1993 பேட்ச்.. மிக முக்கிய பொறுப்பிற்கு ஸ்டாலின் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யாரிந்த "தீரன்" தீரஜ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். அதிகாரிகள் மாற்றத்திற்கு இடையே மிக முக்கியமான பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவரும் மாற்றப்பட்டு உள்ளார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஜவுளித்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ias m k stalin

மீன்வளத்துறை மேலாண் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கெஜலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். திருநெல்வேலி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஈரோடு வணிகவரி இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

அறநிலையத்துறை ஆணையராக இருந்த முரளிதரன் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

முக்கிய அதிகாரி மாற்றம்: தமிழ்நாட்டில் இன்று பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். அதிகாரிகள் மாற்றத்திற்கு இடையே மிக முக்கியமான பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவரும் மாற்றப்பட்டு உள்ளார். அதன்படி உள்துறை அமைச்சராக இருந்த அமுதா ஐஏஎஸ் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

அவருக்கு பதிலாக தீரஜ் குமார் ஐஏஎஸ் அந்த பணிக்கு வந்துள்ளார். கடந்த வருடம் மே மாதம், அமுதா ஐஏஎஸ் உள்துறைக்கு கொண்டு வரப்பட்டது மிக பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. கடந்த 2021ம் வருடம் திமுக ஆட்சிக்கு வந்த பின் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக இருந்த அமுதாவை விடுவித்து அதற்கான ஆணையை பிறப்பித்திருந்தது மத்திய அரசு. மாநில அரசு இவரை மீண்டும் கேட்டதாக அப்போதே செய்திகள் வந்தன.

அமுதா ஐஏஎஸ்: அதனடிப்படையில், மாநில பணிக்கு திரும்பும் அமுதா, எந்த துறையில் நியமிக்கப்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் அப்போதே இருந்தது. இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பதவி அமுதாவிற்கு கொடுக்கப்பட்டது

அப்போது வேறு வழியின்றி அவருக்கு தற்காலிகமாக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து அதன்பின் உள்துறை செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இவர் மறைந்த முதல்வர் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் பணிகளை செய்து ஸ்டாலினுக்கு நெருக்கமானது குறிப்பிடத்தக்கது.

சட்ட ஒழுங்கு: இப்படிப்பட்ட நிலையில்தான் சட்ட ஒழுங்கை அவர் சரியாக கவனிக்கவில்லை என்று மாற்றப்பட்டு உள்ளார். முக்கியமாக கள்ளச்சாராய விவகாரத்தில் சரியாக செயல்படவில்லை என்று மாற்றப்பட்டு உள்ளார்.

உள்துறை என்பது முதல்வர் ஸ்டாலினின் துறை. ஸ்டாலினின் டீமிற்கு வந்து இருக்கும் அமுதாவுக்கு முக்கியமான சில டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு உள்ளதாம். பி.அமுதா வருவாய்த் துறை செயலராகவும், தகவல் தொழில்நுட்பத் துறை செயலராக இருந்த தீரஜ்குமார் உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

யார் இவர்?: தீரஜ் குமார் ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாடு 1993 பேட்ச், இவர் இதற்கு முன் தமிழ்நாடு அரசின் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக இருந்துள்ளார். அதற்கு முன் பல முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.

மிகவும் அனுபவம் வாய்ந்த இவர்.. ஸ்டாலினின் நேரடி தேர்வு என்று கூறப்படுகிறது. மிகவும் ஸ்ட்ரிக்ட் அதிகாரி. சட்ட ஒழுங்கில் மாஸ்டர்மைண்ட். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சரி செய்ய நேரடியாக இவரை ஸ்டாலின் களமிறக்கி உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+