Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாழாய்ப்போன கள்ளக்காதல்.. மனைவியின் லீலை.. அதுக்கு இந்த குழந்தைங்க என்ன பண்ணாங்க? குலுங்கிய சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்த கொடூரத்தின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.. யார் இந்த யமுனா? ஒரு குடும்பத்தில் ஒரே நேரத்தில் நடந்த துயரம் என்ன?

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் மோகன்.. 55 வயதாகிறது.. இவர் ராயபுரத்தில், இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் யமுனா.. 35 வயதாகிறது. அந்த பகுதியிலுள்ள பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்து வருகிறார்.

Who is this Wife Yamuna and why did father take this sudden decision what happened to his 2 children in Chennai

இவர்களுக்கு சாய் ஸ்வாதி என்ற 13 வயது மகளும், தேஜஸ் என்ற 5 வயது மகனும் இருக்கிறார்கள்.. சாய் ஸ்வாதி 9-ம் வகுப்பும், தேஜஸ், யுகேஜி படித்து வந்துள்ளனர்.

2 குழந்தைகள்: இந்நிலையில், மோகனுக்கும் யமுனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், மோகன் மீது சைதாப்பேட்டை மகளிர் ஸ்டேஷனில், யமுனா புகாரளித்தார்.

பிறகு பிள்ளைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு தனியாக வந்துவிட்டார் யமுனா.. வாடகைக்கு ஒரு வீட்டை பிடித்து அங்கு வசித்து வந்தார்.. இந்நிலையில், குழந்தைகளை பார்க்காமல் தவித்து போன மோகன், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, யமுனாவை தேடி, அவர் குடியிருந்த வீட்டுக்கு வந்தார்.

அப்போது, "இனிமேல் தகராறு செய்ய மாட்டேன்" என்று வாக்குறுதி தந்து, குழந்தைகளுக்காக ஒன்றாக வாழலாம் என்று யமுனாவை சமாதானம் செய்திருக்கிறார் மோகன். உடனே யமுனாவும், இந்த முடிவை ஏற்று, ஒன்றாக சேர்ந்து வசிக்கலானார்.

கொடூரம்:
இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணிக்கு, வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார் யமுனா.. அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் யாரும் திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சாய் ஸ்வாதி கழுத்தறுக்கப்பட்டும், தேஜஸ், கழுத்தை நெறிக்கப்பட்டும், மோகன் தூக்கில் தொங்கியும் சடலமாக கிடந்தனர்..

இதைப்பார்த்து கதறி அழுதார் யமுனா.. குமரன் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தனர். 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணையும் மேற்கொண்டனர். மகளையும் மகனையும் கொன்றுவிட்டு, மோகன் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. பிறகு யமுனாவிடம் விசாரணை ஆரம்பமானது.. தன் மீதுள்ள ஆத்திரத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டதாக அழுதுகொண்டே சொன்னார் யமுனா.

மோகன்: இதற்கு பிறகுதான் யமுனாவின் லீலைகள் போலீசாருக்கு தெரியவந்தது.. யமுனாவுக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் உள்ளதாக தெரிகிறது.. இந்த விஷயம் மோகனுக்கு தெரிந்து, மனைவியை கண்டித்திருக்கிறார்.. ஆனாலும், கள்ளக்காதலை யமுனா கைவிடவில்லை.. நேற்றைய தினமும், இதே பிரச்சனை தம்பதிக்குள் வெடித்துள்ளது.. பிறகு யமுனா வேலைக்கு கிளம்பி சென்று விட்டார்.

பரிமாபம்:
வீட்டில் வீட்டில் குழந்தைகளோடு இருந்த மோகன், மனைவியின் நடத்தையை கண்டு கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.. தற்கொலை செய்து கொள்ளவும் முடிவு செய்தார்.. ஆனால், இதுபோன்ற பெண்ணிடம் குழந்தைகளை விட்டுசெல்வது சரியல்ல என்று நினைத்து, குழந்தைகளை கொல்லவும் துணிந்தார்..

மகளின் கழுத்தை கத்தியால் அறுத்தார்.. எல்கேஜி படிக்கும் மகனை, கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றார். பிறகு தானும் தூக்கு போட்டு கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

பரிதாபம்: 3 பேரின் சடலங்களை பார்த்து, இரு குடும்பத்தினருமே கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது.. யமுனா மீதுள்ள கோபத்தில் குழந்தைகளை எதற்காக கொல்ல வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கலங்கி கேட்கிறார்கள்.

இந்த தம்பதிக்கு கல்யாணம் ஆகி 15 வருடமாகிறது.. கல்யாணம் ஆனதிலிருந்தே யமுனாவின் நடத்தை தவறாகவே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான், இவர்களுக்குள் தகராறும் வந்துபோயிருக்கிறது.. யமுனா மோகனை விட்டு பிரிந்து சென்றதற்கு காரணமும் அவரது கள்ளக்காதல் பிரச்சனை என்கிறார்கள்..

கணவரை விட்டு பிரிந்திருந்தும்கூட, யமுனா கடைசிவரை திருந்தவில்லையாம்.. இப்படிப்பட்ட பெண்ணை நம்பி குழந்தைகளை விட்டு சென்றால், அனாதைகளாகிவிடுவார்களே என்று பயந்துதான் குழந்தைகளையும் மோகன் கொன்றதாக சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+