இத்தனை லட்சம் கோடியா? பூமியின் மிகப்பெரிய கோடீஸ்வரரே இவர் தான்! எலான் மஸ்க், அம்பானிலாம் ஓரம்போ!
சென்னை: உலகில் உள்ள தங்கத்தில் பாதியை சொந்தமாக வைத்து கொண்டு இந்த பூமி தோன்றியதில் இருந்து அதிக சொத்துகளுடன் மிகப்பெரிய பணக்காரராக ஒருவர் இருந்துள்ளார். அவரை தற்போது வரை எலான் மஸ்க், அம்பானி உள்பட யாராலும் நெருங்க கூட முடியவில்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அவர் யார்? அவரது பின்னணி என்ன? என்பதை அறிந்தால் நிச்சயம் நீங்கள் வியப்படைவீர்கள்.
தற்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரராக அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் உள்ளார். கடந்த ஆண்டு நிலவரப்படி இவரது சொத்து மதிப்பு என்பது 251 பில்லியன் அமெரிக்க டாலராகும். இவருக்கு அடுத்தப்படியாக 2வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஜாஸ் உள்ளார். இவரது சொத்து மதிப்பு என்பது 153 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 3வது இடத்தில் இருந்தவர் தான் இந்தியாவின் கவுதம் அதானி. இவரது சொத்து மதிப்பு என்பது ரூ.137.4 பில்லியன் அமெரிக்க டாலராகும். அதன்பிறகு அதானி சில சறுக்கல்களை சந்தித்தார். அதேபோல் இந்தியாவின் இன்னொரு பணக்காரரான அம்பானியின் சொத்து மதிப்பு என்பது இந்திய மதிப்பில் ரூ.8.02 லட்சம் கோடியாக உள்ளது.
தற்போது நமக்கு இதுபோன்ற பெரும் கோடீஸ்வரர்களை மட்டுமே தெரியும். ஆனால் இந்த பூமி தோன்றியதில் இருந்து இதுவரை வாழ்ந்தவர்களில் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் யார் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. அதோடு தற்போது உலகில் பெரும் பணக்காரர்களாக உள்ள எலான் மஸ்க், ஜெஃப் பெஜாஸ், அதானி, அம்பானி, பில்கேட்ஸ் உள்பட யாராலும் நெருங்க முடியாத அளவுக்கு ஒருவர் சொத்துகளை வைத்திருந்த வாய்ப்பிளக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பூமியில் இதுவரை வாழ்ந்த பெரும் கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருப்பவரின் பெயர் மான்சா மூசா. இவர் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியின் மன்னராக இருந்தார். இவர் 13ம் நூற்றாண்டை சேர்ந்தவர். அதாவது இவர் 1312 முதல் 1337 ம் ஆண்டு வரை மாலி நாட்டை ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. அதாவது சுமார் 500 முதல் 600 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர்.
செல்வ செழிப்பு என்றால் எலான் மஸ்க், அதானி, அம்பானி கூட அனுபவிக்காத ஒன்றாகும். அதாவது அப்போது உலகில் பயன்பாட்டில் இருந்த தங்கத்தில் பாதியை மான்சா மூசாவிடம் தான் இருந்ததாம். மேலும் தங்கத்தை பாதுகாக்கவே தனி அரண்மனை தேவைப்பட்டதாகவும், இதற்காக அவர் அரண்மனை கட்டி தங்கத்தை சேமித்து வைத்ததாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அதோடு உலகில் பிற நாடுகளில் இருந்தவர்கள் தங்கம் வாங்க வேண்டும் என்றால் மான்சா மூசாவை தான் சந்திப்பார்களாம். இதனால் தான் அவர் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்தார் எனவும் வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் இவரது மொத்த சொத்து மதிப்பு என்பது அப்போதே 400 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்ததாம். இந்திய மதிப்பில் கூற வேண்டும் என்றால் சுமார் ரூ.33 லட்சம் கோடி என கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் அவரது சொத்து மதிப்பு என்பது ரூ.33 லட்சம் கோடியை விட இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதாவது தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு என்பது 251 மில்லியன் அமெரிக்க டாலர் தான். அதாவது ரூ.20 லட்சம் கோடிதான் எனும் போது கடந்த 13ம் நூற்றாண்டிலேயே மான்சா மூசா இவ்வளவு சொத்துகளை குவித்து மிரள வைத்துள்ளார். அதோடு கடந்த 600 ஆண்டுகளுக்கும் மேலாகியும் பூமியும் தொடர்ந்து நம்பர் ஒன் கோடீஸ்வரராக வாழ்ந்தவர் என்ற புகழுடன் இருக்கிறார்.
மேலும் மான்சா மூசா கடந்த 1324ம் ஆண்டில் ஹஜ் யாத்திரைக்காக மாலியில் இருந்து மெக்காவுக்கு புறப்பட்டார். அப்போது அவர் நூறு ஒட்டகங்கள், அதிக அளவிலான தங்கம், 12 ஆயிரம் வேலையாட்கள், 8 ஆயிரம் ஆதரவாளர்களை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். அதன்பிறகு ஹஜ்ஜில் தங்க அவர் விரும்பிய நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது மரணமடைந்த ஆண்டு 1332 என ஒரு தரப்பினரும், 1337 என இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர். இதனால் அவரது மரணம் குறித்த சர்ச்சை என்பது இருந்தாலும் கூட பூமியில் இதுவரை வாழ்ந்த கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் மான்சா மூசா தான் இருக்கிறார்.
இப்படி ஒரு காலத்தில் மான்சா மூசா செல்வ செழிப்புடன் பெரும் பணக்காரராக வாழ்ந்த மாலி நாடு தற்போது மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றாக உள்ளது. அதாவது மாலி நாடு தற்போது ஏழ்மையான நாடாக இருக்கிறது. ஆப்பிரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் பசி, பட்டினி, வறட்சி உள்ளிட்டவை மக்களை பாதித்து வருகிறது. அதேபோல் தான் தற்போது மாலி நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications