"வளையத்துக்குள்" வந்த "பவர்புல்" லீடர்.. பின்னாலயே வர்றாங்களாமே.. அப்ப அடுத்து "இவரா"?.. பரபர கோட்டை
சென்னை: செந்தில் பாலாஜி விவகாரம் இன்னமும் பரபரத்து வரும்நிலையில், அடுத்த குறி யாருக்கு என்ற யூகங்கள் ஒருபக்கம் கிளம்ப.. அது தொடர்பான சில தகவல்களும் இணையத்தில் வட்டமடிக்க துவங்கி உள்ளன.
ஆளுங்கட்சி இருக்கும் சூழலிலேயே அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர், அதுவும் மிக மிக முக்கியமான அமைச்சர், அதுவும், முதல்வரின் நேரடி நன்மதிப்பை பெற்ற செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய பேசுபொருளாக எழுந்துவிட்டது.
ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் என்னவோ அதிமுக ஆட்சியில் நடந்ததாக இருந்தாலும், தலைமை செயலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தியதும், தொடர் விசாரணைகளும், கைது நடவடிக்கைகளும், திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருப்பது விசித்திரமாக இருந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்..
முக்கிய குறி: சட்டரீதியான விவகாரம் உட்பட அனைத்து சிக்கல்களையுமே செந்தில் பாலாஜி, நாலாபக்கமும் சமாளித்து மேலெழுந்தவந்தநிலையில்தான், "முகாந்திரம் இருந்தால் முதலில் இருந்து வழக்கை விசாரிக்கலாம்" என்று சுப்ரீம்கோர்ட் செக் வைத்தது.

கிணற்றில் போட்ட கல்: செந்தில்பாலாஜிக்கு இங்கிருந்துதான் பிடி இறுக தொடங்கியது.. செந்தில் பாலாஜியை சுற்றி நடந்து கொண்டிருந்த ரெய்டு, நேரடியாகவே பாய்ந்தது.. நேரடியாகவே குறி வைக்கப்பட்டார்.. எதற்கும் அசையாத அமைச்சர் செந்தில் பாலாஜியையே, அமலாக்கத்துறை கைது செய்துவிட்டதே என்பதால், திமுக அமைச்சர்களில் சிலருக்கு கிலி சூழ்ந்துள்ளதாம்.. ஏற்கனவே, டெல்லி டார்கெட் செய்யப்பட்ட லிஸ்ட்டில் மொத்தம் 5 திமுக அமைச்சர்கள் இருப்பதாக சொல்லப்பட்டது.. அந்த 5 அமைச்சர்கள் யார் என்ற லிஸ்ட்டும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது..
டாப் 5 : சில நாட்களுக்கு முன்பு, இந்த நபர்களில் டாப் 2 அமைச்சர்கள் பெயர்கள் சலசலக்கப்படுகின்றன.. ஒருவர் கொலை முயற்சி வழக்கில் சிக்கியவராம்.. மற்றொருவர் பொறியியல் கல்லூரி வைத்து நடத்தி வருபவராம்.. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஏற்கனவே நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக நடந்து வரும்நிலையில், கூடிய சீக்கிரம் சம்பந்தப்பட்ட இடங்களிலும் ரெயிடு பாயலாம் என்றெல்லாம் தகவல்கள் பரபரத்தன.
இப்படிப்பட்ட சூழலில்தான், இன்னொரு தகவலும் கசிந்து கொண்டிருக்கிறது.. வளையத்துக்குள் வரும் அடுத்த, இந்த கைதையடுத்து, வருமான வரி துறையும், அமலாக்கத் துறையும், அடுத்தக்கட்ட நகர்விற்கு தயாராகி வருகிறதாம்.
முக்கிய குறி: அதாவது, தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களுக்குள், இன்னொரு சம்பவமும் நடைபெற போவதாக சொல்கிறார்கள்.. இதற்காக ஒரு முக்கிய நபரை டெல்லி அதிகாரிகள் குறி வைத்திருக்கிறார்கள்.. அந்த நபர் குறித்த பல ஆவணங்களை, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி துறை ஏற்கனவே கைப்பற்றிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
'பவர்புல்': இந்த 'பவர்புல்' நபர் குறித்த பல ஆவணங்கள் கிடைத்துவிட்டதாம்.. எனினும் இப்போதைக்கு அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டாம்.. சற்று பொறுமை காக்கலாம் என்று உத்தரவு தரப்பட்டுள்ளதாம்.. அநேகமாக அக்டோபர் மாதத்திற்கு முன்பாகவே, அந்த பவர்புல் பிரமுகர் குறித்த விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கை ஆரம்பிக்கும் என்கிறார்கள்.. இந்த அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள், வரும் எம்பி தேர்தலில் தங்களுக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும் என்றும் மேலிடம் நம்புகிறதாம்.
கலக்கம்: இந்த கலக்கம் திமுகவில் மட்டுமல்ல, அதிமுகவுக்கும் சூழ்ந்துள்ளதாம்.. ஏற்கனவே, ஏற்கனவே, அதிமுக பைல்ஸ் வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த கலக்கம் மேலும் அதிகரித்துள்ளதாக சொல்கிறார்கள்.. செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு முந்தைய நாள்தான், அதிமுக கூட்டத்தில் தமிழக பாஜகவை கண்டித்து தீர்மானமும் இயற்றப்பட்டிருந்தன.. ஆனால், அதற்கு பிறகு, பாஜகவை விமர்சிக்காமல் அதிமுக ஒதுங்கியே உள்ளது என்றும் கூறுகிறார்கள்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications