புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அடடே வித்தியாசமான "வாசனை"? குழம்பிய சென்னை சூளைமேடு அப்பார்ட்மென்ட்
சென்னை: புதுக்கோட்டையிலிருந்து வந்த இந்த ஷர்மிளா யார்? எதற்காக சென்னை வந்தார்? இப்போது ஏன் போலீசில் சிக்கினார் தெரியுமா?
சூளைமேடு சக்தி நகர் பகுதியில், தனியார் அடுக்குமாடி ஒன்று கட்டப்பட்டுள்ளது.. இந்த அப்பார்ட்மென்ட்டில், ஆபீசில் பணிபுரியும் பெண்கள் தங்கியிருக்கிறார்கள்.. இவர்களுக்கென தனித்தனி ரூம்கள் கட்டப்பட்டிருக்கின்றன.. எனவே, அவரவர் அறைகளில் இந்த பெண்கள் வசித்து வருகிறார்கள்...

இந்நிலையில், இந்த அப்பார்ட்மென்ட் வளாகத்தில், யாரோ ஒரு நபர் அடிக்கடி வந்து செல்வதை அனைவரும் கவனித்திருக்கிறார்கள்.. அவர் யாரென்று தெரியவில்லை என்றாலும், அவரது நடவடிக்கை மீது அங்கிருந்த பெண்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அப்பார்ட்மென்ட்: அதனால், அப்பார்ட்மென்ட் பெண்கள் ஒன்றுசேர்ந்து, சூளைமேடு போலீசில் புகார் தந்தார்கள.. போலீசாரும், சம்பந்தப்பட்ட அப்பார்ட்மென்ட்டை ரகசியமாக கண்காணித்து வந்தார்கள். எந்த தடயமும் சிக்கவில்லை.
எனவே, உரிய அனுமதியை பெற்று, அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் சோதனை செய்தார்கள்.. அப்போதுதான், அங்கிருந்த ரூமிலிருந்து ஒருவித வாசனை வந்துள்ளது.. இதனால் அதிகம் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த ரூமில் தீவிரமான சோதனையை மேற்கொண்டனர.
பார்சல் பண்டல்: அங்கே ஒரு பார்சல் பண்டல் கிடந்தது.. அசாம் மாநிலத்தில் வெளிவரும் நியூஸ் பேப்பரால், அந்த பண்டல் சுற்றப்பட்டிருந்தது.. அதை திறந்து பார்த்தால், மொத்தமும் கஞ்சா இருந்துள்ளது.. அதுவும் முழுசான இலையுடன் காணப்பட்டது. இப்படி முழு இலைகளுடன் இருந்தால், அது முதல் ரகத்தை சேர்ந்ததாம்.. அந்தவகையில், அசாம் மாநிலத்திலிருந்து இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த ரூமில் தங்கியிருந்த இளம் பெண்ணை, சூளைமேடு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.. அந்த பெண்ணின் பெயர் ஷர்மிளா.. புதுக்கோட்டையை சேர்ந்தவராம்..
டிரைவர்: இவருக்கு திருத்தணியை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் சுரேஷ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். ஒருகட்டத்தில் டிரைவரும், ஷர்மிளாவும் நெருங்கி பழகியிருக்கிறார்கள்.. ஷர்மிளாவின் ரூமுக்கு சுரேஷ் அடிக்கடி வந்து தங்கிவிட்டு போவாராம்.
அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு, சுரேஷ் வந்து தங்கியபோது, ஒரு பார்சலை தந்துவிட்டு, பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு போனாராம்.. ஆனால், அதற்கு பிறகு ரூமுக்கு சுரேஷ் வரவில்லையாம்.. அந்த பண்டலில் உள்ளது கஞ்சா என்று தனக்கு தெரியாது என்று போலீசாரிடம் ஷர்மிளா கூறினார்.
ஷர்மிளா: இதையடுத்து ஷர்மிளாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 300 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.. அதற்கு பிறகு தீவிரமான வேட்டை நடத்தி, திருத்தணியில் பதுங்கியிருந்த சுரேஷையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்...
அசாமிலிருந்து இந்த முதல்தரத்தை சேர்ந்த கஞ்சா எப்படி கிடைத்தது? யாருக்கு சப்ளை செய்வதற்காக கொண்டுவரப்பட்டது? ஷர்மிளாவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? என்றெல்லாம் விசாரித்து கொண்டிருக்கிறார்களாம்.
ஓ மை காட்: 2 பேரிடமும் விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.. சில வருடங்களுக்கு முனபு பெங்களூருவில் சர்மிளா வசித்து வந்தபோது, சுரேஷ் பெங்களூருக்கு அடிக்கடி வந்து போயிருக்கிறார்.. அதனால், பெங்களூருவிலேயே சுரேஷை ஷர்மிளாவுக்கு அறிமுகமாகியிருக்கிறது.. இதற்கு பிறகு, ஷர்மிளாவின் அம்மாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபோது சென்னையில்தான் சிகிச்சை நடந்துள்ளது. அந்த நேரத்தில் சுரேஷூடன் ஷர்மிளா நட்பை தொடர்ந்துள்ளார்..
இதற்கு பிறகு, ஷர்மிளா சென்னை வந்ததுமே, அடிக்கடி ஷர்மிளாவை பார்ப்பதற்காக, சுரேஷ் சூளைமேட்டுக்கு வந்து சென்றிருக்கிறார்.. இப்படித்தான் இவர்களது நட்பு வலுவாகியிருக்கிறது..
கால் டாக்ஸி: சுரேஷ் கால் டாக்சி டிரைவர் ஓட்டினாலும், பிரதான தொழில் கஞ்சா கடத்துவதுதானாம்.. டிரைவர் என்ற போர்வையில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் கஞ்சாவை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கும் வேலையை சுரேஷ் செய்து வந்திருக்கிறார்.. ஆனால், ஷர்மிளாவிடம் எதற்காக பண்டலை தந்தார்? என்று தெரியவில்லை.
சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில், போதைப்பொருள் விற்கப்படுவதாக, முதலில் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதற்கு பிறகுதான், அப்பார்ட்டை நோட்டம் விட்டுள்ளனர்.
சூளைமேடு: சூளைமேடு சக்திவேல் நகரில் இந்த அப்பார்ட்மென்ட் உள்ளது.. கடந்த 2 நாட்களாகவே போலீசார் அந்த அப்பார்ட்மென்ட் குடியிருப்பை நோட்டமிட்டனர்... எந்த க்ளுவும் கிடைக்காததால், நேற்றிரவு, அடுக்குமாடி குடியிருப்புக்குள்ளேயே சென்று சோதனையிட்டதில் ஷர்மிளா சிக்கியிருக்கிறார். கஞ்சா நபருடன் பழகி, இந்த வயதிலேயே ஜெயிலுக்கும் போயிருக்கிறார் ஷர்மிளா..
ஆனால், கஞ்சா விவகாரத்தில் பெண் ஐடி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்த பெண் MBA பட்டதாரியாம்.. 20 நாளைக்கு முன்புதான், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.... மெத்த படித்த பெண்களே இப்படியிருந்தால், என்னத்த சொல்றது??
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications