சென்னை அம்பத்தூரில்.. பாழடைந்த பங்களாவுக்குள் யாரந்த இளம்பெண்? தறிகெட்டுபோன உறவு.. இப்படியொரு கொடுமை
சென்னை: சென்னையில் பாழடைந்த பங்களாவில் நடந்த கொலை சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.. இது தொடர்பான விசாரணையை அம்பத்தூர் போலீஸார் நடத்தி வருகிறார்கள்.
சென்னை அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, ஒரு தனியார் தொழிற்சாலை உள்ளது. டன்லப் மைதானத்தின் அருகே உள்ள இந்த தொழிற்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டது. இதனால், பார்ப்பதற்கு பாழடைந்த கட்டிடம் போல உள்ளது

துர்நாற்றம்: இந்த தொழிற்சாலைக்குள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதாக அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைக்கவும், அவர்களும் விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போதுதான், இளம்பெண் ஒருவரின் சடலம் அழுகி கிடப்பதை கண்டனர்.. அந்த பெண் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார். அத்துடன், பலாத்காரம் செய்யப்பட்டு படுகோரமாக கொலை செய்யப்பட்டிருப்பதை கண்ட போலீசார், சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, தடவியல் நிபுணர்களை கொண்டும் ஆய்வுகளை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கலாம் என்றும், இறந்து 2 நாட்களாகியிருக்கும் என்கிறார்கள்.
சடலம்: உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளன.. இந்த சடலத்துக்கு பக்கத்திலேயே மதுபாட்டில்கள் விழுந்து கிடந்திருக்கின்றன. எனவே, இவரை உல்லாசத்துக்கு அழைத்து வந்த நபர்கள் ஏதாவது தகராறு ஏற்பட்டு கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் கொலை நடந்ததா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த பாழடைந்த தொழிற்சாலையில், அடிக்கடி நரிக்குறவ இனமக்கள் சிலர், இரும்பு பொருட்களை எடுப்பதற்காக வருவார்களாம்.. கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளமும் கிட்டத்தட்ட நரிக்குறவ இன பெண் தோற்றம்போலவே இருப்பதாகவும் சொல்கிறார்கள்.. எனவே, அந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்..
விசாரணை: இறுதியில் தீவிர விசாரணைக்கு பிறகு, அந்த பெண் பற்றின தகவல்களை போலீசார் தற்போது வெளிக்கொண்டுவந்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பெண் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவராம்.. இந்த பெண்ணுக்கு திருமணமாகி, ஒரு குழந்தையும் உள்ளது. கணவர் கும்பகோணத்திலேயே இருக்க, இந்த பெண் மட்டும் சென்னையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
அதே ஜவுளி கடையில் வேலை பார்த்த வந்த பெரம்பலூரை சேர்ந்த ராஜா என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.. ராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டாலும், மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால், தஞ்சை பெண்ணும், ராஜாவும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.. இவர்களது நெருக்கம், வேலைபார்க்கும் இடத்தில் அனைவருக்கும் தெரிந்துவிட்டதால், 2 பேருமே வேலையை விட்டுவிட்டார்கள். பிறகு, அம்பத்தூரிலுள்ள பல்மருத்துவமனையில் தஞ்சை பெண்ணும், ஆக்டிங் டிரைவராக ராஜாவும் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள்.
திருமணம்: இதனிடையே தஞ்சை பெண்ணிடம் அவரது கணவர் செல்வராஜ், குழந்தையுடன் அடிக்கடி போனில் பேசி வந்தார். இது ராஜாவுக்கு பிடிக்கவில்லை.. இது தொடர்பாக கள்ள ஜோடியிடையே தகராறு வந்துபோயிருக்கிறது..
சம்பவத்தன்று, கள்ளக்காதலர்கள் இருவரும், தங்களது பணியை முடித்துவிட்டு, அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷன் அருகேயிருக்கும், பாழடைந்த தொழிற்சாலை கட்டிடத்துக்குள் சென்றிருக்கிறார்கள்.. இருவருமே தண்ணி அடித்துவிட்டு, ஜாலியா இருந்திருக்கிறார்கள்.
ஆடைகள்: அப்போது, "இனிமேல் உன்னுடைய கணவர், குழந்தையுடன் பேசக்கூடாது" என்று ராஜா கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார். இதனால் மறுபடியும் கள்ள ஜோடிக்கு தகராறு முற்றிவிட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜா, தன்னிடமிருந்த கத்தியை எடுத்து, பெண்ணின் கழுத்தில் குத்தி கொன்றுள்ளார்.. அத்துடன், அப்பெண் அணிந்திருந்த ஆடைகளை கழட்டியே, மொத்த சடலத்தையும் சுற்றி, அதே பாழடைந்த கட்டிடத்துக்குள் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கிறார்.
ஆனால், கொலை செய்ததுமே, குற்ற உணர்ச்சியால் துடிதுடித்து போன, ராஜா.. அதனால், வழியிலேயே விஷத்தை வாங்கி குடித்துவிட்டு, மறுபடியும் சாலையில் தள்ளாடியபடியே நடந்து சென்றிருக்கிறார்.
சிகிச்சை: அப்போது அங்கிருந்த டிராபிக் போலீசார் ராஜாவை வழிமறித்து விசாரித்தபோதுதான், அவர் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதனால், உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. ராஜாவுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில், அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. இதையடுத்து, தஞ்சை பெண்ணை கொலை செய்ததற்காக ராஜாவை போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications