அரசியல்வாதி- வழக்கறிஞர்- சாதிமறுப்பு திருமணம்! நாம் தமிழரில் வீரப்பன் வாரிசு! யார் இந்த வித்யா ராணி?
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிடுகிறார் பிரபல சந்தன கடத்தல் வீரப்பனின் மகளான வித்யா ராணி வீரப்பன். 2024 ஆம் ஆண்டிலிருந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர் மக்களவைத் தேர்தலை தொடர்ந்து, தற்போது சட்டமன்ற தேர்தலில் களம் காண்கிறார். வீரப்பன் யார்? வித்யா ராணியின் பின்னணி என்ன? அவரது அரசியல் எப்படி தொடங்கியது? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..
சந்தன கடத்தல் வீரப்பன் 1980 - 90 காலகட்டங்களில் இந்த பெயரை கேட்காதவர்கள் இருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு செய்தி வீரப்பனை சுற்றி வந்து கொண்டே இருக்கும். யானை தந்தம் - சந்தன மர கடத்தல், போலீசார் சுட்டுக்கொலை, ராஜ்குமார் கடத்தல் என அன்றைய தமிழகத்தையும் கர்நாடகாவையும் பரபரப்பாக வைத்திருந்தவர் வீரப்பன்.
கலைஞர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வீரப்பனை பிடிப்பதற்கு என்று பல சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டது. இறுதியில் அதனை செய்து முடித்தவர் ஜெயலலிதா. அதற்கு முன்னதாக கேரளா, கர்நாடக, தமிழ்நாடு வனத்துறை காவல்துறை என பல்வேறு துறைகளும் இணைந்து முயற்சி செய்தும் வீரப்பனை பிடிக்க முடியவில்லை.

'ஆபரேஷன் கக்கூன்'
இறுதியில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 'ஆபரேஷன் கக்கூன்' மூலம் சுட்டு கொலை செய்யப்பட்டார் வீரப்பன். அதற்கு முன்னர் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட 12 கடத்தல் சம்பவங்களில் 29 பேர் அவரால் கடத்தப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் வீரப்பனார் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் உலாவுகின்றன. வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமி தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் பேட்டி கொடுத்து வந்தார். தற்போது அவர் தேர்தலில் களம் இறங்குவது குறிப்பிடத்தக்கது.
முத்துலெட்சுமி
கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முத்துலட்சுமி போட்டியிடுகிறார். அதே நேரத்தில் வீரப்பனின் மூத்த மகளான வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பில் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். வழக்கறிஞர், கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு முகங்களை கொண்ட வித்யா தாரணி ஒரு தலித் கிறிஸ்தவரை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ல் பாஜகவில் இணைந்த வித்யா ராணி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
வித்யா ராணி
தொடர்ந்து மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிப்பதாக கூறி பாஜகவில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் முதன் முதலில் போட்டியிட்ட வித்யா ராணி ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 620 வாக்குகள் பெற்று வியக்க வைத்தார். இது நான் தமிழர் கட்சியின் முந்தைய வாக்கு சதவீதத்தை விட மிகப்பெரிய வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஒன்பது சதவீத வாக்குகளை அவர் பெற்றிருந்தார்.
2026 சட்டமன்ற தேர்தல்
இந்த நிலையில் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிடுகிறார் வன்னியர் சமூக வாக்குகள் அதிகம் கொண்ட மேட்டூர் தொகுதியில் வித்யா ராணி நிற்பது பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. நிச்சயம் அதிமுக பாமக கூட்டணிக்கு கடும் சவால் அளிப்பார் என்கின்றனர். தனது பிரச்சாரத்தின் போது தனது தந்தையை குறிப்பிட்டு வித்யா தாரணி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
இளைய மகள் பிரபா
வீரப்பன் முத்துலட்சுமி தம்பதிக்கு வித்யா ராணி மட்டுமல்லாது பிரபா என்ற ஒரு மகளும் உள்ளார். இவர் வித்யா ராணிக்கு தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. 1993 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் பிரபா. 2004 ஆம் ஆண்டு வீரப்பன் சுட்டு கொலை செய்யப்பட்ட போது அவருக்கு வயது பெறும் 11. தற்போது வரை ஊடக வெளிச்சத்துக்கு வராமல் பொது வாழ்க்கையில் இருந்து விலகியே இருக்கிறார் பிரபா என்கின்றனர். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால் வித்யா ராணிக்கு ஆரம்பத்திலிருந்து வீரப்பன் குடும்பத்திலிருந்து எதிர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி பொதுவெளியில் ஒரு அரசியல்வாதியாக உலா வருகிறார் வித்யா ராணி.














Click it and Unblock the Notifications