8000 கோடி சொத்து..திரிஷாவின் எக்ஸ் வருண் மணியன்! மல்டி மில்லியனனுடன் நிச்சயதார்த்தம்! பிரிந்தது ஏன்?
சென்னை: தமிழ் திரைப்பட உலகிலும், அரசியல் களத்திலும் நடிகர் விஜய், திரிஷா குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பல விதமாக பேசி வருகின்றனர். குறிப்பாக நடிகை திரிஷாவின் கடந்தகால உறவுகள் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளன. அதில் முக்கியமாக அடிபடுவது சென்னை தொழிலதிபர் வருண் மணியனின் பெயர் தான்.
சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து விவகாரம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதனுடன் தொடர்புடையதாக நடிகை திரிஷாவின் பெயரும் சமூக ஊடகங்களில் பரவியது.
இந்நிலையில், அது வதந்தி அல்ல உண்மை தான் என்பதை போல் திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜயும், திரிஷாவும் ஒன்றாக தோன்றினர். இந்த சூழலில், பல ஆண்டுகளுக்கு முன்பு திரிஷாவுடன் நிச்சயதார்த்தம் செய்திருந்த தொழிலதிபர் வருண் மனியன் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். ஆனால், அவர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

வருண் மணியன்
வருண் மனியன் சென்னைடை சேர்ந்த தொழிலதிபர் ஆவார். தென் இந்தியாவின் ஒரு முக்கிய தொழில் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் வருண். பொதுவாக அவர் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் அதிகமாக தோன்றியதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வராமல் மிகவும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஆனால் 2015 ஆம் ஆண்டு அவர் நடிகை திரிஷாவுடன் நிச்சயதார்த்தம் செய்தபோது அவரது பெயர் பரவலாக அறியப்பட்டது.
திரிஷா நிச்சயதார்த்தம்
அப்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்த திரிஷாவின் திருமண செய்தி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 2015 ஜனவரி 23 ஆம் தேதி திரிஷா மற்றும் வருண் மனியன் ஆகியோரின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட தனிப்பட்ட நிகழ்வாக அது நடைபெற்றது. அந்த நிச்சயதார்த்தம் அப்போது கோலிவுட்டில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியது.
திரிஷா பழைய உறவு
அந்த ஆண்டிலேயே இருவரின் திருமணம் நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சில மாதங்களுக்குள் அந்த உறவு திடீரென முடிவுக்கு வந்தது. இது ரசிகர்களுக்கும் திரைப்படத் துறையினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த காலத்தில் வெளியான தகவல்களின் படி, திருமணத்திற்கு பிறகு திரிஷா திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்ற எதிர்பார்ப்பு வருண் மனியன் குடும்பத்தில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் நடிகையாக தனது சினிமா வாழ்க்கையை தொடர வேண்டும் என்ற முடிவில் திரிஷா இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
திரிஷா திருமணம் சர்ச்சை
இந்த கருத்து வேறுபாடே இருவரின் நிச்சயதார்த்தம் முடிவுக்கு வர காரணமாக அமைந்ததாக திரைப்பட வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால் இதற்கான சரியான காரணத்தை திரிஷா பொதுவாக வெளிப்படையாக கூறவில்லை. பின்னர் ஒரு நேர்காணலில் அவர் கூறியபோது, அழுத்தம் அல்லது கட்டாயம் காரணமாக திருமணம் நடைபெறக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.
விஜய் திரிஷா
கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு, வருண் மணியனின் பெயர் மீண்டும் பேசப்படுவது தற்போது நடிகை திரிஷாவை சுற்றி உருவாகியுள்ள வதந்திகளால் தான். குறிப்பாக கில்லி மற்றும் குருவி போன்ற படங்களில் விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு வெளியான லியோ திரைப்படத்தில் அவர்கள் மீண்டும் இணைந்து நடித்தனர். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் பின்னர் இருவரின் நட்பு குறித்து பல்வேறு ஊகங்கள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.
விஜய் சங்கீதா
சமீபத்தில் விஜயின் திருமண வாழ்க்கை குறித்து செய்திகள் வெளியானதும், அந்த வதந்திகள் மேலும் அதிகரித்தன. குறிப்பாக விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே விவாகரத்து தொடர்பான வழக்கு தொடர்பாக தகவல்கள் வெளியானதும், விஜய் ஒரு நடிகையுடன் நடிகர் தொடர்பில் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் மனுவில் இடம்பெற்றது.
திரிஷா
அந்த நடிகையின் பெயர் அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் பலரும் திரிஷாவை அதனுடன் தொடர்புபடுத்தி பேசத் தொடங்கினர். இதற்கிடையில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டதாக கூறப்பட்ட செய்தியும் வதந்திகளை அதிகரிக்கச் செய்தது. இந்த சூழலில் திரிஷாவின் பழைய உறவுகள் குறித்து மீண்டும் விவாதங்கள் எழுந்ததால், வருண் மணியன்யனின் பெயரும் மீண்டும் வெளியாகியுள்ளது. இருப்பினும் தற்போதைய விவகாரத்துடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம்











Click it and Unblock the Notifications