்பட்டதை விட.. அவருக்கு நெருக்கமான நபர்களின் இடங்களில்தான் அதிகம் ரெய்டு நடந்தது. அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் முதலில் 40ல் தான் ரெய்டு நடந்தது. அவரின் தம்பி அசோக் வீட்டில் 2 நாட்கள் மட்டுமே ரெய்டு நடந்தது.ஆனால் முதல் நாளே 40 இடங்கள் 200 இடங்களாக உயர்த்தப்பட்டது.
மைதிலி ரெய்டு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் யாரையும் விட்டு வைக்காமல் வருமான வரித்துறையினர் தீவிரமாக ரெய்டு மேற்கொண்டு வந்தனர். அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரருமான சங்கரானந்தா வீட்டிலும், அலுவலகத்திலும் ரெய்டு மேற்கொண்டு வந்தனர்.
இவர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய நண்பரும் ஆவார். அதேபோல் திமுக நிர்வாகியும், கணக்காளருமான மைதிலி என்பவரது வீட்டிலும் சோதனை நடந்து வந்தது. இவரும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கம் என்பதால் அவரிடமும் வருமான வரித்துறையினர் துருவி துருவி விசாரணை செய்து வந்தனர்.
செங்கோட்டையன்: இந்த நிலையில்தான் தற்போது செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான செங்கோட்டையன் என்பவர் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். இவர் அதிமுக மாஜி அமைச்சர் செங்கோட்டையன் கிடையாது. இவர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான வழக்கறிஞர்.
கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை செய்யப்பட்டு வருகிறது. அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளில் ஆவணங்களை எடுத்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அதை பற்றி விரிவான விசாரணை நடத்த உள்ளனர்.
இவர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கம். அவரின் ஏ டூ இசட் இவருக்கு தெரியும் என்று கூறப்படுகிறது. இவரை பிடித்தால் செந்தில் பாலாஜி பற்றிய விவரங்களை கறக்கலாம் என்பதால் இங்கே வருமான வரித்துறை ரெய்டு நடக்கிறது.
ரெய்டு அதிக இடங்களில் ஏன்? : செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான அதிக இடங்களில் ரெய்டு நடக்க காரணம் உள்ளது. ரெய்டு குறித்து முன்பே தகவல் தெரிந்து கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி ரெய்டுக்கு தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவருக்கு நெருக்கமான ஒருத்தரை விடாமல் ரெய்டு செய்துள்ளனர்.
அவர் ஆவணங்களையோ, பணங்களையோ..உறவினர்களுடைய.. உறவினர்களுடைய.. உறவினர்களிடம் கொடுத்து வைத்து இருக்கலாம் என்பதால்.. ஒருவர் விடாமல் சல்லடை போட்டு ஷாக் கொடுத்துள்ளனர் வருமான வரித்துறையினர். இப்போது வழக்கறிஞரும் அதனால்தான் ரெய்டில் சிக்கி உள்ளார். செங்கோட்டையன் கரூரை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஆவார்.
செந்தில் பாலாஜிக்கு முன்பே விஷயம் தெரிந்து ஆவணங்களை வேறு இடங்களுக்கு மாற்றி இருக்கலாம் என்று சந்தேகித்துதான் ஐடி துறையினர் எதிர்பார்க்காத அளவிற்கு தமிழ்நாடு முழுக்க 200 இடங்களில் ரெய்டு விட்டதாக ஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications