சிக்ஸர் விளாசிய சசிகாந்த் செந்தில்.. முட்டை வாங்கிய பாஜக அண்ணாமலை.. இந்துத்துவாவை வீழ்த்திய இந்தியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் இவர்கள் 2 பேரை பற்றின கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. என்ன காரணம்?

திருவள்ளூர் தனித்தொகுதியில் இந்த முறை தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது... திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் களமிறங்கினார்.. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட 13 பேரையும் டெபாசிட் இழக்க வைத்துவிட்டார்.

Tiruvallur Sasikanth Senthil Congress BJP Annamalai

காரணங்கள்: இந்த அதிரடி வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள், யாரும் வலுவாக அமையவில்லை.. அத்துடன் அதிமுகவும் நேரடியாக இங்கு களமிறங்கவில்லை.. அதேபோல, பாஜக வேட்பாளர் பாலகணபதியும் வெளியூரை சேர்ந்தவர் என்பதால், சசிகாந்தின் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிட்டதாகவே தெரிகிறது.

இத்தனைக்கும், இப்போதுதான் முதல்முறையாக தேர்தலை சந்திக்கிறார் சசிகாந்த் செந்தில்.. பாஜக வேட்பாளர் பால கணபதியைவிட 5,72,155 வாக்குகள் அதிகம் பெற்று அனைவரின் கவனத்தையும் திருப்பியிருக்கிறார்.. அதாவது, திமுகவின் வேட்பாளர்கள் கூட பெறாத ஒரு பிரமாண்ட வெற்றியை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் பெற்றிருப்பது, மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

அண்ணாமலை: இப்படிப்பட்ட சூழலில், சசிகாந்த் செந்திலை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஒப்பிட்டு இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் பதிவாகியிருக்கின்றன. யார் இந்த சசிகாந்த் செந்தில்? அண்ணாமலையுடன் இவரை ஒப்பிட்டு திமுகவினர் பதிவிட்டுவர என்ன காரணம்?

கர்நாடகாவில் அண்ணாமலை ஐபிஎஸ் பதவியிலிருந்தவர்.. சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர்.. உயர்பதவியிலிருந்த இருவருமே தமிழர்கள்.. இருவருமே ஒரே நேரத்தில் பதவி விலகினார்கள். இருவருமே நேரடி அரசியலுக்குள் நுழைந்தார்கள்.. சசிகாந்த் செந்தில் காங்கிரசுக்குள்ளும், அண்ணாமலை பாஜகவுக்குள்ளும் கடுமையாக உழைக்க துவங்கினார்கள்.

சசிகாந்த் செந்தில்: பாஜக மேலிட தலைவர்களின் ஆதரரவை அண்ணாமலை அபரிமிதமாக பெற்றார்.. அதேபோல, ராகுல்காந்திக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்டார் சசிகாந்த் செந்தில். இப்போது, தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இவர்களை பற்றின ஒப்பீடுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் வெற்றிக்காக களமாடினார். மென்மையான பேச்சுக்களால் பலரையும் கவர்ந்தார்.. அண்ணாமலையோ நாகரிகமில்லா அரசியலை முன்னெடுத்தார். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவது, எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் பொய்யாக சொல்வது, அரசியல் தலைவர்களை மோசமான வார்த்தைகளால் பேசுவது என்ற பாணியையே தொடர்ந்தார். மத்தியில் பாஜக ஆட்சி செல்வாக்குமிக்கதாக இருந்ததால், அவரது ஆட்டம் அதிகமாகவே இருந்தது.

காவல்துறையினர்: காவல் துறையினரை வழிநடத்துவது போன்றே பாஜவினரையும் நடக்க வற்புறுத்திய அவரது நடவடிக்கையால் உட்கட்சிக்குள் கோஷ்டி பூசல் வெடித்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் இருவருக்குமான வித்தியாசத்தை உணர்த்தியுள்ளது" என்ற பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதில், "ஒருவர் இந்துத்துவாவுக்கு ஆதரவாகவும், இன்னொருவர் இந்துத்துவாவுக்கு எதிராகவும் ராஜினாமா செய்தார்கள். ஒருவர் ஆரவாரமில்லாமல், தன்னடக்கத்தோடு பாடுபட்டு தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

ஒப்பீடு: இன்னொருவர் ஆர்ப்பாட்டத்தோடும், தான் என்கிற அகங்காரத்தோடும் தன் கட்சிக்காரர்களையே மதிக்காமல் காமெடி பீஸ் ஆகி மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வியுற்றார். ஒருவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். மற்றொருவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை" என்று ஒருவர் கமெண்ட் பதிவிட்டுள்ளார். மொத்தத்தில், இந்த ஒப்பீட்டு தகவல்கள்தான் இணையத்தில் பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+