பாங்காக்கில் "ஸ்பை".. முன்பே போட்ட திட்டம்! உளவுத்துறை ஏடிஜிபி செந்தில்வேலன் யார்? ஸ்டாலின் பிளான்?
சென்னை: தமிழ்நாடு உளவுத்துறை ஏ.டி.ஜி.பியாக டேவிட் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு உள்ளார். உளவுத்துறை ஐ.ஜி.,யாக இருந்த செந்தில் வேலன் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக கூடுதல் பொறுப்பு பெற்றுள்ளார்.
காவல் தலைமையாக, ஏ.டி.ஜி.பி.,யாக டேவிட் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம்தான் உளவுத்துறை ஐ.ஜி.,யாக ஐபிஎஸ் கே.ஏ.செந்தில்வேலன் நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில்தான் முன்பு செந்தில்வேலன் இருந்தார். கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி செந்தில் வேலனுக்கு மத்திய அரசு பணிக்கு டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது.

டிஐஜி இந்திய தூதரக பணி பாங்காக் என்ற பொறுப்பில் இவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். பாங்காக்கில் இந்தியாவிற்காக இவர் உளவுப்பிரிவில்தான் பணியாற்றி வந்து இருக்கிறார். சர்வதேச அளவில் சில உளவு தகவல்களை திரட்டி மத்திய உள்துறைக்கு அனுப்பும் பணிகளை செய்து வந்துள்ளார்.
அதன்பின் கடந்த வருடம் ஜூலை மாதம் அவர் மீண்டும் தமிழ்நாடு பிரிவிற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். அப்போதே இவருக்கு உளவுத்துறையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. இவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கும் விதமாகவே தமிழ்நாடு அரசு இவரை திருப்பி கேட்டதாகவும் ஒரு தகவல் வந்தது.
ஏனென்றால் கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு முன்பாகவே கடந்த வருடம் மார்ச்சில் அரியலூர் மாணவி மரணத்தில் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன. இடையில் சில உளவுத்தகவல்கள் கசிந்ததாகவும் கூட கூறப்பட்டன. இப்படிப்பட்ட நிலையில்தான் செந்தில்வேலன் தமிழ்நாடு உளவுத்துறைக்கு உள்ளே வந்தார். உளவுத்துறை ஐ.ஜி.,யாக இருந்த செந்தில் வேலன் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக கூடுதல் பொறுப்பு பெற்றுள்ளார்.
செந்தில்வேலன் மிகவும் திறமையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். உளவு பணியில் அனுபவம் கொண்டவர். இதுவரை பெரிய பிளாக் மார்க் எதுவும் இல்லாதவர். ஏற்கனவே பல முக்கிய வழக்குகளை இவர் நன்றாக கையாண்டு இருக்கிறார்.
முக்கியமாக பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் 2011ல் நடந்த போது அதை இவர் கையாண்ட விதம் கவனம் பெற்றது. இப்போது உளவுத்துறையை மீண்டும் சரியாக பாதைக்கு கொண்டு செல்லும் டாஸ்க் இவருக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது உளவுத்தகவல்களை முறையாக கொடுப்பது, அதற்கு அழுத்தம் கொடுப்பது போன்ற பல மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதல்வர் ஸ்டாலின், செந்தில் வேலனை களமிறக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு உளவுத்துறை சார்பாக முக்கிய பல டாஸ்குகள் கொடுக்கப்படலாம். முக்கியமாக நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பல அசைன்மெண்டுகளை முதல்வர் கொடுக்கலாம். அதிலும் அரசிடம் இருந்து கசியும் சீக்ரெட்டுகளை பற்றியும் இவருக்கு பல அசைன்மெண்டுக்கள் கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
பணியிட மாற்றம்: நேற்று உளவுத்துறை ஏடிஜிபி உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவஆசீர்வாதம் சென்னை தலைமையக ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் சென்னை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் சங்கர், சென்னை ஆவடி போலீஸ் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். உளவுத்துறை ஏடிஜிபி இடமாற்றதாதல் அவரது பணி உளவுத்துறை ஐஜி செந்தில் வேலனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications