Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சினிமா நடிகர் செய்த அசிங்கம்.. பணத்தாசை யாரை விட்டது? சென்னையில் 4 பேர் செய்த காரியம்.. சபாஷ் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா துறை வட்டாரத்தில் கஞ்சா, மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக சந்தேகங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.. சமீபத்தில் 2 நடிகர்கள் கைதானதால், இந்த சந்தேகம் மேலும் வலுவானது.. இப்படிப்பட்ட சூழலில், மெத்தம்பெட்டமைன் என்னும் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் நடிகர் ஒருவர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.

தமிழகத்தில் போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.. போலீசாரின் இந்த தொடர் முயற்சிகளின் பலனாக, தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடப்படுவது வெகுவாக தடுக்கப்பட்டிருக்கிறது.

cinema celebrity actor chennai

வங்கி கணக்கு முடக்கம்

அதுபோலவே போதைப்பொருட்கள் விற்பனை செய்பவரை கைது செய்வதுடன், அவரது சொத்து பறிமுதல், வங்கிகணக்கு முடக்கம், கடைகளுக்கு சீல், கடுமையான அபராதம், கடும் சிறைத்தண்டனை பெற்றுத்தருவது என அதிரடிகளையும் நம்முடைய காவல்துறை மேற்கொண்டுள்ளது..

அதுமட்டுமல்லாமல், போதைப்பொருட்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது, கல்வி நிலையங்கள் அருகில் போதைப் பொருள் விற்பனையை தடுப்பது போன்ற செயல்பாடுகளிலும் தீவிரம் காட்டி வருகிறது.

பிரபல தமிழ் நடிகர்கள்

எனினும், நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் சிக்கி சிறை சென்று வந்தது கடும் அதிர்ச்சியை தந்திருந்தது.. சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் விற்ற நைஜீரியர்கள் சிலர் கைதானார்கள்.. இவர்கள் தமிழ்ப்படங்களில் துணை நடிகர்களாகவும் நடித்திருக்கிறார்கள்.

இப்படி நடிக்க வரும்போது, சில சினிமா நடிகர், நடிகைகளுக்கும் போதைப் பொருள் விற்றார்களாம்.. பிரபல நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்ததாக, கைதானவர்களே அப்போது பரபரப்பு வாக்குமூலம் தந்திருந்தனர். இதையடுத்து, எல்லை கடற்படையினர் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

கடல்வழியாக ஓரளவு இதனை கட்டுப்படுத்திவிட்டால், போதைப்பொருளின் புழக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா நடிகர் யார்

இப்படிப்பட்ட சூழவில், சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த வழக்கில் நடிகர் உட்பட 4 பேர் அதிரடியாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்..

போதை பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுடன் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் ஒருங்கிணைந்து கண்காணித்து வருகின்றனர்.

போரூர் சர்வீஸ் ரோடு

அந்தவகையில், கடந்த 18ம் தேதி போரூர் டோல் கேட், சர்வீஸ் சாலையில் கண்காணிப்பு பணியில் வானகரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் அங்கு நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் போதைப்பொருள் இருந்துள்ளது..

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஐயப்பன் தாங்கல் பகுதி சேர்ந்த சரண் ராஜ் (36), போரூரை சேர்ந்த ரெக்ஜின் மோன் (23), நூம்மல் ஜமுனா குமார் (27) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து மெத்தம்பெட்டமைன், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பிறகு அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.

அப்போது பல்வேறு பகீர் தகவல்களை 4 பேரும் தந்துள்ளதாக தெரிகிறது.. இந்த தகவலின்பேரில் சென்னை ஆழ்வார் திருநகரர் பவன்குமார் (38), நெற்குன்றம், ஹாசிக் பாஷா (30), பட்டேல் சாலை ஆறுமுகம் (42), வடபழனியை சேர்ந்த பிரபாகரன் (35) ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்து இன்று ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள்.. அவர்களிடமிருந்தும், மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துணை கதாபாத்திரங்கள்

இதில் ஜெயிலில் அடைக்கப்பட்ட பிரபாகரன் சினிமா உதவி இயக்குநராகவும், சினிமாவில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர்.. சினிமா நடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும், சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், இப்படி நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் தந்துள்ளார்..

இதனால் பிரபாகரன், மெத்தம்பெட்டமைனை சினிமா துறையை சேர்ந்த வேறு யாருக்காவது விற்பனை செய்துள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணை நடப்பதால், கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+