Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இவரா".. நடிகை சித்ராவின் மரணத்துக்கு காரணம் அந்த அரசியவாதியா?.. ஹேமந்த் பரபர தகவல்.. என்ன நடந்தது?

நடிகை சித்ராவின் மரணத்தில் தொடர்புடைய அரசியல்வாதி யார் என்று தெரியவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சித்ராவின் மரணத்தில் அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக சித்ராவின் கணவர் ஹேமந்த் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல டிவி நடிகை சித்ரா, சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில், தனது கணவர் ஹேமந்த்துடன் தங்கியிருந்தார்.

அப்போது அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் மரணம் குறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்ஐ காமராஜ், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

 சித்ரா மரணம்

சித்ரா மரணம்

அதன் பேரில் போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேமந்த்தை கைது செய்தனர்.. ஆனால், அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.. இதற்கு பிறகு சித்ரா கேஸ் எந்த அளவில் இருக்கிறது என்று தெரியவில்லை.. ஆனால் சித்ரா மரணத்தில் அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதே தகவல்கள் வந்த நிலையில், அந்த அரசியல்வாதி யார் என்று தெரியவில்லை.

 சித்ரா மர்மம்

சித்ரா மர்மம்

இப்படிப்பட்ட சூழலில், தற்போது ஒரு திடுக்கிடும் தகவலை சித்ராவின் கணவர் ஹேமந்த் தெரிவித்துள்ளார். சித்ராவின் மரணத்தில் அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த், சித்ரா மரணத்திற்கு காரணமான அரசியல் தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தலைவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகும் என்றும் ஓபனாகவே தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இதைதவிர போலீசில் ஹேமந்த் புகார் ஒன்றை தந்துள்ளார்.

 சித்ரா மரணம்

சித்ரா மரணம்

அந்த புகாரில் உள்ளதாவது: "என்னுடைய மனைவியான சித்ராவும், தானும் மிகுந்த அன்னியோன்யத்துடன் இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது சின்னத்திரை பிரபலங்கள் எல்லாருக்கும் தெரியும். என்னுடைய மனைவி சித்ரா தற்கொலை செய்துகொண்டபோதே நானும் எனது வாழ்வை முடித்து கொள்ள எண்ணினேன்.. ஆனால், என்னுடைய மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக என் மீது சேறு வாரி இறைத்தவர்கள் முன்பு, நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கவே இன்னும் உயிருடன் இருக்கிறேன்.

தற்கொலை

தற்கொலை

என்னுடைய மனைவியின் தற்கொலைக்கு பிறகு, பணபலமும், அரசியல் பலமும் கொண்ட மாபியா கும்பல் இருப்பது பலருக்கும் தெரிந்த உண்மை.. அவர்களுக்கு பயந்து அதை வெளியில் சொல்ல அனைவரும் தயங்குகிறார்கள் அவர்களின் பண பலத்துக்கு முன்னால், என்னை போன்ற சாதாரண மனிதனால் எதுவும் செய்ய இயலாது. அப்படி செய்தாலும் என்னுடைய மனைவி எனக்கு திரும்ப கிடைக்க போவதில்லை என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

 யாமினி

யாமினி


என் மீது சுமத்தப்பட்டுள்ள பழியை போக்கவே இப்போது வாழ்ந்து வருகிறேன். சுப்பாராம், சரோஜாராவ், மதுசூதனன், சாய் வெங்கடேஷ், யாமினி, இம்மானுவேல் ராஜா உள்ளிட்ட 7 பேர் அடங்கிய ஒரு கும்பல் என் மூலம் என்னுடைய மனைவி சித்ராவின் தற்கொலைக்கு காரணமாக இருந்த பணபலம் படைத்த மாபியா கும்பலை தொடர்பு கொண்டு அவர்களிடம் இருந்து பணம் பெற முயல்கிறார்கள். இந்த செயலுக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் என்னை கொலை செய்துவிடுவதாக அந்த கும்பல் மிரட்டுகிறது.

 பழிக்கு பழி

பழிக்கு பழி

இன்னொருபுறம் என் மனைவியின் தற்கொலைக்கு காரணமான கும்பலின் பெயரை வெளியில் சொன்னால், என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவோம் என்று அவர்கள் மிரட்டுகிறார்கள். இவ்வாறு இரு தரப்பில் இருந்தும் மாறி மாறி என்னை மிரட்டி வருவதால், என்னுடைய உயிருக்கு பெரும் ஆபத்து இருக்கிறது. என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கும்வரை, நான் உயிரோடு இருக்க விரும்புகிறேன்.. உயிருக்கு பயந்து என் வீட்டிலிருந்து வெளியேறி இன்னொரு இடத்தில் தஞ்சம் புகுந்துள்ளேன்..

ஹேம்நாத்

ஹேம்நாத்

என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க எனக்கு உரிய பாதுகாப்போ அல்லது தன்னுடைய சொந்த செலவில் போலீஸ் பாதுகாப்போ வழங்கி தன்னுடைய உயிரை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் முன்பு, என்னுடைய உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், என் மனைவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்தவர்கள் என இறப்புக்கு முன்பு என் மனைவி சொன்ன பெயர்களையும், அவர்களின் விவரங்களையும் என்னுடைய நம்பிக்கைக்கு உரிய சிலர் வெளிக்கொணருவார்கள்" என்று ஹேம்நாத் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

கணவர் பேட்டி

கணவர் பேட்டி

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த், "எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை. உயிருக்கு பயந்து இப்போது ஒரு வழக்கறிஞர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளேன்.. சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் அரசியல் அதிகாரம் மிக்கவர்கள்.. அவர்கள் யார் என்று நேரம் வரும்போது தெரியும்.. அல்லது என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டால், அப்போது எனக்கு நம்பிக்கைக்குரியவர்கள் அவர்களின் பெயர்களை வெளிப்படுத்துவார்கள்.. ஆனால், சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் அரசியல் அதிகாரமிக்கவர்கள்.. அவர்கள்தான் என் உயிருக்கும் குறி வைத்துள்ளனர்" என்று கூறியிருக்கிறார். சித்ராவின் மரணம் தற்கொலை என்றிருந்த நிலையில் தற்போது அரசியல் தலைவர் தொடர்பு இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+