சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அந்த" அதிமுக அமைச்சரா?.. அப்ப அரசியவாதி அவரா?.. சித்ரா சாகும்முன் சொன்னது என்ன?..குழப்பும் ஹேம்நாத்

: நடிகை சித்ராவுடன் தொடர்பில் இருந்த மாஜி உட்பட 4 பேர் யார் என்று தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: சித்ராவின் தற்கொலைக்குப் பின்னால் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் இருப்பதாக சித்ராவின் கணவர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை சித்ரா, கடந்த 2020-ல், ஒரு தனியார் ஹோட்டர் ரூமில் தூக்கு போட்டு தொங்கிவிட்டார்.. சடலமாக மீட்கப்பட்டார்...

தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தீபராஜன்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்... ரூ.5 லட்சம் நிவாரணம் தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தீபராஜன்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்... ரூ.5 லட்சம் நிவாரணம்

இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 குற்றப்பத்திரிகை

குற்றப்பத்திரிகை

ஆனால், இந்த வழக்கில் 60 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததை கருத்தில் கொண்டு ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.. அதற்கு பிறகு சித்ரா மரண வழக்கு தொடர்பாக எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.. சில மாதங்களுக்கு முன்பு சித்ராவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி வந்தபோது, அந்த மரணம் குறித்த விசாரணை எந்த அளவுக்கு இருந்தது என்று தெரியவில்லை.

 மாஜி அமைச்சர்

மாஜி அமைச்சர்

இப்படிப்பட்ட சூழலில்தான், சித்ராவின் மரணத்தில் ஒரு முக்கிய அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக ஹேம்நாத் தெரிவித்துள்ளார்... "சித்ரா மரணத்திற்கு காரணமான அரசியல் தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. உண்மையை சொன்னால் உன்னை கொன்றுவிடுவோம் என மிரட்டுகிறார்கள். நான் உயிருக்கு பயந்து என்னுடைய வழக்கறிஞர் வீட்டில் தங்கியிருக்கிறேன். எனது மனைவியின் மறைவிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை நான் உயிர் வாழ விரும்புகிறேன்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

ஒரு வேளை அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் முன்னரே இறந்துவிடும் நிலை வந்தால் என் மனைவி இறப்பதற்கு முன் என்னிடம் கூறிய தகவல்களை வெளியிடுவேன்" என கூறியுள்ளார். ஹேம்நாத் தெரிவித்திருக்கும் இந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்து இந்த வழக்கில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது... இதுகுறித்து சித்ராவின் ரசிகர்கள் கூறும்போது, "சித்ரா இறந்ததுமே ஹேம்நாத்தை கைது செய்து விசாரித்தார்களே, அப்போதே ஏன் 4 பேருடன் சித்ராவுக்கு தொடர்பு இருந்தது என்று சொல்லவில்லை? முன்னாள் அமைச்சர், மற்றும் தொழிலதிபர் ஒருவரின் டார்ச்சர் குறித்து சித்ரா இறந்தபோதே செய்திகள் பரபரத்தன. அப்போதுகூட இதை பற்றி ஹேம்நாத் போலீசாரிடம் எதுவும் சொல்லவில்லையே ஏன்?

 4 பேருக்கு தொடர்பு

4 பேருக்கு தொடர்பு

இப்போதுகூட சித்ராவுக்கு டார்ச்சர் செய்த நபர்கள் யார்? தொடர்பில் இருந்த 4 பேர் யார்? என்ற பெயர்களைகூட தெரியப்படுத்தாததற்கு என்ன காரணம்? தனக்கு உயிருக்கு ஆபத்து என்பதாலேயே, பாதுகாப்பு கோரி போலீசுக்கு வந்துள்ளாரா? என்ற பல சந்தேகங்களை எழுப்புகிறார்கள்.. அதுமட்டுமல்ல, கடைசி காலத்தில் சித்ரா தன்னிடம் பாசத்துடன் வாழ்ந்ததாக சொல்லும், ஹேம்நாத் எதற்காக சித்ராவின் மரணத்திற்கு செல்லவில்லை என்ற கேள்வியையும் ஒரு தரப்பினர் காட்டமாக எழுப்புகின்றனர்.

அரசியல்வாதி

அரசியல்வாதி

"நான் முன்னரே இறந்துவிடும் நிலை வந்தால் என் மனைவி இறப்பதற்கு முன் என்னிடம் கூறிய தகவல்களை வெளியிடுவேன்" என்று இப்போது சொல்கிறாரே, இதை ஏன் போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போது ஹேம்நாத் சொல்லவில்லை.. ஒருவேளை, தங்களின் மகளின் மரணத்துக்கு ஹேம்நாத்தான் காரணம் என்று சித்ராவின் பெற்றோர் கதறி வரும் சூழலில் அதிலிருந்து தப்பிப்பதற்காகவும், அனைவரது கவனத்தையும் தன்னிடமிருந்து விலக்குவதற்காகவும் ஹேம்நாத் இப்படி சொல்கிறாரா? அரசியல்வாதி, மாஜிஅமைச்சர், மாபியா கும்பல் என்று குட்டையை குழப்புகிறாரா? என்றும் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

 மாஜி அமைச்சர்

மாஜி அமைச்சர்

எது எப்படியோ, ஹேம்நாத் அளித்த புகாரை, உடனடியாக விசாரிக்க வேண்டும், சித்ரா மரணம் தொடர்பாக குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது, யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என ஆதங்கத்துடன் கூறி வருகிறார்கள்.. ஆட்சி மாற்றம் நடந்துள்ள இந்த சூழலில், கடந்த காலங்களில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில், நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணமான அந்த அரசியல் தலைவர் யார்? அவருக்கு சித்ராவின் மரணத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

 ஹேம்நாத்

ஹேம்நாத்

அதுமட்டுமல்ல, "என் மனைவி இறப்பதற்கு முன் என்னிடம் சொன்ன தகவல்களை வெளியிடுவேன்" என்று ஹேம்நாத் சொல்லி உள்ள நிலையில், சித்ரா இறப்பதற்கு முன்பு அப்படி என்ன சொன்னார் என்ற ஆர்வமும் அதிகமாகவே எழுந்து வருகிறது. இந்த சூழலில்தான், சித்ராவின் தற்கொலைக்கு பின்னால் அதிமுக முன்னாள் அமைச்சர் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்த புகார் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாம்.. இதையடுத்து யார் அந்த அரசியல்வாதி? யார் அந்த மாஜி அமைச்சர்? என்ற ஆவல் சித்ராவின் ரசிகர்களையும் தாண்டி தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது..!

English summary
who is that politician and Actress vj Chitras husband hemnath says about the secret, நடிகை சித்ராவுடன் தொடர்பில் இருந்த மாஜி உட்பட 4 பேர் யார் என்று தெரியவில்லை
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X