Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூன்று எழுத்து பிரபல தமிழ் நடிகையின், 16 வயது மகளை மணந்த டாப் ஹீரோ இவரா? பலித்த அரசியல்வாதி ஜோதிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பகுத்தறிவு தலைவர்கள் நிறைந்த மாநிலமாக இருந்ததால் தமிழகத்தில் ஜாதகத்துக்கு முக்கியத்துவம் யாரும் தந்ததில்லை.. ஓரளவு நம்பிக்கை வைத்திருந்திருக்கலாம்.. அதாவது பரிகாரம், மஞ்சள் துண்டு, அன்னதானம் என்ற அளவுக்கு வேண்டுமானால் இருந்திருக்கலாம்.. ஆனால், சிறுவயது திருமணம் செய்வது போன்ற எண்ணம் இங்கு யாருக்கும் இல்லை என்று பேட்டியொன்றில் பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் சத்யராஜ், மணிவண்ணன் காம்பினேஷனில் வந்த படங்கள் எல்லோமே ஹிட்டடித்துவிட்டு போயின.. இதில் அமைதிப்படை படம், மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியது. தமிழக அரசியலிலுள்ள அபத்தங்களை, நையாண்டி கலந்து இந்த படத்தை தந்திருந்தார் மணிவண்ணன்..

three letter Actress 16 year old girl Top Hero 16

அமைதிப்படை சத்யராஜ்

இளம்பெண்ணை ஏமாற்றி காவு வாங்கி விட்டு, அதன் மீது தன்னுடைய அரசியல் வெற்றியை நிலைநாட்டுபவராக நடித்திருந்த சத்யராஜுக்கு பெரும்பெயரை பெற்றுத்தந்த படமாகும்.. எதிர்கால அரசியலையும் சொல்லியிருந்த அமைதிப்படை வெளிவந்து 30 வருடங்களை கடந்தும், அரசியல் படங்களில் மிகுந்த முக்கியத்துவத்தை இன்றும் பெற்று வருகிறது.

இந்நிலையில், Realone Media என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "நிஜத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதுதான் அமைதிப்படை படத்தில் வரும் திருமண சீன்..

பிரபல தமிழ் நடிகை மகள்

அதாவது குறிப்பிட்ட லக்னத்தில், குறிப்பிட்ட தேதியில் பிறந்த 16 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டால், முறையும் நீங்கள்தான் முதலமைச்சர் என்று கணித்து சொல்லவும், அதன்படியே திருமணம் செய்வதுபோல அமைதிப்படை படத்தில் காட்சி வைத்திருப்பார்கள். பக்கத்து மாநிலத்தில் இது நிஜத்திலேயே நடந்த விஷயமாகும்..

அங்கு நம்பர் ஒன் நடிகராக இருந்தவர், அரசியலுக்கு வந்தார்.. அப்போது அவரது கிரகத்தில் ஏதோ பிரச்சனை என்பதால், இப்படியொரு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்தால் நம்பர் ஒன் நடிகர்தான் முதலமைச்சராவார் என்றும் ஜோதிடர்கள் கூறியிருக்கிறார்கள்.

3 எழுத்து நடிகையின் 16 வயது மகள்

அதன்படியே பிரபல 3 எழுத்து தமிழ் நடிகையின் 16 வயது மகளுடன் திருமணம் நடந்தது.. தன்னுடன் நெருங்கி பழகிய நடிகையின் மகளா? என்று நம்பர்-ஒன் நடிகர் முதலில் தயங்கியிருக்கிறார்.. பிறகு ஜோதிடர் அந்த 16 வயது பெண்ணின் ஜாதகம் மிகப்பொருத்தமாக உள்ளதாக சொல்லவும், அந்த நடிகரும், நடிகைக்கு ஒரு பெரிய தொகையை தந்து, அவரது 16 வயது மகளையும் திருமணம் செய்தார்.. இதற்கு பிறகு, தான் சாகும்வரை முதல்வராகவே இருந்தார் அந்த நம்பர்-ஒன் நடிகர்.

இதுபோல தமிழ்நாட்டில் எந்த சம்பவமும் நடக்கவில்லை.. ஆனால், இன்னொரு பக்கத்து மாநிலத்தில் நடந்தது.. காடாறு மாதம், நாடாறு மாதம் என்பதுபோல, இரண்டரை வருடம் நீ, இரண்டரை வருடம் நான் மாநிலத்தை ஆளுவது என்று ஒருவர் முதல்வராக இருந்தார்.. அவரும் ஒரு நடிகையை இப்படித்தான் திருமணம் செய்தார்..

பகுத்தறிவு தலைவர்கள்

நடிகைக்கு அப்போது 16 வயது கிடையாது என்றாலும் நடிகையை திருமணம் செய்தபிறகு, ஜோதிடர் சொன்னபடியே முதலமைச்சரானார்.. நன்றாக சம்பாதித்தார்.. இப்போதும் ஓரளவு செல்வாக்குடன் அங்கு இருக்கிறார்.. ஏற்கனவே இவருக்கு திருமணமானாலும், நடிகையை திருமணம் செய்து, அவருடனும் வாழ்க்கையை துவங்கினார்.

பகுத்தறிவு தலைவர்கள் நிறைந்த மாநிலமாக இருந்ததால் தமிழகத்தில் ஜாதகத்துக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் யாரும் தந்ததில்லை.. ஓரளவு நம்பிக்கை வைத்திருந்திருக்கலாம்.. பரிகாரம், மஞ்சள் துண்டு, அன்னதானம் என்ற அளவுக்கு வேண்டுமானால் இருந்திருக்கலாம்.. ஆனால், சிறுவயது திருமணம் செய்வது போன்ற எண்ணம் இங்கு யாருக்கும் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+