யார் அது? லிடியன் இசையை கேட்டு.. பரவச நிலைக்கு போன வெளிநாட்டவர்.. பின்னணியில் நெகிழ வைக்கும் கதை!
சென்னை: நேற்று செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்வில் லிடியன் இசையை கேட்டு மெய்மறந்து ரியாக்சன் கொடுத்த நீல கோட் அணிந்து இருந்த வெளிநாட்டவர் ஒருவர் அதிகம் கவனம் ஈர்த்தார். இவரின் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் விழா நடைபெற்று வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் மேடையில் நேற்று லிடியன் பியானோ வாசித்து அசத்தினார். வெளிநாட்டினர் பலர் இவரின் வாசிப்பு திறமையை பார்த்து சிலிர்த்து போனார்கள்.

பியானோ
தொடக்கத்தில் லிடியன் கண்ணை கட்டிக்கொண்டு நாதஸ்வரம் வாசித்தார். பின்னர் இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் இரண்டு பியானோ வாசித்தார். தொடக்கத்தில் மெதுவாக வாசித்தவர் அப்படியே நேரம் செல்ல செல்ல வேகத்தை கூட்டினார். இவர் வாசித்ததை பார்த்தது அங்கு அமர்ந்து இருந்தவர்கள் பலரும் மெய் சிலிர்த்து போனார்கள். ரஜினி, கார்த்தி ஆகியோரும் இதை பார்த்து வியந்து போனார்கள்.

வெளிநாட்டவர்
நேற்று இந்த நிகழ்வில் லிடியன் இசையை கேட்டவர்களில் நீல கோட் அணிந்து இருந்த வெளிநாட்டவர் ஒருவர் அதிகம் கவனம் ஈர்த்தார். லிடியன் இசையை கேட்டு உற்சாகமாக கையை அசைத்து, பரவச நிலைக்கு சென்றது போல இவர் காணப்பட்டார். பல முறை வாயை பிளந்து, கையை அசைத்து உற்சாகமாக காணப்பட்டார். பேஸ்புக்கிலும் இவரின் வீடியோ தீயாக பரவி வருகிறது. இவரின் வீடியோவை தமிழ் பாடல்களுக்கு எடிட் செய்து பலர் "வைப்" செய்து வருகிறார்கள்.

யார் அது?
ஆனால் இவர் நேற்று லிடியன் இசைக்கு மெய்மறந்து கையசைக்க வேறு ஒரு காரணமும் இருக்கும். இவர் பெயர் கேன் வில்கின்சன். சர்வதேச செஸ் கூட்டமைப்பான பிடே (International Chess Federation -FIDE) அமைப்பின் துணை தலைவர் இவர்தான். அதனால்தான் முன் வரிசையில் இவர் அமர்ந்து இருந்தார். இந்த நிகழ்வை இந்தியா கொண்டு வர, முக்கியமாக தமிழ்நாடு கொண்டு வர சம்மதித்தவர்களில் இவரும் முக்கியமான நபர். இதனால் இவருக்கு சிறப்பு வரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது.

என்ன காரணம்?
ஜமைக்காவை சேர்ந்த இவர்.. நேற்று நடந்த நிகழ்வை பெரிதும் கொண்டாடியதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு கேன் வில்கின்சன் அளித்த பேட்டியில்.. இந்த நாள் சிறப்பாக இருந்தது. எல்லாம் பிரம்மாண்டமாக இருந்தது. விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி. பியானோ நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. முன்பு சிறிய வயதில் நான் பியானோ வாசித்து இருக்கிறேன்.

ஆர்வம்
எனக்கு அதில் ஆர்வம் இருந்தது. பின்னர் செஸ் ஆட ஆரம்பித்ததால்.. பியானோ மீது கவனம் செலுத்த முடியவில்லை. இன்று அதனால் பியானோ நிகழ்ச்சியை வெகுவாக ரசித்தேன் என்று கூறியுள்ளார். நேற்று இவர் பியானோ நிகழ்ச்சிக்கு கொடுத்த ஒவ்வொரு ரியாக்சனும் பலரையும் ஈர்த்தது. சிறு வயதில் தனக்கு விருப்பமான பியானோ இசையை தொடர முடியாத கேன் வில்கின்சன் நேற்று லிடியன் பியானோ இசைத்ததும் அதை மெய்மறந்து போய் ரசித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications