ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் விஜய் டிக் அடித்த அந்த பழைய முகம்! திமுக வளர்த்தெடுத்த புள்ளி! யார்?
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக சார்பாக முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூரில் களமிறங்கும் நிலையில் விஜயின் தவெக சார்பாக வி.எஸ்.பாபு என்று பழைய திமுக கை களமிறக்கப்பட்டு உள்ளார்.
முதல்வர் கோட்டையில் தவெக தலை
கடந்த மூன்று தேர்தல்களாக கொளத்தூர் என்றால் அது 'ஸ்டாலின் ஏரியா' என்பது எழுதப்படாத விதி. அதாவது தொகுதி உருவானதில் இருந்தே இவர்தான் இங்கே எம்எல்ஏ. ஆனால், இம்முறை அந்த விதியை மாற்றி எழுதத் துடிக்கிறது நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK). "யாரை நிறுத்தினால் முதல்வர் ஸ்டாலினைத் திணறடிக்கலாம்?" என அறிவாலயமே யோசிக்கும் அளவுக்கு ஒரு வேட்பாளரை களம் இறக்கியிருக்கிறார் விஜய். அவர் வேறு யாருமல்ல... ஒருகாலத்தில் திமுகவின் தீவிர விசுவாசியாக இருந்த வி.எஸ்.பாபு!

யார் இந்த வி.எஸ்.பாபு? பின்னணி என்ன?
அரசியல் சதுரங்கத்தில் வி.எஸ்.பாபு ஒன்றும் கத்துக்குட்டியல்ல. 2006-ல் திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருந்தவர். திமுகவில் மாவட்டச் செயலாளர் ரேஞ்சுக்கு வலம் வந்தவர், பின்னாளில் தேமுதிக, அதிமுக என ரவுண்டு அடித்துவிட்டு, இப்போது தவெக-வில் ஐக்கியமாகியிருக்கிறார்.
அதிமுகவில் மாவட்ட செயலாளராக இருந்தவர் SIR பணிகளை சரியாக செய்யவில்லை என்று ஆக்சன் எடுத்து நீக்கப்பட்டனர். அதே சமயம் இவர் விஜய் உடன் நெருக்கமாக இருந்ததே நீக்கத்திற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. "திமுகவின் அடிமட்ட அரசியல் நாடித் துடிப்பு தெரிந்த ஒருவரை வைத்தே, அதே கட்சியைச் சேர்ந்த முதல்வரை எதிர்கொள்வதுதான் விஜய்யின் வியூகம்." என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மும்முனை மோதலா? நேருக்கு நேர் சவாலா?
திமுக: முதல்வர் ஸ்டாலின் தனது 'சொந்தத் தொகுதி' என்கிற நம்பிக்கையிலும், கடந்த கால வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தியும் ரிலாக்ஸாக இருக்கிறார்.
அதிமுக: பி. சந்தானகிருஷ்ணன் என்பவரைக் களமிறக்கி, அமைதியாகத் தனது வாக்கு வங்கியைத் திரட்டி வருகிறது.
தவெக: வி.எஸ்.பாபுவின் உள்ளூர் செல்வாக்கும், விஜய்யின் 'தளபதி' இமேஜும் இணைந்து ஒரு மேஜிக் செய்யும் என தவெக தம்பிகள் நம்புகிறார்கள்.
ஸ்டாலினைப் பொறுத்தவரை கொளத்தூர் என்பது கோட்டை. ஆனால், அந்தக் கோட்டையின் ஓட்டைகளைத் தெரிந்த ஒருவரையே விஜய் வேட்பாளராக நிறுத்தியிருப்பது, இந்தத் தேர்தலை ஒரு சுவாரஸ்யமான 'த்ரில்லர்' படமாக மாற்றியிருக்கிறது.
பழைய திமுக முகம்... புதிய கட்சி லேபிள்... எதிர்ப்பது தற்போதைய முதல்வர்! கொளத்தூர் வாக்காளர்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும்? மே 4-ம் தேதி தெரியும்!
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டி
தியாகராயர் நகர் - புஸ்ஸி ஆனந்த்
மயிலாப்பூர் - வெங்கட்ராமன்
வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா
கோபி - செங்கோட்டையன்
திருப்பரங்குன்றம் - நிர்மல் குமார்
திருச்செங்கோடு - அருண்ராஜ்
குமாரபாளையம் - விஜயலட்சுமி
சைதாப்பேட்டை - அருள்பிரகாசம்
எழும்பூர் - ராஜ் மோகன்
லால்குடி - கு.ப.கிருஷ்ணன்
திருப்பூர் வடக்கு - சத்தியபாமா
ஆயிரம் விளக்கு - ஜே.சி.டி.பிரபாகர்
கொளத்தூர் - வி.எஸ்.பாபு
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுகிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
₹8000 கூப்பனால் மகிழும் மக்கள்.. நல்ல தலைவருக்கு இது அடையாளம்! விஜயை வேற மாதிரி வறுத்தெடுத்த ரோகிணி -
காங்கிரஸ், பாஜக கோட்டையில் குறிவைக்கும் தவெக.. விஜய்யின் பிரச்சார பயணம் தற்செயலானது அல்ல! -
வருமான வரியை மறைத்ததாக வழக்கு!ரூ 1.50 கோடி அபராதத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போன விஜய் -
விஜய்யை பார்க்க வீட்டில் சொல்லாம கொள்ளாம வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்.. 5 பவுன் செயின் திருட்டு! -
ரசிகர் கொடுத்த சங்கீதா போட்டோ, பார்த்ததும் விஜய் செய்த செயல்.. இது விஜயகாந்துக்காக நடந்த மாற்றமா? -
கரூர் கூட்ட நெரிசலில் ஒரே மாதத்தில் பறி போன இரு உயிர்கள்! விரைவில் வெளியாகும் கள அறிக்கை? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை! -
கன்னியாகுமரியில் விஜய் ஓட்டிய சைக்கிள்… விலை இவ்வளவு தானா? அதை வாங்கும் போது நடந்த சம்பவம் -
விஜய் என்கிட்ட கேட்ட கேள்வி.. நான் எதிர்பார்க்கல! சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்! ஓபனாக பேசிய ராதாரவி -
கோவையில் கேபிள் டிவியில் ஓடிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்.. உரிமையாளரை கைது செய்த போலீஸ்












Click it and Unblock the Notifications