2 இனிஷியல்! காசியில் ஓபிஎஸ் பார்த்த சீக்ரெட் நபர்! எடப்பாடி ஆட்டையை கலைக்கும் கர்நாடக புள்ளி! போச்சே
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில்தான்.. அதில் கர்நாடக புள்ளி ஒருவர் தலையிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ஓ பன்னீர்செல்வம் சில ரகசிய சந்திப்புகளை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
மெகா சீரியல் கணக்காக அதிமுக உட்கட்சி மோதல் நீண்டு கொண்டே இருக்கிறது. அதிமுக நான்காக உடைந்துவிட்டது. இதில் பாஜக குளிர்காய்ந்து கொண்டு இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்யும் அளவிற்கு கட்சி மோதல் கையை மீறி சென்றுள்ளது.
தினமும் ஒருவர் அணி மாறுவது.. ஒருவரை கட்சியை விட்டு நீக்குவது என்று அதிமுகவில் கடுமையான மோதல்கள் நிலவி வருகின்றன. இன்று கூட அதிமுகவில் மைத்ரேயன் ஓ பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.
இதையடுத்து அவரை கட்சியில் இருந்தே நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதிமுக
அதிமுகவில் இப்படி உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் சமீபத்தில் முக்கியமான நபர் ஒருவரை சந்தித்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் காசிக்கு பயணம் மேற்கொண்டார். மறைந்த தனது மனைவியின் அஸ்தியை கரைப்பதற்காக ஓ பன்னீர்செல்வம் காசிக்கு பயணம் மேற்கொண்டார். இது மட்டுமின்றி இந்த பயணம் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றது. இந்த பயணத்தில் சில டெல்லி பாஜக தலைவர்களை ஓ பன்னீர்செல்வம் சந்தித்தார் என்று கூறப்படுகிறது.

சந்திப்பு
அதோடு இல்லாமல் கர்நாடகாவை சேர்ந்த மூத்த பாஜக புள்ளி ஒருவரையும் ஓ பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜகவில் அதிக வாய்ஸ் உள்ள நபர் அந்த புள்ளி. அவரை சந்தித்து அதிமுக விவகாரத்தில் உதவும்படி ஓபிஎஸ் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து உடுப்பி வந்து என்னை பாருங்கள் என்று ஓ பன்னீர்செல்வத்திற்கு அந்த புள்ளி உத்தரவிட்டுள்ளாராம். இதன் காரணமாக இவர்கள் இருவரும் சமீபத்தில் உடுப்பியிலும் சந்திப்பு நடத்தி உள்ளனர்.

உடுப்பி
உடுப்பியில் நடந்த சந்திப்பில் அதிமுக விவகாரங்கள் குறித்து இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இதில் கண்டிப்பாக உங்களுக்கு ஆதரவாக டெல்லி நிற்கும் என்று ஓ பன்னீர்செல்வத்திடம் அந்த பாஜக புள்ளி தெரிவித்து இருக்கிறாராம். அந்த இரண்டு இனிஷியல் கொண்ட பாஜக புள்ளி.. நீங்கள் கவலைப்பட வேண்டாம். இறுதியில் எல்லாம் நமக்கு சாதகமாகவே நடக்கும் என்று வாக்குறுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வமும் நம்பிக்கையாக இருக்கிறாராம்.

நம்பிக்கை
இந்த நம்பிக்கையில்தான் அதிமுகவில் இருக்கும் எதிரணி சீனியர்களிடம்.. என் பக்கம் வந்துவிடுங்கள். டெல்லி என்னுடன்தான் இருக்கிறது என்று கூறி வருகிறாராம். இப்போது மைத்ரேயன் தொடங்கி இன்னும் பலர் ஓபிஎஸ் பக்கம் சாய ரெடியாக இருப்பது இந்த டெல்லி சப்போர்ட் காரணமாகத்தான் என்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் பொதுக்குழு வழக்கிலும் பெரும்பாலும் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவே முடிவு வரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications