Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல ஹோட்டல் அதிபர் மகன்.. மிட்நைட்டில் செய்த காரியம்.. பறிபோன 2 உயிர்.. சென்னை ஹைவேஸில் என்னாச்சு

சென்னையில் கார் விபத்தில் 2 இளம்பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நள்ளிரவில் இரண்டு இளம்பெண்கள் சாலைவிபத்தில் பரிதாபமாக பலியான சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், அக்காததாரா பகுதியை சேர்ந்தவர் ரவி மணி... இவரது மகள் ஸ்ரீலட்சுமி 23 வயதாகிறது.. இவரும் லாவண்யா என்பவரும் நெருங்கிய தோழிகள்.

லாவண்யா ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், ரெட்டிகாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர்.. இவருக்கும் 23 வயதாகிறது.

 நைட் டியூட்டி

நைட் டியூட்டி

சென்னை ஓ.எம்.ஆர். சாலை, நாவலூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 14ம் தேதி நைட் டியூட்டி முடித்துவிட்டு, தாங்கள் தங்கியிருந்த ரூமுக்கு இரவு 12 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.. அப்போது கேளம்பாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வேகமாக சென்ற ஹோண்டா சிட்டி சொகுசு கார் இவர்கள் மீது வேகமாக மோதிவிட்டது இதில் ஸ்ரீலட்சுமி, லாவண்யா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

 ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தை நேரில் பார்த்த ஓஎம்ஆர் சாலையில் சென்றவர்கள் பதறிப்போய் ஆம்புலன்சுக்கு போன் செய்தார்கள்.. உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 பேரையும் உடனடியாக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... ஆனால், அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஸ்ரீலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக சொன்னார்கள்.. இதைத்தொடர்ந்து லாவண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி லாவண்யாவும் இறந்துவிட்டார்.

 ஹோட்டல் ஓனர்

ஹோட்டல் ஓனர்

இதனிடையே, சம்பவ இடத்தில் விபத்தை ஏற்படுத்திய காரையும், காரில் இருந்த இளைஞரையும் பொதுமக்கள் வசமாக பிடித்து வைத்து கொண்டனர்.. பிறகு போலீசுக்கு தகவல் அளித்த நிலையில், உடனடியாக பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.. அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டது.. அப்போதுதான் அந்த இளைஞர் யார் என்ற விவரம் தெரியவந்தது.. சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த பிரபல ஹோட்டல் அதிபர் பூபாலகுமாரின் மகன் மோத்தீஸ்குமார் மகன்தான் வண்டியை ஓட்டி வந்துள்ளார்..

 மிட்நைட் விபத்து

மிட்நைட் விபத்து

20 வயதான இவர், நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று போதையில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார்.. ஓவர் ஸ்பீடில் கார் ஓட்டியதால், இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்ததுடன், மோத்தீஸ்குமார் மது அருந்தியிருப்பதும் உறுதியானது.. இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் மோத்தீஸ்குமாரை கைது செய்தனர்... மிட்நைட்டில், நைட் ஷிப்ட் முடித்துவிட்டு, வீட்டிற்கு திரும்பிய இளம் சாப்ட்வேர் பெண் என்ஜினியர்கள் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர்களுடைய குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+