சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேன்சர் காரணமாக ஒரே வருடத்தில் இவ்வளவு மரணமா? உலக சுகாதார மையம் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களை சீக்கிரமே கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை தொடக்கத்திலேயே வழங்க வேண்டும். இதன் மூலம் கேன்சர் தீவிரம் அடைவதை தடுக்க முடியம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார மையம் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது.

உலக கேன்சர் நாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் உலக சுகாதார மையம் கேன்சர் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகம் முழுக்க கேன்சர் பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

30% முதல் 50% கேன்சர் கேஸ்களை தொடக்கத்திலேயே தடுக்கும் வாய்ப்புகள் இருந்தும் கூட உலகம் முழுக்க கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா கண்டறிய சிடி ஸ்கேன் வேண்டாம்.. கேன்சர் ஏற்படும் அபாயம் உள்ளது.. எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கைகொரோனா கண்டறிய சிடி ஸ்கேன் வேண்டாம்.. கேன்சர் ஏற்படும் அபாயம் உள்ளது.. எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை

கேன்சர் அறிக்கை

கேன்சர் அறிக்கை

இது தொடர்பாக உலக சுகாதார மையத்தின் தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர் பூனம் சிங் அளித்த பேட்டியில், கொரோனா காரணமாக பல்வேறு நோய்களின் சிகிச்சை பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால் மற்ற நோயாளிகள் மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. கேன்சர் நோயாளிகளும், கேன்சர் கேர் சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேன்சர் நோயாளிகளின் உடல்நிலை தீவிரம் அடையும் நிலை ஏற்படுகிறது.

உலக சுகாதார மையம்

உலக சுகாதார மையம்

இதனால் கேன்சர் காரணமாக பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுக்க கேன்சர்தான் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 2020ல் மட்டும் 10 மில்லியன் பேர் உலகம் முழுக்க கேன்சர் காரணமாக பலியாகி உள்ளனர். தென் கிழக்கு ஏரியாவில் மட்டும் 2.2 மில்லியன் மக்கள் புதிதாக கேன்சர் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 1.4 மில்லியன் பேர் 2020ல் தென் கிழக்கு ஆசியாவில் கேன்சர் காரணமாக பலியாகி உள்ளனர்.

 கேன்சர் பாதிப்பு

கேன்சர் பாதிப்பு

அங்கு கேன்சர் பாதிக்கப்பட்ட 10ல் ஒருவர் பலியாகி உள்ளார். கேன்சர்களில் லங்க் கேன்சர்தான் அதிகமான மரணங்களை ஏற்படுத்துவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. லங்க் கேன்சர் மூலம் 10.6% சதவிகிதம் பேர் பலியாகி உள்ளனர். மார்பக கேன்சர் காரணமாக 9.4 சதவிகிதம் பேர் பலியாகி உள்ளனர். cervical பகுதியில் ஏற்படும் கேன்சர் காரணமாக 8 சதவிகிதம் பேர் பலியாகிறார்கள். லிவர் கேன்சர் மூலம் 6.6 சதவிகிதம் பேர் பலியாகிறார்கள்.

 வாய் பகுதி கேன்சர்

வாய் பகுதி கேன்சர்

வாய் பகுதியால் ஏற்படும் கேன்சர் காரணமாக 6.4 சதவிகிதம் பேர் பலியாகிறார்கள் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தென் கிழக்கு ஆசியாவில் இருக்கும் ஆண்கள் இடையே அதிகம் ஏற்படும் கேன்சர் வாய் மற்றும் இருதய கேன்சர் ஆகும். புகையிலை பாக்குகளை பயன்படுத்துவது , புகை பிடிப்பது ஆகியவைதான் இந்த வகை கேன்சருக்கு காரணம் ஆகும். கேன்சரை தடுக்கும் hepatitis B வேக்சின், முறையான cervical கேன்சர் பரிசோதனைகள், HPV வேக்சின், புகையிலை பொருட்களை தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மக்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

தென் கிழக்கு ஆசியா

தென் கிழக்கு ஆசியா

தென் கிழக்கு ஆசியாவில் அதிகம் ஏற்படும் கேன்சர்களில் Cervical கேன்சர் வகையும் ஒன்று ஆகும். இதை தடுப்பதற்கான செயல்பாட்டு திட்டம் ஒன்றையும் உலக சுகாதார மையம் செயல்படுத்தி வருகிறது. மக்களுக்கு இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கேன்சர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஆரம்ப சுகாதார மையங்களை வலுப்படுத்த வேண்டும். குழந்தைகளிடம் கேன்சர் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Recommended Video

    Breast Cancer Explained by Dr. Venkat P Senior Consultant - Surgical Oncology
    உலக கேன்சர் நாள்

    உலக கேன்சர் நாள்

    கேன்சரால் பாதிக்கப்படும் குழந்தைகளில் 60 சதவிகித குழந்தைகளை காக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2030க்குள் இந்த இலக்கை அடைய வேண்டும் என்று கடந்த வருடம் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலக கேன்சர் நாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் உலக சுகாதார மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    English summary
    World Health Organisation releases a report on Cancer cases in South East Asia on World Cancer Day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X