Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை திருமங்கலத்தில் "ஆன்ட்டி" லவ்! எதிர்வீட்டு பெண்ணோட மோசமான செயல்! கோர்ட்டில் என்னாச்சு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருமங்கலத்தில் நடந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை திடீரென தந்துவிட்டது? யாரிந்த எதிர்வீட்டு பெண்? என்ன நடந்தது அவருக்கு?

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அந்த 20 வயது பெண்.. இவர் திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் ஒன்றை தந்துள்ளார்.. அந்த புகாரில் சொல்லியிருப்பதாவது:

Chennai Thirumangalam Young Woman

திருமங்கலத்தில் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு, சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். நான் தங்கியிருக்கும் வீட்டின் எதிரே வாடகை வீட்டில் 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் வசித்து வருகிறார்.

இளம்பெண்: இவர் எனக்கு அறிமுகமானதால் நாங்கள் இருவருமே நட்பாக பழகினோம். பிறகு எனக்கு மது அருந்தும் பழக்கத்தை அந்த பெண் சொல்லி கொடுத்தார். நாங்கள் 2 பேரும் மது அருந்தும்போது அந்த பெண், தன்னுடன் தகாத உறவில் ஈடுபடும்படி தொந்தரவு கொடுத்தார். ஆனால், எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் அந்த பெண்ணை கடுமையாக கண்டித்தேன்.

அதற்கு பிறகு அவருடன் பழகுவதையும் நிறுத்திவிட்டேன்.. மது அருந்துவதையும் நிறுத்திவிட்டேன்.. இதன்காரணமாக அந்த பெண், என்னை ஆபாசமாக திட்டியதுடன், என்னுடன் பழகாமல் போனால் உன்னை கொலை செய்துவிடுவேன் மிரட்டி வருகிறார்.

வீடியோ மிரட்டல்: நான் பாத்ரூமில் குளிக்கும்போது எனக்கு தெரியாமல் வீடியோ எடுத்துக்கொண்டு, அந்த வீடியோவை காட்டி, "என்னிடம் பழகாமல் போனால், இந்த வீடியோவை இணையதளம் மூலம் மற்றும் உன்னுடைய பெற்றோருக்கு அனுப்பிவிடுவேன்" என்று மிரட்டி வருகிறார். இதனால் பயந்துபோன நான் வீட்டை காலி செய்ய முடிவு செய்தேன்.

இதற்காக வீட்டிலுள்ள பொருட்களை எடுத்து வைக்கும்போது அந்த பெண் வந்துவிட்டார்.. "என்னைவிட்டு பிரிந்து சென்றால் கொலை செய்துவிடுவேன்" என்று மீண்டும் மிரட்டுகிறார். அதனால், அந்த பெண்ணால் என் உயிருக்கு ஆபத்துள்ளது. அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் இளம்பெண் கேட்டுக் கொண்டார்.

விசாரணை: இதையடுத்து, இந்த புகாரின்போல் மகளிர் போலீசாரும் விசாரணையை துவங்கினர்.. இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட அந்த எதிர்வீட்டு பெண்ணையும் நேரடியாகவே வரவழைத்து விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், இளம்பெண் சொன்ன குற்றச்சாட்டுகள் அத்தனையும் உண்மை என்று தெரியவந்தது.. இளம்பெண்ணுக்கு, எதிர்வீட்டு பெண் கொலை மிரட்டல் விடுத்ததும், தினமும் பாலியல் டார்ச்சர் தந்ததும் விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்தனர். பிறகு அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்..

சிகிச்சை: உடனே அந்த பெண் நீதிபதியிடம், "ஐயா, எனக்கு கொஞ்சம் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது.. தயவுசெய்து என்னை மன நல மருத்துவமனையில் அனுமதிகக வேண்டும்" என்று சொல்லி கதறி அழுதுள்ளார்.. இதற்கு பிறகு போலீசார், அந்த பெண்ணை அயனாவரத்திலுள்ள மன நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. இப்போது அந்த பெண்ணுக்கு டாக்டர்கள் சிகிச்சையும் அளித்து வருகிறார்களாம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+