சளிக்கு கசாயம் குடிங்க.. ஆன்டிபயாடிக் எடுக்காதீங்க.. ஆபத்து! உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி அட்வைஸ்
சென்னை: உலக வரலாற்றில் 2020, 2021 ஆண்டுகள் யாராலும் மறக்க முடியாது. கொரோனா பெருந்தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இப்போதுவரை கொரோனா தொற்று, தடுப்பூசி மர்மம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா அதுகுறித்து விவரித்துள்ளார். முக்கியமாக ஆன்டிபயாடிக் அதிகம் எடுப்பதால் வரும் பிரச்னைகள் குறித்தும் அவர் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக், டயாபிடிஸ், ஸ்ட்ரோக் உள்ளிட்டவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
அந்த வைரஸ் உள்ளுக்குள் அவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதுவும் இரண்டு, மூன்று முறை வந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகம். பல மக்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் இப்படியாகிறது என்று நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. கொரோனா வைரஸால் தாக்கத்தால் தான் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கொரோனாவின் தாக்கம் இப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இருப்பினும் முன்பைவிட பாதிப்பின் அளவு குறைந்துள்ளது. தடுப்பூசி எடுத்ததால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. தடுப்பூசி குறித்து நிறைய ஆராய்ச்சி செய்துவிட்டோம். எந்த தடுப்பூசியும் 100 சதவீதம் பாதுகாப்பானது இல்லை. அனைத்து தடுப்பூசிகளிலும் 0.001 பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும்.
தடுப்பூசியால் 10 லட்சம் மக்களில் ஒருவர் பாதிக்கப்படலாம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஒருவரை தவிர மற்ற எல்லோரும் இதனால் பயனடைவார்கள். கொரோனா தடுப்பூசியாலும் 10 லட்சம் பேர்களில் ஒருவர் அல்லது இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு லேசான பாதிப்பு வந்திருக்கும். சிலருக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
மற்ற மக்கள் அதனால் பயனடைந்துள்ளனர். இல்லாவிடின் இந்த பெருந்தொற்று காலத்தில் இன்னும் பல மக்கள் இறந்திருப்பார்கள். உலக சுகாதார நிறுவனம் இந்த பெருந்தொற்று காலம் முடிந்துவிட்டதாக கடந்தாண்டு அறிவித்துவிட்டது. இப்போது அதன் பக்க விளைவு பாதிப்புகள் மட்டுமே இருக்கின்றன.
பாராசிட்டமல் மருந்தை காய்ச்சலுக்கு எடுத்துக் கொள்ளலாம். அதுவும் அளவாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பாராசிட்டமலை அடிக்கடி உட்கொண்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதில் ஆன்டியாடிக் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். சளி, காய்ச்சலுக்கு உடனடியாக ஆன்டிபயாடிக் உட்கொள்ளக் கூடாது. வைரல் காய்ச்சல், சளி என்றால் தானாகவே சரியாகிவிடும். அதுவரை காய்ச்சலுக்கு மட்டும் பாராசிட்டமால் எடுக்கலாம், சளி மட்டுமே எனில் பிற மருந்து அல்லது கசாயம் குடிக்கலாம். பாக்டீரியாவால் பிரச்சினை எனில் ஆன்டிபயாடிக்கை டாக்டர்களே பரிந்துரைப்பார்கள். மெடிக்கல்கள் மருத்துவர் பரிந்துரை இன்றி, ஆன்டிபயாடிக்குகளை கொடுக்காத நிலை உருவாக வேண்டும்.
அளவுக்கு அதிகமான ஆன்டிபயாடிக் உட்கொள்வதால் நோய்களை குணப்படுத்த மருந்து கொடுக்கும்போது வேலை செய்யாத நிலை உருவாகலாம். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இப்படி சிகிச்சை பலனின்றி, இறக்கிறார்கள்.கொரோனா காலத்தில் பலர் ஆன்டிபயாடிக் அதிகம் எடுத்ததால் கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டது. அதனால் ஆன்டிபயாடிக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
விலங்குகளால் ஏற்படக் கூடிய பாதிப்பு வரும காலங்களில் மேலும் அதிகரிக்கும். அதை எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு எளிதாக தற்காத்து கொள்ள முடியும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்துகிறோம். வெளிநாடுகளில் இப்போதும் மக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மாஸ்க் அணிகிறார்கள். மக்கள் முடிந்தவரை தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications