இப்படியும் ஒரு அத்தை? தன்னைவிட யாரும் அழகாக இருக்க கூடாது! பக்கெட்டில் பார்த்தால்? அலங்கோலமாய் பெண்
சென்னை: ஒரு குழந்தையின் முகத்தில் இருந்த அந்த அழகு, ஒருவரின் மனதில் விஷமாக மாறினால் அதன் முடிவு எவ்வளவு கொடூரமாக இருக்கும்? கலகலப்பாக காணப்பட்ட ஒரு கல்யாண வீடு, ஒருசில நிமிடங்களில் சோக மாளிகையாக மாறிவிட்டால் எப்படி இருக்கும்? பொறாமை கொலைவெறியாக மாறிய அந்த அதிர்ச்சி சம்பவம், ஹரியானாவில் நடந்துள்ளது. யாரிந்த பெண்? இவரை பற்றி விரிவாக பார்ப்போம்.
அரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ளது நவுலதா என்ற கிராமம்... அங்குள்ள ஒரு வீட்டில் திருமண விழா சிறப்பாக நடந்து கொண்டிருந்தது..

இசை, சிரிப்பு, சொந்தக்காரர்களின் கூச்சல், குழந்தைகளின் விளையாட்டு என்று மொத்த வீடும் கலகலவென காணப்பட்டது.. அப்போது அங்கிருந்த 6 வயது சிறுமி ஒருத்தியை திடீரென காணவில்லை.. எங்காவது குழந்தை விளையாட போயிருப்பாள் என்று குடும்பத்தினர் நினைத்துள்ளனர்.
சிறுமி எங்கே?
ஆனால் நேரம் ஆக ஆக சிறுமி கிடைக்காததால் பதற்றமானார்கள்.. சிறுமியை தேடி துவங்கினார்கள்.. வீட்டின் ஒவ்வொரு ரூமிலும் சிறுமியை தேடினார்கள்.. ஆனால், சிறுமி எங்கேயும் இல்லை. பெற்றோர், உறவினர்களுக்கு பீதி அதிகமாகி கொண்டே போனது.. சந்தோஷமாக இருந்த திருமண வீடு, சிறிது நேரத்திலேயே டென்ஷனில் காணப்பட்டது.
ரூமில் பெரிய பக்கெட்
அப்போதுதான் அங்கிருந்த ஒரு ரூமில், மூலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய பக்கெட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.. அதற்குள் எட்டிப்பார்த்தபோது, சிறுமியின் தலை அந்த பக்கெட்டுக்குள் மூழ்கி சடலமாக கிடப்பதை கண்டு மொத்தபேரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.. சிறுமியின் இறந்து கிடந்த அலங்கோல காட்சியை பார்த்து தரையில் புரண்டு அழுதனர்..
உடனடியாக சிறுமியை என்.சி. மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.. ஆனால் டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லி விட்டனர்.. பிறகு இதுகுறித்து சிறுமியின் தாத்தா பால் சிங் போலீசில் புகார் தரவும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர். ஒருவேளை சிறுமி தவறி பக்கெட்டில் குப்புற விழுந்து இறந்து விபத்து நடந்துவிட்டதா? அல்லது கொலையா? என்ற ரீதியில் விசாரணை ஆரம்பமானது.
மாடிக்கு போன அத்தை பூனம்
அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில், சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிப்படி ஏறி சென்றது பதிவாகி இருந்தது. உடனே அந்த பெண் யார் என்ற விசாரணை துரிதமானது.. அந்த பெண்ணின் பெயர் பூனம் (34), சிறுமியின் அத்தை முறை என்பதும் தெரியவந்தது. இதனால் பூனத்தை பிடித்து விசாரித்தனர்.
அப்போது விசாரணையில் வெளிவந்த உண்மை, எல்லோரையும் அதிர வைத்தது. "எனக்குப் பொறாமை... யாரும் என்னைவிட அழகாக இருக்கக் கூடாது, அதான் இப்படி செய்துட்டேன்" என்று பூனத்தின் முதல் வாக்குமூலத்தை கேட்டு போலீசார், திருமண வீட்டினர் என அனைவருமே ஆடிப்போய்விட்டனர்.
அதாவது, தன்னைவிட யாருமே அழகாக இருக்கக்கூடாது என்பதே பூனத்தின் பல வருட எண்ணமாக இருந்துள்ளது.. கல்யாண விளையாடி கொண்டிருந்த சிறுமி அழகாக இருந்தாராம்.. அதனால் சிறுமி மீது பூனத்திற்கு பொறாமை வந்துவிட்டதாம்.
பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வா
குடும்பத்தில் இப்படி ஒரு அழகான குழந்தையா? என்ற வெறுப்பும் வந்துள்ளது.. அதனால் நைசாக பேச்சு கொடுத்து மாடிக்கு அழைத்து சென்றுள்ளார் பூனம்..
ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வா என்று சொல்லவும், சிறுமியும் தண்ணீரை எடுத்து கொண்டு வந்துள்ளார்.. அடுத்த செகண்டே, அந்த வாளிக்குள் சிறுமியின் தலையை அழுத்தி அமுக்கி கொன்றுவிட்டாராம்.. பிறகு எதுவும் நடக்காதது போல கதவை பூட்டிவிட்டு மீண்டும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாராம் பூனம்..
அடுத்த அதிர்ச்சி தந்த பூனம்
அதிர்ச்சி இத்துடன் முடியவில்லை. போலீசுக்கு மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்தது.. போலீஸார் பூனத்திடம் தொடர்ந்து விசாரித்த போது, பூனம் இந்த சிறுமியை மட்டுமல்ல, பல குழந்தைகளை கொன்ற கொலையாளி என்பது தெரியவந்தது.
2023ல் தன்னுடைய மைத்துனியின் 9 வயது மகள் இஷிகாவை வீட்டில் இதேபோல, பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்... இந்த கொலையை இஷிகாவின் 3 வயது தம்பி சுபத் கண்ணால் பார்த்து விட்டான்.. உடனே அந்த பச்சிளம் குழந்தையையும் அதே பாணியில் கொன்றுவிட்டார் பூனம்.. இதெல்லாம் கேட்டு ஹரியானா மாநிலமே உறைந்து போய் கிடக்கிறது.. பூனத்திடம் விசாரணையும் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications