ஜெ. தோற்ற தேர்தலிலேயே வென்ற பிஆர் சுந்தரம்.. சட்டசபையில் கருணாநிதி பதிலடியால் ஆடிப்போனவர்! மறைந்தார்
சென்னை: ராசிபுரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., நாமக்கல் முன்னாள் அதிமுக எம்பி, திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என பதவி வகித்த பி.ஆர்.சுந்தரம் உடல்நலக் குறைவால் காலமானார். தமது அரசியல் வாழ்க்கையில் அதிமுகவில் பயணித்த போது 'பல' சம்பவங்களை நிகழ்த்தி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தவர்தான் பிஆர் சுந்தரம்.
அண்ணா திமுக (அதிமுக) தொடங்கப்பட்ட காலம் முதலே அக்கட்சியின் உறுப்பினராக இருந்தவர் பிஆர் சுந்தரம். 1996-ம் ஆண்டு ராசிபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ.வானார் பிஆர் சுந்தரம். அந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் ஜெயலலிதா எதிர்ப்பு அலை வீசியது. இந்த எதிர்ப்பு அலையில் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவே தோற்றுப் போனார்.

அதிமுக சார்பில் மொத்தம் 4 பேர்தான் வென்றனர். அவர்களில் ஒருவர்தான் பிஆர் சுந்தரம். 2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.வானார் பிஆர் சுந்தரம். ஆனால் 2006 தேர்தலில் பிஆர் சுந்தரம் தோல்வியைத் தழுவினார். இதன் பின்னர் 2014-ம் ஆண்டு லோக்சபா எம்பியானார். சிறிது காலம் அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் இருந்தார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் திமுகவில் ஐக்கியமானார். திமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.
1996-2001-ல் திமுக ஆட்சியில் அதிமுக சட்டசபை குழுத் தலைவராக இருந்தார். அப்போது 2001-ல் முதல்வராக இருந்த கருணாநிதி, இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். ஆனால் அதிமுக சட்டசபை குழு தலைவரான பிஆர் சுந்தரம், இந்த பட்ஜெட் நகலை கிழித்து வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து மறுநாள் சபையில் பேசிய கருணாநிதி, பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் திட்டங்களின் பெயர்களை எல்லாம் பட்டியலிட்டு சுட்டிக்காட்டி அந்த தலைவர்கள் பெயர்களை தாங்கிய திட்டங்களை எல்லாம் குப்பையில் வீசி இருக்கிறார் சுந்தரம்; இதனால் அவர்களுக்கு அவமரியாதை செய்துள்ளார். எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் பட்ஜெட் உரையில் இடம் பெற்றிருக்கிறது; அதை கிழித்து குப்பை தொட்டியில் போட்டதால், தம்மையும் கிழித்து குப்பை தொட்டியில் போட்டுக்கொண்டுள்ளார் பிஆர் சுந்தரம் என கடுமையான பதிலடி தந்தார். ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம் பிடிக்க பட்ஜெட் உரையை கிழிக்கப்போய், இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்காமல் திகைத்துப்போனார் சுந்தரம். இந்த சம்பவம் அப்போது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தன என்பது வரலாறு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications